Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
தியாகம்
தியாகம்...
தத்தளித்தவர்களைக் காப்பாற்றி
பத்திரமாய்ப்
படகில் அனுப்பிவிட்டு,
நடுக்கடல் தீவில்
நீ தனியாய்த் தவித்தாலும்,
தீப ஒளியாய்த்
தெரிவது உன்
தியாகம்தான்...!


செண்பக ஜெகதீசன்...
தியாகம்..

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!

இனம் வாழ இவர் செய்தார் தியாகம்.!
இவர் எண்ணம் வாழ நாம் செய்வோம் யாகம்.!
உறவுகளுக்காய் உயிர் கொடுத்த உத்தமரே..!
உங்கள் 'உயிர்விலைக்கு' எது இங்கே ஈடாகும்?
உமைக்கருவில் சுமந்த தாய் வயிற்றில் நெருப்பெரியும்..!
அந்த நெருப்பினில் விடுதலைத்தீ மூண்டெரியும்.
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள்
ஆணிவேரான ஆலமரங்களே..!

வாழ்ந்தாலும் ம(வ)ரமாக...
வீழ்ந்தாலும் விதையாக
மாவீரன் மறைவதில்லை
மாவீரம் அழிவதில்லை

ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம்
இல்லை
தீயெரியும் தேசத்தில் தினம் தினம் உம் நினைவும் சேர்ந்தெரியும்.
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக்
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும்.
மணியோசை கேட்டால் மனமுருகும்...
மாவீரர் கல்லறையில் உயிர் கருகும்...
கண்களிலே கண்ணீர் கவி எழுதும்
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும்.


கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!

துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-அதில்
வாழும் நீங்கள் எங்கள் ஆதிமூலங்கள்.
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-அந்த
சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர்.
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர்
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர்.
கண்முன்னே கணப்பொழுதில் கரைந்து போனீர்-அந்த
காலனுக்கே கணக்கெழுதி வைத்துப்போனீர்.
மண்ணின்று மறத்தமிழர் மானம் காத்தீர்-பின்
விண் சென்றும் மங்காத விடிவெள்ளியானீர்.

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!

எவன் சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று?
கூட்டிவா அவனுக்கு உமைக்காட்டுகிறேன்.

சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில் உங்கள் 'கால்த்தடம்'
கத்தும் கடலோசையில் உங்கள் 'உயிர்மூச்சு'
காண்டாமணி ஓசையில் உங்கள் 'கணீர்க்குரல்'
மூண்டெரியும் தீயினில் உங்கள் 'பூமுகம்'
கல்லறையில் பூத்திருக்கும் பூக்களில் உங்கள் 'புன்னகை'
எவனடா சொன்னான் நீங்கள் எம்மோடு இல்லையென்று?

தாயகமே தாயாக
தலைவனே உயிராக
தமிழ் மானம் பெரிதாக
தம் உயிர் தந்தவர்கள்

எரித்தாலும் கடலினுள் கரைத்தாலும் மண்ணினில் புதைத்தாலும்
மாவீரன் மறைவதில்லை
மாவீரம் அழிவதுமில்லை

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா...!

இப்போது கொஞ்ச நாளாய் எங்கள் வானம் கறுத்துக்கிடக்கிறது.
எப்போதும் இல்லாமல் 'வெயில்' கொளுத்தித்தியும் எறியுது.
ஏறுக்குமாறாய் ஏதேதோ நடக்கிறது..!
எவருக்குமே விளங்கவில்லை..!
எங்கள் தேசம் எப்போதும் சுமக்காத 'சிலுவை' சுமக்கிறது..!
எங்கள் சனமும் எப்போதும் சுமக்காத 'வலி' சுமக்கிறார்கள்
எதிரி எம்மண் ஏறி ஏறி வந்து 'எல்லாம்' முடிந்ததாய்
எக்காளம் போட்டு 'இறுமாப்பு' காட்டுகிறான்.

கண்மணிகளே..!
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி-எங்கள்
கவலைகள் சொல்லி கண்ணீர் வடிக்க தவிக்கிறது மனசு...
என்ன நடக்கிறது எங்கள் தேசத்தில் இன்று?
எவனுக்குமே விளங்கவில்லை..!
யார் சொன்னது?
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே உமக்குத்தெரியும்.!
காற்றோடு கலந்திருக்கும் கருவேங்கைகளுக்குத்தெரியும்.!

கார்த்திகை பூ எடுத்து வாடா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போடா..!

'முடியும்' என நினைத்தால் மூன்று யுகங்களானாலும் காத்துக்கிடக்கலாம்
விதைத்து முடிந்ததும் 'அறுவடை' கிடைக்காது.
விடிந்து எழுந்ததும் 'கனவு' பலிக்காது.
விடுதலை என்பது 'உயிர்விலை' கொடுத்துப்பெறுவது.
விடுதலை என்பது 'நீண்ட நெருப்பாறு'
கடக்கும்போது கால் சுடலாம்.! தடக்கியும் விழலாம்.!
விழுவது என்பது வெட்கமல்ல.!
விழுந்து கிடப்பதுதான் வெட்கம்.!
எழுவது பெரிதல்ல.!
எழுந்து அடிப்பதுதான் பெரிது.!
உயிர்களை விதைத்துவிட்டு உலைவைத்து காத்திருக்கிறோம்
எங்கள் வானம் திறந்து மழை பொழியும்.!
எங்கள் வயல் செழிக்கும்.!
காய்ந்து கிடக்கும் எங்கள் 'பூவரசு' பூப்பூக்கும்.!
நம்பு உன்னை நம்பு
உன் தேசத்தை நம்பு
தேசத்தின் புயல்களை நம்பு...
நம்பிக்கை இல்லாதவன் நாற்பதடி தள்ளி நில்லு
நாளை பிறக்கும் நம் தேசத்தில்
நம்பிக்கை இல்லாதவனுக்கு இடமே இல்லை.!

இது கார்திகைமாதம்..!
கண்ட கனவுகள் பலிக்கும் மாதம்...!!!
கல்லறைகள் பூப்பூக்கும் மாதம்...!!!எத்தனை 'வலி' சுமந்தோம்?
எத்தனை 'உயிர்' கொடுத்தோம்?
எல்லாமே வீண்தானா?
இல்லை
கல்லறைகளுக்குள் தமிழனின் 'கனவுகள்' கருக்கொண்டு கிடக்கின்றன.!
சிந்திய குருதியின் சூடு தணியாமல் கிடக்கிறது.!
மனங்களில் மாறாத வடுக்கள் கிடக்கிறது.!
நாம் செய்வது வேள்வி-தியாகவேள்வி- நீண்ட வேள்வி.!
முடிவதற்கு மாதங்கள் ஆகலாம்.! வருடங்களும் ஆகலாம்.!யுகங்களும் ஆகலாம்..!!!
ஆனால்
தமிழன் செய்த வேள்வி வீணானதில்லை-அதைச்
சரித்திரம் சொல்கிறது.

அதுவரை....
நீ
கார்த்திகை பூ எடுத்து வா.!
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகள் காலடியில் போட்டுப் போ..!

தமிழ்ப்பொடியன்
தியாகம்...

வாங்கியவனின்
நன்மைக்காக
தன்னையே
பலி கொடுத்தது
ஆடு


அஷ்ரப்கஜ்ஜாலி, பரங்கிப்பேட்டை
தியாகம்

எத்தனைபேர்
மாண்டுபோனீர்..
அத்தனை சாவும்
ஓரிரு நாட்களில்
அர்த்தமற்றுப்போனதே
முள்ளிவாய்க்காலின் முடிவோடு,

எத்தனை உயரித்தியாகங்கள்?
ஒன்றா இரண்டா??
அரை இலட்சம் அல்லவா...

காற்றாகிக்
கரும்புலிகளாய்
வெடித்துச்சிதறினீர்
கடலோடு கடலாகி
நீராகிப்போயினீர்
பட்டினியால் வாடி
வதங்கிப்போயினீர்
எதிரியின் பிடியில்
நசுங்கிப்போயினீர்

எல்லாமே போயினவே...
என்னவென்று சொல்லி அழ
உங்கள் தியாகத்தை...
வெறும் வார்த்தைகள் போதாது...
ஐயோ...............

எதிக்கா, கனடா
தியாகம்

காந்தியின் தியாகம்
இந்திய சுதந்திரம்!
தெரசாவின் தியாகம்
மனிதநேய வளர்ச்சி!
பாரதியின் தியாகம்
கவிதைகளின் மறுமலர்ச்சி!
இராணுவ வீரர்களின் தியாகம்
இந்திய பாதுகாப்பு!


எஸ். சுமதி,
சேலம் (தமிழ்நாடு)
தியாகம்

தேகத்தை திரியாக்கி
தியாகத் தீபமேற்றினீர்
இன்று எம் தேசமே
நசமானதே தோழர்களே !!!

ஹரி
தியாகம்

உணர்ச்சிப் பிழம்புகளை விழுங்கி
உதிரத்தை முடமாக்கி
வெற்றுயிராய் எங்கும் உலவி
உந்து சக்தியில்லா இயந்திரமாய்...
சுதந்திரத்தை வெறுத்து
சுமைகளுக்குள் சுகம் கண்டு
எல்லோருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்து
மருகும் மனத்தோடு
தன்னையே தியாகம் செய்தவள்
அம்மா......


துர்கா, தமிழ்நாடு
தியாகம்...

அவளுக்கு அப்புறம்
மூத்தாள் பெத்ததே
மூணு இருக்கே!
கொஞ்சமாச்சு நெனைக்கிறாளா?
கரிச்சுக் கொட்டினா சித்தி!
.
எங்க போய் முட்டிக்க?
தலையாட்டியாவே மாறிட்ட
தகப்பன்!

அக்காவுக்கு என்னன்னு
புரியாம முழிக்குதுக,
கூடப் பொறந்ததுக!

நாதியத்து போய்ட்டா
வக்கத்தபய மவ!
.
தாயா ஆனா
தங்கமா வளத்தா
.
வழி இல்லாம ஒத்துக்கிட்டா
தங்கசிகளுக்காக!
தன்னையே தந்தா
ரெண்டாந்தாரமா!!!

தேனு, தமிழ்நாடு
தியாகம்

தியாகம் தியாகமென -காந்தி
தினமும செய்தார் யாகமென
யோகம் சிலருக் கதனாலே -அதனை
சொல்ல வந்தேன் இதனாலே
போகம் கருதி சுகம்தேடி-அவர்
புகுந்தார் அரசியியல் தனைநடி
தாகம் இன்னும் தணியவில்லை-தினம்
தந்திடும துயருக் குண்டோஎல்லை

பெற்ற விடுதலை பறிபோகும-அதைப்
பேணிக் காக்கும நெறிகூறும
கற்றவர் கூட ஏனோதான்-ஏதும்
கவலையற்றே வீணே தான்
மற்றவர் வேலையே பார்க்கின்றார்-கேட்டால
மனதைமுடி மறைக் கன்றார்
அற்றவர் வாழ்வே போராட்டம்-என
ஆனது ஆட்சி தேரோட்டம

எத்தனை காலம் இப்படியே-ஆள்வோர்
எடுத்து வைத்தால தப்படியே
அத்தனை வகையும் ஒன்றாக-சேரின்
அழிவும் வருமே நன்றாக
மெத்தனம் வேண்டாம் கட்சிகளே-இனி
மேலும் வேணாம் சாட்சிகளே
புத்தரைப் போல தெளியுங்கள்-நல்லோர்
போற்ற ஆடசியை அளியுங்கள்

புலவர் சா இராமாநுசம் அரங்ராசபுரம்
சென்னை 24
அம்மா .......... நாம் பிறக்கும் போது
உச்சரிக்கும் மொழி
உலகத்தோரின் பிள்ளையார் சுழி
அன்னை நம் கூட இருக்கும் தாய்

அ ... இருந்து அனைத்தையும்
சொல்லித்தருவாள்
அழும் போது அணைப்பாள்
அன்புடனும் பண்புடனும்
நற் பழக்கங்களை கற்றுத்தரும் ஆசான்

அள்ளிக்கொண்டு
கிள்ளிக் கிள்ளி சிரிக்க வைப்பாள்
சோறு ஊட்ட நிலாவிற்கே கூட்டிச் செல்வாள்
சிந்தனை கதைகளும் சொல்வாள்

நம் வலிகளை
தன் விழிகளில் தாங்குவாள்
சிறந்த உழைப்பாளியும் இவளே

நமக்கு ஏதாவது ஒன்று என்றால்
அவள் படும் பாடு சொல்லமுடியாது
பாசம் காட்டுவதில் தாயை
யாரும் வெல்ல முடியாது

மனிதர்களின் வேராய் இருப்பாள்
நம் இன்பங்களின்
தோழியும் இவளே
தியாகத்தின் உண்மையான இருப்பிடம்
அன்னையை விட உலகில்
எதுவும் தேவையில்லை
பெற்ற தாயை மறவோம்
அவள் கண் கலங்காமல் காப்போம்

அ.தேகதாஸ்
வானமகள் மட்டுமா
ஓலமிடுகிறாள் நம்தேசத்தில் - இல்லை
வல்லைமண் கூட
வாய் திறந்து அழுகின்றது
இது கார்த்திகை மாதம்
கரு வேங்கைகளின் காலம்
வாகை சூடிய
வரிப்புலி மறவர்
செந்தணல் மீதிலே
வந்து களமாடி
வெஞ்சமர் தனிலே
நெஞ்சினில் குண்டேந்தி
தலைசாய்த நேரமதை
நினைவேந்திடும் காலம்
மாண்ட வீரர்- தம்
உயிர் பெறும் வரம் பெற்றால்
மாலையிட்டு வரவேற்ப்பேன்
மாவீரர் உம்மை நாம்
கருங்கலியை வெட்டி சாய்க்க
கோடரிக்கு ஏது வீரம்
இது நம் மறவர் வாழ்த தேசம்
இதுவன்றி நம் தேசம் எதுவென்றாகும்?

கை.அகிலன்
21.11.2015
தியாகம்

எதிரில் வந்தேன்
எரிச்சலடைந்து விலகி நின்றாள்
எதிர் வீட்டுக்காரி
வெள்ளை புடவை விதவை என்பதால்
விவஸ்தையற்றவள்
என்னவர் எல்லையில் சிந்திய குருதியே
இவர்கள் நெற்றியில்
குங்குமம் என்பதை மறந்துவிட்டு
முறைத்து நிறக்கின்றாள்


வனபார்வதி.சி


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்