Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
வங்கப்புயல் ஏற்றிய சுமை
வங்கப்புயல் ஏற்றிய சுமை

விண்ணைத் துளைத்துக் கொண்டே
வழியைச் சிதைத்துக் கொண்டே
வந்தது பார் அந்தப் புயல்
வங்கப்புயலது ஏற்றிய சுமை
வருத்துது இதயத்தை சோகத்தினாலே

இயற்கை என்ன்னும் அந்த அன்னை
இப்படி ஏனொரு உருக்கொண்டாள்
இரக்கம் சிறிதும் அற்றே ஏன் தான்
அரக்கனைப் போலே அழித்திட்டாள்

ஒன்றா இரண்டா உயிர்கள் போயின
ஆயிரமாய் அன்றோ அழிந்தே போயின
அகிலத்தின் மடியில் அழுகின்றா குழந்தா
ஆயிற்றோ பாவம் இந்த வங்க தேசம்

உலகநாடுகளே விழித்தெழுங்கள்
உள்ளத்தில் கொஞ்சம் ஈரம் கொள்ளுங்கள்
உருக்குலைந்த வங்க தேசத்தை
உரமாக்கியே நிமிர்த்த கை கொடுங்கள்

வங்க தேசத்து மக்களே !
விழிநீரைத் துடையுங்கள்
வருத்தம் தீரும் காலம்
விரைந்தே வந்திடும்

-- சக்தி சக்திதாசன்
இங்கிலாந்து
இடியும் ஓசைக்குள்

மழை அதிகமாகப் பொழியத் தொடங்கியது.
ஊருக்குள் மொத்திய அழுக்கை
கழுவிக் கொண்டு போய்
நரைபலி கொடுத்தது கடலுக்கு.

கடல் விம்மிப் புடைத்துக்; கிடந்தது.
கடலுக்குள் கூடுகட்டிய மேகம்
பெரும்; பிரசவச் சத்தத்துடன்
கிராமம் முழுக்க மழையாக.
பங்கப்பட்ட ஒரு பெண்ணின் கோலமாக
கிராமம்.

கொஞ்ச நேரத்துக்குள்
காற்றில் படர்ந்த கொடி காதைச் சுற்றியது
தெரு விபத்தில்
சிறுவனின் உயிர் மழையில் கரைவதாக.

நெரிசலாய்ப்போன வாகனங்களுக்குள்
பயணியின் மூச்சு ஒடுக்கப்பட்டுச் சாலையை சபிக்கிறது.

மழை என்ற கழுவு நீர்
இல்லாது போனால்
எல்லா வகையான குருதியின் உறைவும்
எல்லா வகையான மரணத்தின் வாடையும்
மண்ணைவிட்டும் அழியாது
கறையாகிடும்.

விடிய எழும்
இடியும் ஓசையும் வேறு வேறு பிறப்பினை
உணர்த்துகின்ற இக்காலத்தில்.
குரும்பட்டிகளைப் கார்ந்த பிள்ளைகள்;
குண்டுமணிகளைப் பொறுக்கிய குழந்தைகள்
ரவைகளையும் இனிப் பொறுக்குவர்.
மலிவாக மரங்கள் இதையும் உயிர்க்கும்.

இடியும் ஓசையில் மட்டும்
யார் யாரோ ஒதுங்கிய கோழியாகினும்
இப்போதைக்கு
மழை அழுக்குறுஞ்சியும் தான்.
மனிதனுக்காகவும்.

- டீன்கபூர்
இலங்கை
வங்கப்புயல் ஏற்றிய சுமை

மழை என்ற கழுவு நீர்
இல்லாது போனால்
எல்லா வகையான குருதியின் உறைவும்
எல்லா வகையான மரணத்தின் வாடையும்
மண்ணைவிட்டும் அழியாது
கறையாகிடும்.

ராணிமோகன், குவைத்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்