Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
பாரதி
பாரதியை நினைந்தே வாழ்வோம்

சிந்தையிலே ஒரு செந்தணல்
சிவந்து தகன்றது தமிழ்நாட்டில்
எட்டயபுரத்து மண்ணிலே
எழுந்தது நியாயப் பூகம்பம்

தலைப்பாகையின் வெண்ணிறம்
தன்னுள்ளம் தனில் கொண்டவன்
தமிழ்த்தாயின் பெருமையை
தரணியெங்கும் மேவினன்

மொழிவெறியல்ல நான் கொண்டது
மொழிதனின் சிறப்பைச்ச் செப்பினன்
மெய்சிலிர்க்கும் வரிகளில் தந்தான்
மேதினியில் சிறந்த தமிழ்க்கவிதைகள்

பொய்யுரைக்கும் சுயநலமிகள் மத்தியில்
மெய்யுரைத்து பழி கேட்டான்
பசிமறந்து கவிபாடி தமிழை
பாரெங்கும் பறக்க விட்டான்

அடிமைகளல்ல நாங்கள் இந்நாட்டின்
அரும்பெரும் செல்வாக்கள் என
அன்னைத்தமிழின் துணைகொண்டு
அழகுப்பாக்க்கள் வகை செய்தான்

அவனியில் அவன் பிறந்து
அகவைகள் நூற்று இருப்பத்து ஜந்து
அவசரமாய்ப் பறந்து போனதுவே
ஆயினும் நினைவுகளில் உறைந்தானே

பாரதி என்னும் மகாகவி
பாரினில் பதித்த தடங்களை
நெஞ்சினில் கொண்டே வாழுவோம்
நேசிப்போம் தமிழின் மைந்தனை

- சக்தி சக்திதாசன்
இங்கிலாந்து
இலக்கணம் மீறினேன்
புதுக்கவிதை என்றார்கள்
கொடுமை கண்டு வாளெடுத்தேன்
புரட்சி என்றார்கள்
சாதியை மீறி காதல் செய்தேன்
சவட்டி எடுத்துவிட்டார்கள்
என்ன கொடு மைசார் இது?

--புதூரன்--
தமிழ்க் கவிதை வாரிதி – பாரதி.

விண்ணிலாடும் வெண்ணிலவாய் தண்ணிலவுக் கவிதைகள்
என்னவென்பேன், பாரதியின் எண்ணிலாக் கவிதைகளை.
திண்ணிய வரிகள் ஆற்றல் மிகத் தூண்டுவதாய்
மண்ணிலே மாந்தரெல்லாம் மகுடியின் நாதமாய்
பண்ணிலும் இனிமையாய் இசையோடு பாடுகிறார்.
எண்ணி எடுத்திதை எளிமையாய்க் கையாள்கிறார்.
வண்ணக் கவி வரிகள் சின்னஞ் சிறுவருக்கும்
எண்ணத்தில் வீரத்தைத் தருவதை என்னவென்பேன்.

பாரதியே! தமிழ்க் கவிதை வாரிதியே!
பேரதிர்வான உன் வாலிபப் பண்களுக்குத்
தீரமதிகம், தீர்க்கமும் பூமியில் அதிகம்.
ஊரதிரும் தாக்கங்கள் உருவானது உண்மை.
பேரதிசயம் பெற்ற கவிதையின் தாக்கங்கள்
வேரதிகம் விரித்தது பெண்கள் உலகிலும்.
சாரமதிகமான இவன் சுந்தர வரிகளை
யாரதிகம் எடுத்தாளவில்லை சுய வாழ்விலே.

பாரதியே! தமிழ்ப் பாவுலகில் நீயுமொரு – யுக
சாரதியானாலும் உன் வாழ்வில் சரிபாதியாக
நீரதியெனக் கவி பாடிய உன் கண்ணம்மாவை
ஆராதிக்காத உன் சுய வாழ்வுப் பாதையை
கூரதிகம் உன் கவியானாலும் எடுத்துக்
கூறாத மனிதருண்டோ நீயறிவாயா!
வீரதீரனாகினாலும் சரிபாதியான வாழ்விற்கு, மனைவி
வேரதுவாக வாழ்கிறாளென்பது பெரிய உண்மை.

ஆயிரத்து எண்ணூற்று எண்பத்திரண்டு மார்கழியில்
ஆரவாரமின்றி, எட்டயபுரச் சின்னச்சாமி -இலட்சுமிக்கு
ஆண்சிங்கம் சுப்பிரமணியன் பதினொராம் நாளில்
அவதரித்தான். அவன் கட்டி விளையாடவொரு
அருமைத் தங்கை பகீரதியும் பிறந்தாள்.
பெருமையாய்ப் பழம் கொடுத்த யானையே
ஒருநாள் மதம் பிடித்து அவனை மிதித்தது.
ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தொன்றில் அமரரானார்

12.9.2004
(மூன்றாவதான ’’உணர்வுப் பூக்கள்’’ கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றது.- பக்கம் 119, 120. )

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
21 -12-2007.


எல்லோருக்கும் இனிய நத்தார் வாழ்த்துகளும், 2008 புதிய ஆண்டு வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
மூச்சிலே வாழ்கின்ற....
====================

அயல்மொழிச் சுனாமிகளாலும்
அழிக்க முடியாத‌
அடித்தளம் பெற்றது தமிழ்மொழி!
பாரதியென்னும் பேருழவன்
பண்படுத்தி வைத்துச்சென்ற‌
தேன்மொழி!
உலகப் பொதுமறையான் வள்ளுவன்
உவப்புடன் வளர்த்தது இம்மொழி!
பேச்சில்தான் வாழ்ந்திடும்
பிறமொழிகள் என்றால் ‍.. நம்
மூச்சிலே வாழுகின்ற முதுமொழி!
உலக அரங்கில் முதலிடம் வகிக்க‌
உழைப்போம் என்றும் நம் மொழி சிறக்க!

> கிரிஜா மணாளன்.
திருச்சிராப்பள்ளி.
நான்!
-----

ஆடம்பரக் கல்யாண
ஆவலுடன் அப்பா..
அடுத்த ஆண்டே பேரன்
ஆசையோடு அம்மா..
வரதட்சணைத் தொகைக்காக
வருத்தும் உழைப்பில்
நான்.

- கிரிஜா மணாளன்.
நீ வேண்டும்...

அன்று,
சாதிகளில் வேறுபாட்டிற்குச்
சவுக்கடி கொடுத்ததும்,
மீதீயின்றிப் புரட்சியை
மனங்களில் விதைத்தும்
அர்த்தமான வாழ்க்கைக்கு
அடித்தளமாய் அமைந்தது.
இன்று,
பல்கிப் பெருகிவிட்ட ஊழ்லை
கொல்லத் துணிவதற்கும்,
தலை விரித்தாடும் தீவிரவாதத்தை
நிலை பெறாது நிர்மூலமாக்கவும்
விழித்தெழுந்து வரவேண்டும்,
விடிவிற்கு வழிகாட்ட வேண்டும்.

- சித. அருணாசலம்
சிங்கப்பூர்

ம‌ன‌வ‌லி தாளாம‌ல்...
------------------

செவிப்புல‌ன் அற்ற‌வைதான்
சிற‌க‌டிக்கும் ப‌ற‌வைகள்!
காக்கை குருவி எங்க‌ள்
சாதியெனும் பாட‌ல்
அவ‌ற்றின்
செவிகளை அடைந்திருந்தால்...
தம்மை
ம‌னித‌னுட‌ன் ஒப்பிட்ட‌
ம‌ன‌வ‌லி தாளாம‌ல்
த‌ற்கொலை முடிவைத்தான்
தாமாக‌த் தேடியிருக்கும்!

> கிரிஜா ம‌ணாள‌ன்,
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ்நாடு.
மீண்டும் பிற‌ந்து வா!
==================

வெள்ளைய‌ரிட‌ம் பெற்ற‌
வீர‌ச் சுத‌ந்திர‌த்தை
கொள்ளைய‌ரிட‌ம் ப‌றிகொடுத்து
கூனிக் குறுகி நிற்கின்றோம்..

சுட்டெரிக்கும் விழிக‌ளால்
சுத‌ந்திர‌க்க‌ன‌ல் வ‌ள‌ர்த்து
இந்திய‌னின் வாழ்வில் ஒளி
ஏற்றிவைக்க‌ நீ வேண்டும்!

ம‌றுபிற‌வி என்றிங்கு
ம‌னித‌னுக்கு உண்டென்றால்
ம‌றுப‌டியும் பிற‌ந்து வா..
ம‌காக‌வியே விரைவில் வா!

> கிரிஜா ம‌ணாள‌ன்
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ‌க‌ம்.
புதுமையாய்ப் பிற‌ந்து வா!
----------------------

சாதியைச் சாக‌டிப்போம்
சாதிப்போம் பிற‌ந்து வா!

ம‌த‌த்தினைக் க‌ட‌ந்து வா!
ம‌னித‌னாய்ப் பிற‌ந்து வா!

மானுட‌ம் ம‌டிவ‌த‌ற்குள்
ம‌ண்ணில் ந‌ல்ல‌ மாற்ற‌ங்க‌ளை
உருவாக்கும் புத‌ல்வ‌னாய்
பிற‌ந்து வா!

கவியெழுதும் திற‌ம் உண்டு
உன‌க்கு..
க‌த்தி எடுத்துத்
திரிய‌வேண்டாம்!
க‌ருத்துரைக்கும் க‌விஞ‌னாய்ப்
பிற‌ந்து வா!

இம‌ய‌த்தின் உச்சி செல்லும்
இளைஞ‌னாய்ப்
பிற‌ந்து வா!

உல‌க‌க்க‌வி பார‌தியின்
உருக்கொண்டு
பிற‌ந்து வா!

த‌மிழுக்கு அவ‌ன் வ‌குத்த‌
த‌னிப்பாதை வ‌ழி சென்று
உல‌கெங்கும் த‌மிழின் புக‌ழ்
ஓங்க‌ச் செய்வோம்
பிறந்து வா!

- பா. ஸ்ரீராம்
திருச்சிராப்ப‌ள்ளி
த‌மிழ்நாடு.
பாரதி...

தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்
தமிழனென்று
தலைப்பாகை கட்டிக்கொண்டு
தமிழ்ப்பாகைத் தந்தவன்..
இந்தியா விடுதலையாகுமுன்னே
இன்தமிழ்ப் பள்ளுப்பாடிய
தேசியக் கவிஞன்..
தனியொருவனுக்காகத்
தரணியையே அழிக்கநின்ற
பாமரக் கவிஞன்..
தமிழ்மொழிபோல் மொழி
அமிழ்தை எங்கும்காணா
தமிழ்க்கவிஞன்..
காக்கைக்குருவி சொந்தமென்ற
உயிர்க்கவிஞன்..
அவன்-
தந்த பாரதித்தமிழ்
தமிழர்தம் உயிர்மூச்சே...!
சாதிகள் இல்லையடி பாப்பா..
ஓ... பாப்பாவுக்கு மட்டும் தானோ?
கவிஞர்களுக்கு இல்லையோ!!

முருகன் சுப்பராயன்
மும்பை

பாரதியே வாழ்க !
----------------
புரட்சியை சொன்னதால்
புதுமைக் கிறுக்கனென்று
ஒதுக்கி வைத்ததுவே
அவர் வாழ்ந்த சமூகமது !
ஆனாலும் அவனோ
புரட்சிக் கவிஞனல்லவா
அதனால்தான்
வீழ்ந்தும் வாழ்கின்றான் !
மானுட விடுதலை
தேடும் மனிதர்களை
ஆளும் உலகம் நேசிப்பதில்லை
உயிர்கள் யாவும் யாசிக்கின்றனவே !
இன்றும் வாசிக்கப்படும்
வாழும் கவிஞனாய் பாரதி
இன்னும் ஆயிரமாயிரம்
பாரதிகள் தோன்றட்டும்
அகிலம் எங்கனும்
அவன் பணி செய்யட்டும்
அவன் இன்று இருந்திருந்தால்
தமிழீழ மக்களின்
துயரினைக் கண்டவன்
தூங்கியிருந்திருக்கான்
துணிவுடன் எழுந்தவன்
ஆழி கடந்தவன்
நீதியைக் கேட்டிருப்பான் !
வாழும் கவிஞர்களே
மீள்விக்கும் பணியினைந்து
தாழ்வில்லைத் தமிழுக்கென
தரணிக்கு உரைப்பீரா !

மா.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி
07.10.2008
பாரதி


பாரதி,
அன்று உன்னை மட்டுமா
கிறுக்கன் என்றார்கள்?
இன்று என்னையும்
அல்லவா சொல்கிறார்கள்
உன் கவியைப்பற்றி
பாடும்பொழுதெல்லாம்!


-தமிழ்ஹாசன்
பாரதியும் சிட்டுக்குருவியும்

"விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த
சிட்டுக்குருவியைப் போலே .."
பாடிய பாரதியை
அன்று இழந்தோம்:
இன்று,
சிட்டுக்குருவிகளையும் !

- அரவிந்த் சந்திரா- அடையாள எண் : 352
பாரதி!

சுந்தரச் செந்தமிழைச்சுவைத்த பாரதிநீ
சங்கத்தமிழுக்கு புதுமைசேர்த்தவன்நீ
விந்தையாய் புதுக்கவிகள் நீயியற்றி
வானளாவ பெயர்பொதித்தாய் தமிழில்நீ!

பாரதத்தாய்மீது தாசனாய்நீநின்று
பாரதத்தின் உயர்வுக்கு பணிசெய்தாய்
வீரமாய சொல்லொன்றும் ஆங்கிலேயனை
விரட்டியடித்ததே - உன்கவியும் சிறந்ததே!

புதுமைக்கவிகளை யாக்கியவன்நீ
பற்பல பாக்களை ஓட்டிய ரதிநீ - பாரதி
பொதுவில் சாதிகண்ட பொற்பாணனேநீ
பார்மீது என்றென்றும் சாகாவரம்பெற்றனை!

தமிழேயெங்கனும் சிறந்ததென அறைந்தாய்
தமிழனே நீஉயர்ந்திட கற்றிடு பிறமொழிகளென்றாய்
உமிநீங்கிய அரிசியன்னதே யுன்கவிகளெலாம்
உயர்ந்ததே உன்கவியெலாம் நீயுந்தான்பாரில்!

கூராய உன்கவிக ளொவ்வொன்றும் பண்ணே
குவலயமெங்கும் நின்று நிலைக்குதே தேனே
தீராத சாதியழித்திட செய்திட்ட பாவோட்டிய ரதிநீ
நேரான பார்வையொடு தமிழீந்த வல்லான்நீ
நேயமா யெங்கும் வலம்வருதே யின்றும்


வசனகவிதையை தமிழுக்கழித்தேநீ
வாசனை யெங்கும் கமழ்ந்திடச்செய்தனை
தேசமெங்கனும் புரட்சிகண்டது தமிழில்
தங்கத்தமிழின்று நவகவிகள் ஈயுதுசீராய்!

யாரரைந்தார் நீயிறந்தா யென்று-பாரதி
யாப்பியத் தமிழ்செய்தவனன்றே நீ
முரசறைந்து யானுரைத்தே னுன்புகழின்று
முடிவிலா துன்கவிகள் வாழ்வதே யுறுதி!

கலைமகன் பைரூஸ்
மதுராப்புர,
இலங்கை


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்