Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
நீயா நானா?
நீயா நானா

நீயா நானா விளையாட்டே-தேர்தல்
நெருங்க நெருங்க தமிழ்நாட்டில்
காயா பழமா விளையாட்டும்-அந்தோ
கண்டோம இந்த தமிழ்நாட்டில்
தாயா பிள்ளையா இருந்தாரும்-இங்கே
தனியாய் தனியாய் பிரிந்தாரும்
வாயா போயா விளையாட்டும் -மேலும்
வளரந்து நாளும் களைகட்டும்

மட்டைப் பந்து விளையாட்டே-அது
மட்டுமா சிறந்த விளையாட்டே
திட்ட மிட்டே ஆடுகின்றார்-பொருள்
தேடிட சூதையும் நாடுகின்றார்
வெட்ட வெளிச்சம் ஆனபின்பும்-எதற்கு
வீணே நீயா நானென்றல்
இட்டம் போல ஆடட்டும் -இனி
எப்படி யேனும போகட்டும்

எங்கும் எதிலும் இதுவேதான்-உலகு
எங்கும் காணல் இதுவேதான்
பொங்கும் உணர்வே இதுவேதான்-தினம்
போட்டியில் பார்ப்பது இதுவேதான்
தங்குத் தடையே இல்லாமல்-நாளும்
தயங்கி எதுவும் சொல்லாமல
இங்கே நானும் எழுதுவதும்-என்னுள்
இருப்பது நீயா நானன்றோ

புலவர் சா இராமாநுசம்
நீயா, நானா?

முற்றுப்பெறாமல்
தொடர்ந்துகொண்டேயிருக்கிறது
நீண்ட விவாதம்.
"வேரோடு வெட்டிச் சாய்ப்பதே
வேலை" என்று மனிதனும்,
வெட்டுப்பட்டபோதும், உருமாறி
உனக்கே உபயோகமாய்
உயிர்விடுவேனென்று மரங்களும்
பிடிவாதமாய் இருந்தபோது!


-சுகா, சென்னை (தமிழ்நாடு)
நீயா நானா...

விளையாட்டாகிவிட்டது
வாழ்க்கை இப்போது..
நீயா நானா என்பது
நிரந்தரமாகிவிட்டது..
போட்டியில் வெற்றிதருவது
பொறாமையில் பொய்த்துப்போகிறது..
காதல் களத்தில்
கரந்து நிற்பது
தேர்தல் காலத்தில்
தெருவுக்கு வந்துவிடுகிறது..
யாரோ அரியணை ஏற
இரையாகிப்போகிறாயே இளைஞனே...!

-செண்பக ஜெகதீசன்...
நீயா நானா...

தினம் தினம்
மாறும் கூட்டணி!
புதிது புதியதாய்
வெளிவரும் அறிக்கைகள்!
இலவசங்களாய்
தேர்தல் அறிக்கைகள்!
எதையும்சொல்லி..
எதையும் செய்து..
பிடிக்கவேண்டும்
அரசாட்சி!
போட்டிகள் எதுவும்
கட்சிகளில் இல்லை!
பொதுமக்கள்
பணத்தை
பொறுக்கி தின்பதில்தான்
மாறுகிறது கூட்டணி !

-தங்க ரமேஷ்.பாலி
நீயா? நானா?

நீயா? நானா என்ற போட்டி
நிலைத்துவிட்ட சமூகம் இது!
அனைத்து இன மக்களுக்கும்
அவலமில்லா வாழ்வுதர
போட்டியிடும் தலைவர்கள்
புறப்படத் தயாரில்லை!
கள்ள ஓட்டில் பதவிபெற்று
கணிசமாக சம்பாதிக்க
கனவுகாணும் காலத்தில்
கரிசனமில்லா மனிதர்களாய்!

நீயா நானா போட்டியால்
நிர்மூலம் தான் சனநாயகம்,
ஓயாத பிரச்சினைகளால்
ஒடுங்கி நிற்கும் மக்களினம்!

- கிரிஜா மணாளன், திருச்சிராப்பள்ளி
(தமிழ்நாடு)
நீயா நானா?

அவையில்,
நிகழும் மௌனத்தின்மீது
ஊர்கின்றன நாழிகைப்பாம்புகள்

வேண்டிப்பெறுவதாயில்லை பரதனும்
ராமனின் பாதுகைகளை

திருவாய் மலர்ந்து
பணித்தான் ஸ்ரீராமன் :

தம்பி லக்ஷ்மணா..

புகும் வனத்தையுமே
ஆட்சி புரிவோம் நாம்
நாடெதற்கு?

வில்லம்புகள் நீக்கியத்தோளில்
பெயர்த்த இந்த அரியாசனம்
சுமந்திடுக!

-ப.தியாகு
கோவை
நீயா? நானா?

நீ, நானென்பதழித்து
நாம்
இரண்டற கலந்திருக்கும்
நாட்களில்
ஒரு நாளிது

நான் முன்னிற்க
என் முட்டாள் தோழியொருத்தி
சொல்கிறாள்
கண்ணாடியில் தெரிவது
என் முகம் என

- ப.தியாகு,
கோவை

நீயா? நானா?

உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
உயிராக உறைந்து கிடக்கையில்,
தலைதூக்கும் தன்முனைப்பை,
பனிமூட்டமாய்ப் பரவும்
கோப அலைகளை
குழிதோண்டிப் புதைப்பதில்
தலைநிமிர்கிறோம்,
நீயும் நானும்!

- முத்துவிஜயன், கல்பாக்கம்
சென்னை, (தமிழ்நாடு)நீயா? நானா?

செல்வாக்கும் சொல்வாக்கும்
நீயா நானா என்று போட்டியிடும்
தேர்தல் சந்தையில்
ஏமாறும் மக்கள் கூட்டம்!
களைகட்டுகிறது
அரசியல் வியாபாரம்
நிலைபெறுமா எங்கள்
நித்திய வாழ்வென்று
நித்த்மும் நீங்காத
தலைவலியோடு மக்கள்!

- எஸ். சுமதி, சேலம்
(தமிழ்நாடு)நீயா? நானா?

தோற்றுப்போவது நானென அறிந்தும்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
உன்னுடனான போட்டி.

இன்றைக்கு தோல்வி என்பக்கமெனினும்
வெற்றியை நோக்கித் தான் இருக்கிறது
எனது முயற்சியின் முகாந்திரம்.

சுழற்றப்படும் சாட்டைகளால்
சரிபவர்கள் ஆயிரமாயினும்
தொடர்ந்தவாறிருக்கும்
இயலாமையை தகர்க்கும்
நம்பிக்கை தோய்ந்த எனது முயற்சிகள்


சுவாரசியம் மிகுந்த‌
இவ்வாழ்க்கை விளையாட்டில்
இறுதிவரை காத்திருக்க தேவையேதும் இல்லை
வெற்றிக் குறித்து அறிய.

தொடர்முயற்சியின் விளைவே
விரைவில் முடிவை அறிவிக்கக்கூடும்
வெற்றி பெறுவது
தொடர்முயற்சிகளால் ஓடும் நானா?
விதியெனும் பெயர்கொண்டு மனிதர்களை
துரத்தும் நீயா? என.
நீயா, நானா?

ஆனாலும் இது
அழகல்ல நமக்கு

நீ
வசிப்பது
வாசிப்பது
சுவாசிப்பது
எல்லாமே எனக்காகத்தான்
என்றவளே!

கல்யாணமானதும்
எதற்கெடுத்தாலும்
கச்சை கட்டி நிற்கிறாயே
நீயா, நானா என.
நீயா? நானா?

முதுமைப்பருவ பெற்றோரின் உறவை
முறித்துக்கொள்வதிலேயே
முனைப்பாயிருக்கும் பிள்ளைகளின்
காலம் இது!
பெற்றோரைப் பேணுவதிலும்
பிள்ளைகளிடையே போட்டா போட்டி.....
நீயா? நானா? என்று!

போட்டியின் இடையில் சிக்கி
பொருமி அழும் பெற்றோர்கள்
வீட்டிலிருந்து விரட்டப்பட்டு
வேதனையோடு
முதியோர் இல்லங்களில் இன்று!


- சி. கலைவாணி, வேலூர்
(தமிழ்நாடு)
நீயா, நானா?

1.இயல்பு
பந்தலிட்டுப் படரவிட்டேன் இருந்தும்
தூக்கில்லிட்டுத் தொங்குகிறது
திராட்சை.

2.காண்கிறேன் காதலியை.
சீரும் காற்றுடன் மழை
சில காலதிக்குப் பிறகு
நீ வந்தாய்
உன் அண்ணனோடு.

3.இரு மனம் பார்த்தல் (பெண் பார்த்தல்)
கார் முகில்லில் மறைந்த
நிலவு
நான் உன் முகம் பார்க்கிறேன்
நீ மண் பார்க்கிறாய்.

க.சம்பத்குமார் - உடுமலை
நீயா நானா!

சுய நல முற்றுகைக்குள்
சிக்குகையில் ...
பதிவில்லாப் பிறப்பு
நான்.....
போட்டியும் பொறாமையும்
ரகசியக் கூட்டாளிகள்....
இயலாமையின் இருப்பு
கேள்விகளாய் விரிகையில்
முளைப்பது நீ...
இந்த நானும் நீயும்
நீண்ட நாள்
நிலைக்காது களை
எடுத்து வாழ்தல்
ஒன்றே நல் வாழ்வு...

தம்பையா தயாநிதி
நீயா நானா..

நீயா நானா போட்டியால்
நிர்மூலானது தமிழரின்
நீண்ட விடியல்
மாண்டு போனது
எண்ணிக்கையில்லாத
தமிழ் உயிர்கள்..
கண்டவன் கால்
நக்கும் சிறு கூட்டம்
சிந்திக்க மறந்ததால்
சிதைந்தது சிறுத்தைகள்..
வலுவிழந்து போகவில்லை
வருவான் தமிழ்த் தலவன்
தருவான் தமிழ் ஈழம்..
நீயும் நானும் நிட்சயம்
நீர்க் குமிழியவோம்.
இதுவே உறுதி..

தயாநிதி..
நீயா நானா ?

துல்லிய திறமை தேர்ந்தெடுப்பு
நுண்ணிய நடிப்பு பயிற்றுவிப்பு
நாடகமாய் கிரிகெட்.. சூதாட்டம்.
நாட்டுப்பற்றில் விளையாடும் நேயர் விருப்பம்.

ஏமாற்றும் எதற்கும் ஏராள சம்பளம்!
அதிலும் அரசின் ஆசியிருந்தால் ?
‘எதற்கும் வேண்டும் திறமை கொடுப்பினை’
எனும் மக்களின் ஆசிர் வாதங்களோடு.

சிலர் சிரமப்பட்டு நட்பை வளர்ப்பது
உயிர்விட்டு நாட்டை நடத்துவது
சுலபமான காரியமா என்ன?
உண்மையில் -
உண்மை தெரியாமல் மாட்டிக்கொண்டு.

இது புரியாமல் போட்டிபோறாமைகளோடு
அடிதடிகளுடன் அடித்தட்டு
மனஉளைச்சல்களுடன் இடைத்தட்டு
உருவாக்கும் இயந்திரங்களாய் உயர்தட்டு.

இப்போட்டிகளேதுமின்றி
நான். நான்.. நானே என்று
அனைவரின் மனதில் அமைதியான ஆட்டத்துடன்
ஆசை தீமை.
அததர்க்கு ஏற்றவர்களை தேர்ந்தெடுத்து
அவர்களோடு மரிக்கும்வரை வாழும்
ஆடம்பர தீமை.
மனித இனத்தை அழிப்பதை மகிழ்வென கருதும்,
கீழ்த்தரமான கொலைகாரத் தீமை
என விதவிதமான வடிவங்களில்
அடிமைத் தீமைகள்.

கெடுத்து கெடுக்கவைத்து அழித்து அழிக்க வைத்து
அகப்பட்டால்!
எத்தனை முறை அடிபட்டு அசிங்கப்பட்டாலும்
வீராப்பாய் கௌரவம் பேசும் குடிகார கேவலமாய்
திறமையற்ற ஒரு தீமை.
ஏய்த்து குழிபறித்து நட்டாட்றில் விட்டு
காட்டிக்கொடுத்து கழுத்தறுத்து கை கழுவி
மறுதலித்து மேன்மேலும் ஏய்க்க முயன்று
கையும் மெய்யுமாய் கண்டுபிடிக்கப்பட்டால்
தற்கொலை படைபோல் சாகடித்து சாகும்
திறமையுள்ள ஒரு தீமை.
பொதுவாய்
வலிய தீமையிடம் தோற்கும் எளிய தீமை.
தன் வாழ்வின் இலட்சியமாய்
பாவத்தின் சம்பளத்தை மனிதர்க்கு பெற்றுத் தரும் பொது சேவையில்,
மனிதத்தை ஆங்காங்கு அழவைத்துக்கொண்டு.

அழகு தீமையின் ஆசை பேச்சை நம்பி
நீயா நானா? தொடங்கி
கண்டித்து தண்டித்து
தனக்கென்று வரும் போது
மறைக்க சரிசெய்ய மேலும் செய்ய, மறுதவறு.
முடியாத பட்சத்தில்
சண்டைக்காரனோடு சமரசம் அவனுக்கு சலுகை.
எதற்கு வம்பு,
தனி குடித்தனம் தனி வியாபாரம் தனி கட்சி போல
ஒப்பந்தங்களாக புதுப்புது பிரிவினை உத்திகள்
பார்ப்தற்கு பொதுநலம் போல்
சம்பந்தப்பட்டவர்க்கு நட்டமில்லாமல்
பல்வேறு முகமூடிகள் போர்த்தி
அவர்கள் அப்படி இவர்கள் இப்படி என்று
ஆண் பெண் மொழி மதம்
இனம் நாடு அது இது என
எத்தனை முடியுமோ அத்தனை
தீர்வுக்கான தற்காலிக கண்டுபிடிப்புகள்.
போதாதென புதிது புதிதாக
எளியவர் வலியவர் இருப்பவர் இரப்பவர்
ஆக்குபவர் அழிப்பவர் காப்பவர் கலைப்பவர்
என்று நீட்டிக்கொண்டே!

ஆரம்பத்திலேயே தவறை ஏற்று
திருத்திக்கொண்டிருக்கலாம் சிறு தண்டனையோடு.
எதிர்கால சந்ததிகளுக்கு கொடுந்தண்டனைகளை விட்டுச்செல்லாமல்.
இலவசமாய்
கிடைத்துக் கொண்டிருந்தவைகளுக்கு
விலைகளை ஏற்றிக்கொண்டு
போதாது போதாதென கூட்டிக்கொண்டு.

கடைசியில்
எதிரியை இனமும் இடமும் காண தெரியாமல்
இறைவனுக்கு பயப்படுதல் போல்
தீமையை வெறுப்பது போல்
நாடகத்தில் நடிக்கும் போலிகளாய்
நிஜத்தில் நாம்.
பசுத்தோல் போர்த்திய புலிகளாய்
மனிதப் போர்வைக்குள் பணம் -
பொருளாய் முதலாய் மண்ணாய் பொன்னாய்
பெண்ணாய் நாம்.

ஒன்றாய் பத்தாய் நூறாய் ஆயிரமாய்
கோடி கோடியாய் கொத்துக்கொத்தாய்,
சண்டைகள் போர்கள்
கலவரங்கள் குண்டுவெடிப்புகள்
விபத்துகள் இயற்கை சீற்றங்களென
வஞ்சகக் கொலைகளுக்கு ஆளானபடி,
சுயநலமாய் பிழைக்க வேண்டி
இயற்கையின் சட்டதிட்டங்களுடன்
அதன் நீதி நியாயங்களுடன்
போர் செய்ய, மரணிக்க தயாராக இருந்தபடி,
நீதி நியாயமா? பிழைக்கத்தெரியாதவன்
உண்மை ஒழுக்கமா? சாகப்பிறந்தவன்,
உண்மைகளாய் உளரல்களை உலவவிட்டபடி,
நேர்மையால் வரும் வலியை எதிர்நோக்க விரும்பாமல்
உண்மை மனநிறைவு விசயத்தில்
உழைக்காத ஊதிய விரும்பியாய்
மனதில் மறைந்திருக்கும் முட்டாளின்
தீய கட்டளைகளுக்கு அடிமைகளாய்
உண்மையான அப்பாவித்தனமான அறியாமையோடு
நாம்.

மறுபுறத்தில்,
சேர்ந்த பக்கமே பந்தை அடிக்கவைக்க
தலைமையின் ஆணையை நிறைவேற்றும்
விளையாட்டு தீமைகள்.
தெரியாமல் தெரிந்து கொள்ள விரும்பாமல்
பொழுதுபோக்குகளில் நாம்.

உண்மையில்
நன்மைக்கும் தீமைக்குமான போட்டியில்
தீமைக்கு ஆதரவாக
நீயா நானா என்ற போட்டியில்
நாம்.

அழிக்கும் தீமை அழியும் விவரமும்
புகார் கொடுக்கப்பட்டு நீதி இருந்தால்
சட்டதிட்டங்களுக்குட்பட்டு போர்செய்து
நமக்காக சாகவும் தயாராக
மரித்தாலும் மீண்டும் எழும் நன்மை காத்திருப்பதை
தெரிந்து அறிந்து புரிந்து உணர்ந்து கொள்ள
தயாரா நாம்,
நீயா நானா என்று ?

நன்மையை விட புனிதமெனப்படும்
காதலுக்கே காலமிருக்கும் போது
‘நல்லதுக்கு காலமில்லை’யென்ற வார்த்தைகளை
அனிச்சை செயலாய் அள்ளிவீசாமல்.

ந.அன்புமொழி
சென்னை.


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்