Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
மறப்போம் மன்னிப்போம்
மறப்போம் மன்னிப்போம்...

இதைத்தான் செய்வான்
மனிதன்-
வனமாய் இருந்ததை
இனத்துடன் அழித்ததில்
எஞ்சியதுதான் இந்தத்
தனிமரம்..
இனி என்ன செய்ய-
வெட்டி வீழ்த்திய
வீணர்களை
மறப்போம் மன்னிப்போம்..
புறப்படுங்கள் ஒன்றாய்,
புதிதாய் மரம் வளர்ப்போம்
புவியைக் காப்போம்...!

-செண்பக ஜெகதீசன்...
மறப்போம்.... மன்னிப்போம்!!!

உமக்கு மூச்சுக் காற்றை யாம் தந்தோம்
எம்மை மரிக்கச் செய்து அடுப்பெரித்தீர்!!
மழை வர யாகம் என்று
எம்மையே நெருப்பிலிட்டீர்!!!
உமக்கு நிழல் தந்து நாங்கள் காய
எமக்குப் பரிசாய் எங்கள் உடலில் -
உமது பெயர்க் காயங்களை விட்டுச் சென்றீர்!
வாழும் போதும் உங்களை வாழ வைத்தோம்
வீழ்ந்த பின்னும் உமக்கு செல்வமளித்தோம்!
ஆயிரம் அநீதி எமக்கு நீரிழைத்த போதிலும்
எமது கொள்கை என்னவோ -
"மறப்போம் மன்னிப்போம்".....
தொடர்கிறது எமது சேவைப் பணி!!!
இனியேனும் உணர்ந்து செயல் படுவீர்..
உள்ளத்து உறுதி கொள்வீர் -
உலக வெப்ப மயமாதலை தடுக்க
என்றும் எம்மைக் காத்து
உலக நலம் பேணி
நலமாய் வளமாய் வாழ்ந்திட !!!

- பி.தமிழ் முகில்
மறப்போம் மன்னிப்போம்...

நேற்று நாமிருந்தோம் எம் நிலத்தில்
வேர் பரப்பி விழுதுவிட்டோம்
திசையெங்கும் கிளை பரப்பி நிமிர்ந்தோம்
காற்றின் மாசற்றி களைத்தவர்க்கு நிழலானோம்.
வேறென் செய்தோம்
வேற்று மனிதராய் ஏன்ஆனீர்.
எமை அழித்தீர்
தோற்றுத்தான் போனோம் துயர் சுமந்தோம்.
ஆற்றாது ஆனாலும் மறந்தோம் மன்னிப்போம்
விதையாய் விழுந்தோர் எழுந்து
நிழல் தருவார்.


வேலணையூர்-தாஸ்
மறப்போம் மன்னிப்போம்...

என்னை
தனிமைப்படுத்தியதில்
ஆனந்தம் இருக்கலாம்...
மனிதா !!
உன் இனம் அப்படித்தானே....
கொன்று குவிப்பதிலும்...
வெட்டி வீழ்த்துவதிலும் நீ
கிள்ளாடிதான்.......
உறவுகள் துறந்து
நவீன மனிதனாய் அவதாரம் எடுத்த உனக்கெங்கே புரியப்போகிறது...
மனிதாபிமானம்.....
கொஞ்சம் திரும்பிப்பார்....
எனது தனிமை....
வெறுமைகளை...
உனக்கான சுவாசத்தடங்களை நீயே அழிப்பது
கொஞ்சம்கூட உறுத்தவில்லையா
பரவாயில்லை
மறப்போம்
மன்னிப்போம்....
ஒரு விதை பல விருட்சம்
நட்டுவைக்க நீ சம்மதமென்றால்....

நிஹசா (nihaza)
மறப்போம், மன்னிப்போம்

“மாண்புமிகு” காலத்தில் நம்மை
மறந்துபோனவர்கள்,
மறுபடியும் வந்தார்கள்,
கைகூப்பியபடி வாக்குக் கேட்க!
மறந்தோம், மன்னித்தோம்,
மனிதநேயத்தோடு,
மகுடமும் சூட்டினோம்!
மக்கள் த்யவால்தான் நாம்,
மலர்ந்தோம் என்ற
மனச்சாட்சியின்றி
மறுபடியும் அவர்கள் வந்தாலும்,
மறப்போம், மன்னிப்போம்!

- கிரிஜா மணாளன்
திருச்சி (தமிழ்நாடு)
மறப்போம், மன்னிப்போம்

கூப்பிய கரங்களையும்
காலில் விழும் கலாச்சாரத்தையும்
மேடைப் பேச்சினையும்,
அச்சிடப்பட்ட
தேர்தல் வாக்குறுதிகளையும்
அறவே மறப்போம்!
மன்னிப்போம்!
காரணம், அவர்கள்.......
‘பதவிப்பிரமாணம்’
செய்துகொண்டுவிட்டார்கள்!

- க. இளையராஜா, சாத்துக்கூடல்
(தமிழ்நாடு)
மறப்போம், மன்னிப்போம்

கோபக்கனல் எங்கிருந்தும்
மூட்டப்படலாம்,
எரிவது ஏனோ
உன் உள்ளம் மட்டுமே!
சாம்பலாய்ப் போகும்
மனிதமும்,
உன் அறிவுச்சுடரும்!
அலைக்கழிக்கப்படும்
அந்தப் புயலில்
அக்கனலைக் குளிரச்செய்யும்
தாரக மந்திரம்…
‘மறப்போம், மன்னிப்போம்!

- மீனாதேவி, நாகர்கோவில்
தமிழ்நாடு


மறப்போம்... மன்னிப்போம்...

குறள் - 1128 மற்றும் 1130

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து.
பொருள் : எம் காதலர் நெஞ்சுனுள் இருக்கின்றார். ஆகையால், சூடான உணவை
உட்கொண்டால் வேதனையுண்டாகுமோ என்று அஞ்சுகிறேன். ( காதலரே சூடான பொருளை மறப்போம் )

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
பொருள ;: காதலர் எப்போதும் என் உள்ளத்தில் மகிழ்ந்து வாழ்கின்றார், ஆனால் இவ்வூரார் என் காதலர் அன்பு இல்லாதவராகப்பிரிந்து வாழ்கிறார் என்று அவரை குறை கூறுவார். ( அத்தகையோரை மன்னிப்போம் )


கவியரசன், கடம்பத்தூர், தமிழ்நாடு
மறப்போம்.... மன்னிப்போம்....!

மன்னிப்பது...
ஞானத்தின் வெளிப்பாடு...!
வாக்குறுதிகளை
மறப்பது
அரசியல்வாதிகளின்
சாபக்கேடு...!

தமிழ்க்குடில் - கவியரசன் - கடம்பத்தூர், தமிழ்நாடு.
மறப்போம் மன்னிப்போம்

உயிரோடும்
உணர்வோடும்
போராடிய
போது
தலைக்
காட்டவில்லை
உறவுகள்

உயிர்
பிரிந்த
பின்
வந்து
பலா
பிசினாய்
ஒட்டிக்கொள்கிறார்கள்
சொத்திற்கும்
சுகத்திற்கும்
இயேசுவின்
வாரத்தைகள்படி
மறப்போம்
மன்னிபோம்
என்று
செய்தவைகளை
எல்லாம்
மறந்து

சுமதி, சேலம்
மறப்போம் மன்னிப்போம்

அகவை இருபதில் அற்புத நிகழ்வு
என்னை இரசித்தது ஒரு பெண் நிலா
என்னவள் முன்மொழிந்தால் என்னை
முந்திக்கொண்டு
ஏவான் ஏசு அவதரித்த புனித நாளே
எங்கள் காதல் மலர்ந்த நாள்
ஆகாயத்தில் வண்ணக் கனவுகளுடன்
வண்ணத்துப்பூச்சிகளாய்
சிறகடித்து பறந்தோம்
அண்ணாந்து பார்த்தன
சில வல்லூறுகள்
அண்ணனிடம் சேதி சொல்ல
பட்டாம்பூச்சிகளின் சிறகொடிந்தது
பிரிந்தோம்
மனதால் அல்ல மதத்தால்
மனதில் எட்டாம் அடுக்கில்
வந்து வந்து போயின
அவளின் நினைவுகள்
மனம் வெம்பியது
பிரித்தவர்களை
மறப்போம்
மன்னிப்போம்

அ.ஹயத்பாஷா, சென்னை
மறப்போம் மன்னிப்போம்

எவன் மன்னிக்க பழகுறானோ
அவனே மனிதனாகிறான்
எதற்கும் கோபம் கொண்டவனே
மிருகமாகிறான்
சாதிமதங்களை மறந்துவிடு
அப்போதும் நீ மனிதனாயிருப்பாய்
எனவே மறக்க மன்னிக்க
பழகுங்கள்
நீங்கள் மனிதனாக இருக்க...

உடுவையூர் த.தர்ஷன்
மறப்போம்! மன்னிப்போம்!


உதிரம் கொடுத்தோம்,
உயிர் கொடுத்தோம்,
உறங்காது விழித்தோம்,
உயரத்திலிருத்த
உழைத்தோம்!
உள்ளன்போடு வளர்த்தோம்!
இன்று,
ஊன்றுகோலாய் துணையிருந்து
தாங்கும் என் நினைத்த
தனயன்,
தவிக்கவிட்டுப் போனது....
யார் செய்த குற்றம்?
ஆறாத மனம்,
ஆழமான ரணம்!
இருந்தும்கூட....
மறப்போம்! மன்னிப்போம்!


- முத்துவிஜயன், கல்பாக்கம்
(தமிழ்நாடு)
மறப்போம் மன்னிப்போம்

பகல் இரவு
என்று ஒரு நிழல்
என்னை பின் தொடர்ந்தவாறு
நீ தனிமைப்படுத்தப்பட்டுள்ளாய்...
தனிமைப்படுத்தப்பட்டுள்ளாய்...
என்று சதா மெளனமொழியால்
கூறிக்கொண்டே இருந்தது.

சூழ்நிலைக் கைதியாய்
நான் ஆட்கொண்ட வேளையிலே
மனம் மறத்தலையும், மன்னிப்பையும்
வேண்டி முதல் வரிசையில்.

மறத்தலும் மன்னிப்பும்
மனித வாழ்வை
மாற்றம் செய்யும் என்ற
நம்பிக்கையில்.

சுக. வினோத்குமார்
சேலம்.
மறப்போம்! மன்னிப்போம்!

பிறர் செய்த தீங்கை
மறப்போம்..
அவர் பிழையை மன்னிப்போம்
என்றே வாழ்கிறோம்..
மனம் ஒன்றும் குப்பைக் கூடை
அல்லவே..
சுமந்து திரிய..
நேசம் மட்டும் நிரம்பிய
நெஞ்சம்
வானத்தை விட பெரிதாய்..
இதயத்துள் ஒளிரும் அன்பு
இரு கண்களில் மின்னி
மனிதத்தை அடையாளம்
காட்டிப் போகட்டும்.
எதிர்ப்படுபவர்கள் எல்லோருக்கும்
அதுவே கலங்கரை வெளிச்சமாய்!


ரிஷபன்
மறப்போம் மன்னிப்போம்

சகதோழனும் பணம் எனும் மயக்கத்தில்

முழ்கிவிடும் கலம்...

பழகிய போது இல்லாத அந்த மயக்கம்

பணம் எனும் காகிதத்


திற்கு

மரியாதை செலுத்தும் காலம் ...

பழகிய அன்பு எனும் பேரின்பம்

பணம் வந்ததும் துட்சம் என மதிக்கிறது .

பணம் எனும் காகிதத்திற்கு மரியதை செலுத்தும்

சகதோழனின் அறியாமை மறப்போம் மன்னிப்போம் .


கா.சுரேஷ் தருமபுரி .
மறப்போம் மன்னிப்போம்

நமக்கிருக்கும் கடமைகளை நாம்
மறப்போம்!
மனசாட்சி உறுத்தலிலும்
நாம் செய்த தவற்றுக்காய்
நம்மை நாமே
மன்னிப்போம்!
நாம் மனிதர்தானே,
நல்ல கொள்கைகள்
நம்மிடத்தில்
குரங்கின் கை
பூமாலை !

- அரவிந்த் சந்திரா
மறப்போம் மன்னிப்போம்

பனியும் படர்ந்தபுல்வெளியும் - அதில்
பரவும் குளிர்மைதனும்
இனியும் வருமா வாழ்விலென - நாம்
ஏங்கித் தவிக்கின்றோம்
கனியும் குருவி காக்கைகளும் - அதில்
காணும் சலசலப்பும்
இனியும் வருமா வாழ்விலென - நாம்
ஏங்கித் தவிக்கின்றோம்

புனிதம் போற்றும் சூரியனும் - பொன்
போலும் ஒளிவெள்ளம்
இனியும் வருமா வாழ்விலென - நாம்
ஏங்கித் தவிக்கின்றோம்
தனிமை வெறுமை சோகமெனும் - எம்
தவிக்கும் நிலைமாறி
இனியும் வருமா வாழ்வு என - நாம்
ஏங்கித் தவிக்கின்றோம்

மனிதம் வாழும் உலகினிலே - தனி
மரமாய் எம்மினமும்
குனியக் குட்டும் நிலைவிட்டே - நம்
கொள்கை தனில்வென்று
தனியே மண்ணில் தலைநிமிர - காண்
தருவாய் நிற்கும்நிலை
இனியும் வருமா வாழ்விலென - நாம்
ஏங்கித் தவிக்கின்றோம்

மனிதம் என்றும் காணும் பகை - அவர்
மனதின் பிரிவுணர்வும்
தனியே தனது சுயநலமும் - நம்
தமிழை மறப்பதுவும்
இனியும் பிரிவை மறந்திடுவோம் பிறர்
தவறை மன்னிப்போம்
கனியும் எமது எதிர்காலம் - நாம்
காண்போம் தனிவாழ்வும்

கிரிகாசன்
மறப்போம் மன்னிப்போம்

ஆதவன் என்னைவிட்டுப்பிரிய
அந்தி உதிக்க
இருள் சூழ - நான்
தனிமையிலிருக்கிறேன் என்று
நினைக்காதீர்கள்!
இதோ
திங்கள் எனக்காக
தொலைவில் உதிக்கிறது
பட்சிகள் என்னிடம்
அடைக்களம் தேடி வருகின்றன
என் பிள்ளைகளாக...
பெருமிதமடைகிறேன்
நான் தாயாக
இருப்பதை எண்ணி...
மறந்தேன் மன்னித்தேன்
என்னைத் தனிமைப்படுத்திய
மனிதர்களை...
இருந்தும்
நான் என்றும் தனிமையில் இல்லை.

பொ.சகு
சத்தியமங்கலம்.
மறப்போம்! மன்னிப்போம்!

ஏழைமக்களின் இலவச அரிசியை
ஏய்ப்பவர் மத்தியில்,
எடையையும் குறைத்துப்போடும்
எளியவனையும்.....
வரி ஏய்ப்பு செய்யும் பணமுதலைகளின்
வழக்கமான துணிவையும்....
ஆலய உண்டியல் வசூலை
அபகரித்துப் பிழைக்கும் கும்பலையும்...
தட்டில் விழும் தட்சணையைப் பொறுத்தே
தன் பணியையாற்றும் அர்ச்சகர்களையும்...
திரையரங்கில் கட்டணம் அதிகம் வசூலிக்கும்
திருடர்களாய் மாறிவிட்ட முதலாளிகளையும்....
மக்களின் ஆதரவால் பதவிபெற்று -தம்
‘மக்களுக்காகவே’ உழைக்கும் அரசியல்வாதிகளையும்...
மறக்கலாம், மன்னிக்கலாம்.........
அவர்கள்
மனிதநேயமுள்ள மனிதர்களாய்
மாறினால் மட்டும்!

- ச. வளர்மதி. ஈரோடு
(தமிழ்நாடு)
மறப்போம் மன்னிப்போம்..

தேசம் தாண்டி வந்ததும்
தோசம் நீங்கியதாய் எண்ணி
வாழ்வோரை மன்னித்து
நேசமுடன் வரவேற்போம்.

தாயகப்போரில் ஆவுதியாய்ப் போனோரை
மண்டியிட்டு வணக்கம் செய்ய மறந்தோரை
மறந்திடுவோம்>.
தானும் குளம்பி மற்றவரையும் குளப்பும்
தரம் கெட்டோரை நிறம் மாறியோரையும்
மதி மாறி மண் மீட்க வா என்று
மனதார மன்னித்து வரவேற்போம்.

தம்பையா தயாநிதி,பிரான்ஸ்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்