Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
காதல் போயின்...
காதல் போயின்...

சுழற்றி அடிக்கும்
சூறாவளிகளும்,
அதிரவைக்கும்
ஆழிப்பேரலைகளும்
அமுங்கிக் கிடக்கின்றன
இதயத்தில் மனிதனுக்கு..
காதல் வந்தால்
காணாமல்போய்விடும் இவை,
கண்மூடித் தாக்குகின்றன
காதல் போயின்-
காணாமல்போகிறான் மனிதன்...!


-செண்பக ஜெகதீசன்...
காதல் போயின்...

காதல் போயின் வாழ்வா...சாவா...?
எனக்கு சொல்ல தெரியவில்லை...ஏன்
எனில் அன்று சொல்லி நின்றீர் கண்ணிமைக்கும்
ஒவ்வொரு நொடியும்- என் நாமமும்
என் எண்ணமும் தான் என்று..ஆனால்
இன்றோ என்னை மறந்ததேனோ...?

ஆண்டுகள் பல கடந்தும் உம் முகம்
தெரியாமல் குரல் மட்டுமே தினமும்_என்
காதில் ரீங்காரமிட்ட வண்ணம் உள்ளது...இதை
நீர் அறிய மாட்டீர்
ஏன் காலம் உம்மை திசை
மாற்றி விட்டது.

ஒரு முறையேனும் என்னவனை ....
பார்க்க மாட்டேனா...?
என்ற ஏக்கத்துடன் உம் பேச்சின் நினைவுகளோடு
நிமிடங்கள்,மணித்தியாலங்கள்,நாட்கள்..
கிழமைகள்,மாதங்கள்,வருடங்கள் என்று பலவாய்...
உம் நினைவுகளோடு காத்தற் கடவுளாய்
காத்துக் கொண்டு இருக்கிறேன்.....
என்னவன் என்னைப் பார்க்க வரும் நாளை எண்ணி.

அன்று எம்மை நட்புக்களாய்
இணையத்தின் ஊடாக...பாதை
காட்டி சேர்த்து வைச்ச கணணி....இன்று
என்னை உம்மிடம் இருந்து பிரித்து வைச்சு..
அல்லும் பகலும் கண்ணீரில் நீந்த செய்து விட்டது.

உனக்காகவே உயிர் வாழும் உன்னவளை இந்தப்பிறவியில்
மறந்து விட்டால்..மறு
ஜென்மம் ஒன்றிருந்தால்..அன்று
வரை நான் உன்னவள் தான் புரிந்து கொள் என்னவனே.
காதல் போயின் வாழ்வா...?சாவா ...?


பூரணி,கனடா
காதல்போயின் சாதல்


'காதல்போயின் சாதல்' என்ற
கருத்தெல்லாம்,
காவியத்துக்கும், கதைகளுக்கும்தான்
பொருந்தும்.
காதலென்னும் புனித உணர்வை
கண்டவர்களும், மனதில்
கொண்டவர்களும்
கணக்கிலடங்கா எண்ணிக்கையில்
பாரிலுண்டே!
காதலின் தோல்வி
கல்லறைதான் என்றால்,
பரந்த இவ்வுலகினில்
பார்க்கலாமே எங்கெங்கும்!
வெற்றிகண்ட காதலையெல்லாம்
விளக்கவில்லை வரலாறு...
தோல்விகண்ட காதல்களை
தொகுத்துத்தானே
பரப்புகின்றன!
"காதல்" பற்றி கூறுகின்ற
காவியங்கள் அனைத்துமே
தோல்வியென்னும் சோகத்தை
சொல்வதால் வந்த வினை!

- கிரிஜா மணாளன்
திருச்சிராப்பள்ளி, (தமிழ்நாடு)
காதல் போயின் ...

பாவையவள் கன்னம்
பதியமிட்ட புன்னகை
பொன்கோர்த்த மனதின்
ஈசான மூலையில்
உணர்ச்சியுள் பரவி
கிளர்ச்சியின் மெய் கூட்டி
பூப்பெய்திருக்கும்

உதடு நழுவிய மொழி
உயிர் பற்றி ஏறி
இதய களஞ்சியத்துள்
இடம் பெயர்ந்து
காப்புரிமை பெரும்
சரீர வேதத்து
தூண்டு பொருள் அவள்
அகம் பூத்த மென்மையுள்
மகரந்தசேர்க்கை

ஒற்றை நேர் கோடு
புழுவின் பகுதி
காதல் தூரிகை
வளைகோடு வரைதலில்
வண்ணத்துப்பூச்சியின் முழுமை

அவளேழுதிய வரிகள்
இவனரிவின் பலம்
பத்திரண்டு காலம்
பதம் பட்ட கள்
குறிபேட்டில் முதல் அத்தியாயம்
குற்ற உணர்ச்சியின் குளுமை
இரண்டாம் பகுதி
இதயம் எழுதிய மௌனம்
பின் வரும் மூன்றில்
ரசிப்பின் முத்த ருசி
நான்காம் பாடம்
நழுவிய வெட்கம் நனையும்
அத்தியாயம் ஐந்தில்
இதழ்களின் ஆதிக்க ஈரம்
காதல் நன்னூல்
கருப்பு மை காவியம்

உறைந்து போன எழுத்துகள்
படிக்கிற ஆவல்
புரட்டிய நாட்கள்
புதிதாய் பல முறை
உயிர் சலவை பெரும்
மூச்சு வாங்கும் உணர்ச்சிகள்
ஆயிரம் அர்த்தங்கள்
அடுத்தடுத்து அவதரிக்கும்

புவியியல் கற்கும்
பூமத்திய ரேகை காதல்
வரலாற்று கோளத்து
விட்டம் காதல்
கணிதத்தின் கோணம்
இயற்பியலில் விசை
வேதியலில் கலவை
கணினியின் செயலி
எல்லாம்
அன்பின் அடக்கம்
காதலின் கசிவு
காப்பியங்கள்
அன்பின் வழியது
உயர் நிலை
காதல் வண்மை
மெய்த்துணை திண்மை

காதல் போயின் ...
போகும் காதல்
சாகும் காதல்
கடல் வழிந்த நாட்கள்
நிலம் கரைந்த மணித்துளி
உயிரற்ற புவியுள்
உடலில்லா உலகில்
இறுபட்ட மனங்களுள்
ஈருயிர் நெருப்பில்

தடை கண்டு
வலவை போதல்
அன்பிற்கில்லை
வீழ்ந்து மடிதல்
காதலின் பண்பு!

கொ.மா.கோ.இளங்கோ, இந்தியா
காதல் போயின்.....

தொடும் காதல், தொடாத காதல்,
கல்லூரிக் காதல், கடற்கரைக் காதல்,
கடிதக் காதல், குறுஞ்செய்திக் காதல்,
எவ்வழிக் காதலாயினும்
இயலாதுபோனால் துன்பம்தான்!
காதலிக்க நினைத்து,
காதல் என்னை காதலிக்க மறுத்ததால்
காதலிக்கவில்லை நான்!
காதல் போயின் சாதல் என்பது
காவியங்கள் கூறும் பொய்யே!

- எஸ். சுமதி, சேலம், தமிழ்நாடு.
காதல் போயின்.......

சுற்றிச் சுழலும் பூமியெங்கும்
காதல் கொண்ட மனது......
முற்றிலும் 'காதல் போயின்.....'
மூழ்கி அழியும் இவ்வுலகு!

- சாத்துக்கூடல் இளையராஜா,
தமிழ்நாடு,
காதல் போயின்...

காதல் போயின்....என்ன,
இலக்கு அழிந்துவிடாது
ஆனாலும்,அழியவில்லை
என் இலக்கு நோக்கிய பயணம்!
ஆம் பெண்ணே! நம்
காதல் போயின் என்ன,
இன்றும் உன்னுடன்
வாழ்ந்துகொண்டேயிருக்கிறேன்!
என் கனவிலும்
உன் நினைவிலும்
எண்ணற்ற வெற்றியின் இலக்குகளை
உருவாக்கியபடி!

- காமாட்சி சுந்தரம்,
அய்யம்பாளையம், தமிழ்நாடு
காதல் போயின்.......

காதல் பிரசவிக்கும் இடமெங்கும்
பூக்களின் நாவில்
இரத்தத்தின் வடுக்கள் நிறைந்திருக்கும்.
காதல் வண்டுகளின் சுவாசப்பையில்
மூச்சு வாங்கி
முணகிக்கொண்டிருக்கும்.
புதிய காதலின் புதல்வர்கள்
முளைத்துக்கொண்டேயிருப்பார்கள்.
தெறித்து விழும் இரத்தச் சுடுகாடு
எங்கும்!
காதல் போயின்
காதல் ஆவதில்லை சாதல்,
காதல்!

- வாலிதாசன், முகவை (தமிழ்நாடு)
காதல் போயின்.....

ஒன்றுமே இல்லையோ உலகில்?
ஆண் - பெண் காதலில்
உயிர்கள் உருவாகிறது,
ஆண்டவன்மீது காதலில்
ஆன்மீகம் உருவாகிறது,
ஆசிரியர்மீது காதலில்
கல்வியறிவு உருவாகிறது,
அடுத்தவர்மீது காதலில்
நட்பு உருவாகிறது,
கலைகள்மீது காதலில்
காவியம் உருவாகிறது,
ஆதலின்,
காதல் என்னும் உணர்வு போயின்
ஒன்றுமே இல்லை உலகில்!

- ஜே.எம். புதுயுகம், பண்ணாந்தூர், (தமிழ்நாடு)
காதல் போயின்…

காதல் போயின் சாதலென்பதும்
வாழ்வை வெல்ல
காதல் கொள்வதும்
கார் மேகத்தை கண்ணுக்குள்
குடிவைத்திருக்கும்
இதையங்களின் சுளர்ச்சியே

கண்ணும் கண்ணும்தான்
கலக்குது நியமே
காதல் வைரஸ்சுகள்
இதையக் கீற்றை அறுப்பதும்
நியமே
உதையம் தொலைந்ததென்று
விழியை மூடிவிடாதீர் காதலரே
காதல் என்றும் இறப்பதில்லை

இணைய வைரஸ்சிலிருந்து
இதையத்தை காத்து
சாதலை வென்று காதலை
வாழவைப்போம்
காதலரே விழித்தெழுங்கள்.


வல்வை சுஜேன், சுவிஸ்
காதல் போயின்

ஒருமுகப்பட்டுக்கிடந்த
என் பறத்தலை பந்தாடுகிறது
தனித்தலைதல் கிளர்த்துமிந்த
மிகு துயர்.
ஏகாந்தத்தில் மோதிக்கொண்டதில்
சிராய்ப்புகள்
என்னாழ் மனத்தில்.

தலைவி..
உனக்கொரு சேதி!

இணை நீங்கிய
ஒரு பறவை
சந்தியாக்காலங்களில்
தானடைவது
கூட்டை அல்ல
முட்படுக்கையை!

-ப.தியாகு
கோவை
காதல் போயின்

காதல் போயின் சாதல் நன்றே-இது
கதையல நாட்டில் நடப்பதாம் ஒன்றே
மாதர்கள் சிலரும் காதலர் சிலரும்-இன்றும
மடிவதை தினசரி செய்திகள் பலரும்
வேதனையாக வெளிவரக் கண்டே-பெற்றவர்
வெந்துப் புண்ணாய் மாய்வதும் உண்டே
தீதாம் இதனை இளையோர் கருதி-உடன்
தெளிந்திடின் வாரா உயிருக் கிறுதி


புலவர் சா இராமாநுசம்
என்னப்பா இதெல்லாம்

கண்ணும் கண்ணும் செய்யும் அரசியல்-காதல்;
உயிரும் உடலும் செய்யும் போர் -காமம்;
பட்டாம் பூச்சியின்பார்வையில்
பயணிக்கின்ற காதல் புனிதப்படுகிறது.
மலரின் மவுனமும் அர்த்தப்படுகிறது
சிரிப்பை சுவாசமாக்கி வாழும்
சோலைவனத்தின் புருவத்தில் ஒளிந்துபேசும்
வகிடு எடுத்த கதிரவனின்
காதுகளில் விளாமல் இல்லை
பனித்துளியின் பவ்விய வெட்கம்।

வெறித்துப்போன நிழல்களின்
ஊஞ்சல் மனதில்
காற்றை நிரப்பிக்கொண்டு
கனவில் நுழைந்து
சோலைவாசமெல்லாம்
சேலை நெச நெடியே மிளிர்கின்றன।

ஆனந்தத்தில் குதிக்கின்ற‍‍-
எனது கண்கள்
சொல்லிக்கொள்வதில்லை எவரிடமும்।
குழப்பத்தில் மூழ்கி
திகைத்து நிற்கிற‌என்னிதயம்
பேசுவதில்லை
முன்பைப்போல் உன்னிடம்
காரணம் என்னவென்று அறிவாயோ?

கவிஞர்வாலிதாசன்,தமிழ்நாடு
காதல் போயின்

மௌன நேசிப்பிற்குள்
தடுமாறும் மனச்சிதறல்கள்
பேசா மொழிகள்
தண்டனைக்குள்ளாக்கப்பட்டன!
நெருடலும் தயக்கமும்
திசை அறியா பயணத்தில்....
உதிரத்தின் அணுக்களுக்குள்
மறைத்து வைக்கப்பட்ட நேசம்
உருமாறும் விழித்திரையில்....துர்கா,தமிழ்நாடு
காதல் போயின்.....

பிடித்தே பின்னால் சுற்ற
காரணம் அடுக்கடுக்காய் சொல்லியும்
முடிவாய் ஒன்று சொல்லமுடியாமலே
காதல் தேடலே வாழ்வின் வனப்பு
பின்னிப்பிணைந்து சிறப்பு
காதல்போயின்.

கு. லட்சுமணன், புதுப்பட்டினம்
(தமிழ்நாடு)
காதல் போயின்....

இறைவனின் படைப்பில்
இன்பவுணர்வு இக்காதல்! - இது
மறைந்திடும் காலம் வந்தால்,
மனிதகுலமே சாதல்!

இருமனங்களின் சங்கமம்தான்
இக்காதல்...இடையே
இன்னல்கள் புகுந்திடின்
இறந்திடுமே காதல்
காதல் காதல் காதல்!
காதல் போயின்
சாதல்! சாதல்! சாதல்!

-சி. கலைவாணி, வேலூர்
(தமிழ்நாடு)

காதல் போயின்....

காதல் காதல் காதல் என்று
காதல் கண்டுமாயும் பெண்ணே
காதல் போயின் சாதல் என்றால்
காற்றுக்குலகில் வேலை இல்லை

காதல் கண்டு தோற்கும் மாந்தர்
காணுமுலகில் மாளச் சென்றால்
ஊதல் இன்றி உயிர்கள் இன்றி
ஒற்றை உலகு சுத்தும் வீணில்

தேனை உண்டு தித்திக் காமல்
தீயை உண்ணத் தேரும் பெண்ணே
போனால் தேகம் வாராதென்று
புரியாதவளே வருந்தாய் இன்று

தாகம் கொள்ளல் தேகக்குற்றம்
தாங்கா, ஆயின் மனதே நோகும்
நாகம் கக்கும் நஞ்சைப்போலே
நாளும் விரகம் தேகம்கொல்லும்

ஆகக் காதல் ஒன்றே உலகின்
ஆகிக் கொண்ட இன்பமில்லை
போகப்போக மனமே யாறிப்
புதிதாய் வாழ்வு பெறலாம் பெண்ணே

மோதல் கொண்டு முனையும் வாழ்வில்
மூச்சை நிறுத்த முயலாதென்றும்
காதல் போயின் வாழ்வை வென்று
காலம் யாவும் காண்போம் நன்று

கிரிகாசன்
காதல் போயின்...

இரண்டு ஆன்மாக்களூக்கு இடையில்
பேசப்படும் இரகசியமொழிதான்
காதல்!
இரகசியம் தகர்ந்து இன்னல்கள் நேர்கையில்
இருமனங்களுக்கிடையே மோதல்!
காதல் போயின் சாதல் என்னும்
கருத்தினை ஏற்போர் சிலர்தான்..
கடைசிவரையிலும் ஒரே நினைவோடு
வாழ்ந்திடும் காதலர் பலரே!

- டி. சுபத்ரா, சேலம்
(தமிழ்நாடு)
காதல் போயின்

காதல் போயின் சாதல் இல்லை
காதல் என்றும் நினைவுகளாய்....
நம்மோடு ஊடாடி கொண்டேயிருக்கும்
நெருடலாய் நிந்திக்கும் ஒவ்வொரு நொடியும்
நேசிப்பின் உண்மையை நீ அறியும் போது...
நேசித்த நெஞ்சத்தை மறக்க முடியா
மீள் தவிப்பில்
சென்று கொண்டேயிருக்கிறது
நெஞ்சறைந்த கணங்களோடு நாளும்
இழந்து போன காதலை
மீண்டும் தேட நினைக்கிறேன்
இலையுதிர் பருவத்தின் இலையைப் போல
இருப்பற்று இருக்கிறது அதுவும்
பிடிப்புக்குள் இருக்கும் போது
பிணக்கத்தோடு இருந்த நாம்
பிரிவுகளின் போது உணர்கிறோம்
உண்மையின் நேசத்தை
வார்த்தைகள் வெறுமையில்
பேசினும் வலிகள் எண்ணவோ
நெஞ்ச்த்திற்கு மட்டுமே!


வாசுகி,
தமிழ்நாடு.
காதல் போயின்

மூச்சடங்கி போனாலும்
காற்றோடு கலந்தே
உயிர் வாழும்..

உயிர் வாழும் வரைக்கும்
உன் நினைவோடு
கழியும் எந்நாளும்

போனாலும் வந்தாலும்
காதல் ஒன்றே உயிராகும்..!
காதல் போயின்
கவிதையாய் வாழும்...


பாரதிமோகன்
உந்தன் ஓர் வார்த்தையால்
நீ சொன்ன ஒரு வார்தையே
உன்னிடம் இருந்து என்னை பிரித்து விட்டது
உன்னை மறக்கின்றேன் என்று சொல்லி
உன்னை விட்டு பிரிந்தேன்
எல்லாம் உந்தன் ஓர் வார்தையால்
உன்னோடு பேச இனி என்னிடம் வார்த்தை இல்லை
என்று சொல்லி உன் தொடர்பை துண்டித்தேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உன்னை மறந்து விட்டேன்
என்று சொல்லி
உந்தன் நினைவுகளுடன்
தினம் தினம் மரணிக்கின்றேன்
உந்தன் ஓர் வார்த்தையால்
உனக்காய் உன்னை விட்டு நான் பிரிந்தாலும்
என்னால் உன்னை விட்டு பிரிந்து போக முடியவில்லை
உன் இன்பத்துக்காக உன்னை விட்டு போகின்றேன்
உன்னோடு நட்போடு என்றும் இருப்பேன்..

kethees
காதல் போயின்...


அறையெங்கும் புன்னகைகளை
விதைத்து விட்டு செள்றிருக்கிறாய்
காற்றெங்கும் உனது இனிய பாடல் ஒலிக்கிறது
தேனீரில் சீனிக்கு பதிலாக அன்பை கலக்கவும்
வரவுகளில் வசந்தங்களை நிறைக்கவும்
உன்னால் மட்டுமே முடியும்
வருபவர்கள் உன்னை தேடிக்கொண்டிருக்கிறார்கள்
நீ என்னுடன் இருப்பதான கனவில் இருக்கிறேன்
ஒன்று நிகழ்ந்திருக்கிறது என் கவிதைகளை காணவில்லை

வேலணையூர்-தாஸ்
<காதல் போயின் ???
காதல் போயின்
என்னவாகும்??
ஒன்றும் ஆகப்போவதில்லை.....
ஆம்!! ஒன்றும் ஆகப்போவதில்லை!!
உடனே புதிதாய்
மற்றொரு காதல்
மலர்ந்து விடுகிறது....
ஏனெனில் - ஏதோ
ஒரு எதிர்பார்ப்புகளுடன் தானே
இன்றைய காதல்கள் மலர்கின்றன???

பி.தமிழ் முகில்
காதல் போயின்...
---------------------------

உயிரில் உரைந்தவனே
காதல் போயின் என்னடா
என்னுள் நீயும் உன்னுள் நானும் இருக்கும் போது.
காதல் போயின் சாதல்
அது பழங் கதை.
நான் பிரிந்து உன்னை வாழ வைப்பேன்
இது புதுக் கதை

-ஜெனி காதல் லதா
இலங்கை


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்