Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
படமும் வரிகளும்

picture
 
மரணம் தின்ற நட்பு-கிருஷ்ணா
சிந்தனை கிழிக்கும் பேனா-சத்யானந்தன்
சிந்தனை கிழிக்கும் பேனா-ந.சுரேஷ், ஈரோடு
சிந்தனை கிழிக்கும் பேனா-செல்வி. பாரதி பாக்கியம், தேனி, தமிழ்நாடு
பிறப்பு-செல்வி
இழப்பு-செல்வி. ஜெபமாலை மரியண்ணன், தமிழ்நாடு
துரோகம்red point
சிந்தனை கிழிக்கும் பேனாred point
இழப்புred point
தனிமைred point
பேய்களும், பில்லி சூனியங்களும்red point
பெண்ணின் மனதை...red point
கார்த்திகை red point
சுதந்திர இந்தியாred point
தாஜ்மகால்red point
மாயமான 2012red point
எழுதுங்கள் உங்கள் வரிகளை...red point
மரணம் தின்ற நட்புred point
உன் அழகில் தொலையும் நான்red point
மாறாத வடுக்கள்..red point
மீண்டும் துளிர்க்கும் மரங்கள்red point
...மேலும்
இப்பகுதியில் யுனிகோட் எழுத்துருவில் உங்கள் வரிகளை பதிவு செய்யுங்கள்

யுனிக்கோட் எருத்துரு தொடர்பான உதவிக்கு
Thamizha
Puthuvai
Ponku Tamil
 
பொங்கலோ பொங்கல் - பாப்பா பாட்டு
பொங்க‌லோ பொங்க‌ல்!
====================

உழைப்பின் ப‌ல‌ன் பொங்க‌
உள்ள‌த்துள் உவ‌கை பொங்க‌
உலையில் பால் பொங்க‌
உதிப்ப‌துதான் தைப்பொங்க‌ல்.
ஆனால்...
திசைதோறும் தீவிர‌வாத‌ம்
திளைத்துப்பொங்கி
தெருவெங்கும் குண்டுக‌ள்
வெடித்துப் பொங்கி
வ‌ஞ்ச‌மும் ல‌ஞ்ச‌மும்
வ‌ழிந்து பொங்கி
வ‌ல‌ம் வ‌ரும் நாளில்...
வ‌க்க‌ற்ற‌ ம‌க்க‌ளுக்கு
வாழ்வில் ஏது
வ‌ள‌த்தின் பொங்க‌ல்?

> கிரிஜா ம‌ணாள‌ன்
திருச்சிராப்ப‌ள்ளி, த‌மிழ‌க‌ம்.
கதிரவன் எழமுன்
படையல் முடிந்து விடும்
பட்டாசு ஓசை வானைப்பிளக்கும்

திரையில் முதற் காட்சி
நல்லூர் தேர்ச்சனம் தோற்;கும்
ஊரே அமர்களப்படும்
உழவர் திருநாளாயிற்றே

எதுவும் இன்றில்லை
துப்பாக்கிச் சத்தங்கள் மட்டும்
மரண ஓலங்களைச் சுமந்தவாறு

சூரியன் உதித்தும்
பொங்கலைக் காணவில்லை
முற்றம் வெளிறிக் கிடக்கிறது
நள்ளிரவில் பிணம் எரியும் மயாணமாய்

- கலியுகன்
புத்தாண்டு ஒளிர‌ட்டும்!
====================

கால‌ப் பாதையின்
ம‌ற்றொரு மைல் க‌ல்.
கால‌க் க‌ரும்பின்
ம‌ற்றொரு க‌ணு.
கால‌ச் செடியின்
ம‌ற்றொரு ம‌ல‌ர்.

க‌ட‌ந்த‌தை உருவாக்கி
நிக‌ழ்வ‌தைக் க‌ரு‌வாக்கிப்
புதிய‌தை உருவாக்க‌ப்
புத்தாண்டு அழைக்கிற‌து!

ந‌ம‌து சுவ‌டுக‌ளைப்
ப‌திவுசெய்ய‌க்
காத்திருக்கிற‌து கால‌ச்சாலை.
மானுட‌ நேச‌த்தால்
ம‌ண‌க்க‌ட்டும் என்றும்
வாழ்க்கைச் சோலை!

> த‌ஞ்சை தாமு
த‌லைவ‌ர்
த‌ஞ்சை எழுத்தாள‌ர் க‌ள‌ஞ்சிய‌ம்
த‌ஞ்சாவூர், த‌மிழ்நாடு.
பொங்க‌லோ பொங்க‌ல்!
.....................

பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும்
த‌ங்குக‌ இன்ப‌ம் த‌மிழ‌ன் வாழ்வினில்
ம‌ங்குக‌ தீமைக‌ள் பொங்குக‌ வ‌ள‌மைக‌ள்
விஞ்சுக‌ ந‌ல‌ங்க‌ள் மிஞ்சுக‌ ந‌ன்மைக‌ள்
நீங்குக‌ க‌ய‌மை நில‌வுக‌ வாய்மை
ந‌ல்குக‌ வெற்றி ந‌லிக‌ தீதென்றும்
நிறைக‌ நிம்ம‌தி நீடுக‌ ஆயுள்
நில‌மே செழித்து நீர்வ‌ள‌ம் பெருகுக‌
எல்லா உயிர்க‌ளும் இன்புற்று வாழ‌
பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும்!

> க‌விஞ‌ர் அ. கௌத‌ம‌ன்,
திருச்சிராப்ப‌ள்ளி
த‌மிழ்நாடு
பொங்கல் - பாப்பாப் பாட்டு.


பொங்கல் பொங்கல் தைப்; பொங்கல்
பொங்கும் ஆனந்தத் தைப் பொங்கல்.
சத்தோடு முந்திரிகை, பயறு கலந்து
சக்கரை, பால் ருசிக்கும் பொங்கல்

முற்றத்தில் மெழுகிக் கோலம் போட்டு
மூன்று கற்களில் பானை வைத்து
கரும்பு, தோரணம், கலகலப்பாய் அப்பாவும்
கலந்து கலக்கும் தைமாதப் பொங்கல்.

பள்ளிக்கு விடுமுறை பாலர் கூடுவோம்.
வண்ண ஆடை அணிந்து கொண்டு
கொள்ளை மகிழ்வில் உறவுகள் வீடுகள்
துள்ளித் துள்ளி உலா வருவோம்.

அவசியம் என்பது அன்றாட நிகழ்வாய்
ஆனந்த உலாவாக ஆலயம் செல்வோம்.
ஆசையாய்க் கூடி ஆடிப் பாடுவோம்.
ஆனந்தத் தையின் பொங்கலோ பொங்கல்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
28-01-2008.
பொங்கலோ...
பொங்கல்
வாய்விட்டு வாழ்த்தமுடியவில்லை
எம் நெற்றிப்பொட்டில்
சிங்களனின் துப்பாக்கி

-பந்தர் அலி ஆபிதீன்
பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

லிங்கேஸ்வரி மலேசியா
பொங்கலோ பொங்கலோ பொங்கல்-தை
புத்தாண்டின் முதல்நாளே எங்கள்
பொங்கலும் வந்திடும் திங்கள-வாசல்
பொங்கலும இடுவோமே நாங்கள்

புதுப்பானை பொலிவுற வைத்தே-நல்
பூவொடு மஞ்சளின் கொத்தே
மதிப்பாக மாலையாய் கட்டி-அந்த
மண்பானை கழுத்தினில் சூட்டி

புத்தம் புதுநெல்லைக் குத்தி-வெல்லம்
போட்டுடன் பால்பொங்க கத்தி
சத்தமும் பொங்கலோ என்றேவரும்-ஒலி
சங்கீத இனிமையை நன்றேதரும்

மாடெண உழைத்திட்ட உழவனவன்-பொங்கல்
மாட்டுக்கும வைத்ததை தொழுவனவன்
காடொனக் கிடந்திட்ட அந்நிலமும் -அவன
கைபட பெற்றதாம் நல்வளமும

கொல்லும பசிப்பிணி போக்குமவன்-உழவன
குறையென்ன கண்டதை நீக்கியவன்
ஒல்லும் வகையெல்லாம் உயரவழி -ஆட்சி
உடன்செய்யா விட்டாலே வருமேபழி


புலவர் சா இராமாநுசம்
அரங்கராசபுரம சென்னை 24
தைமகளே வா!

வறுமைக்கனவுகளில் தூங்கியவன்
வெறுமை நினைவுகளில் ஏங்கினான்!
விடியலைக்கண்டு!!

இடக்கை அறியாமல்
கொடுத்தது வலக்கை!
கொட்டிக்கொடுத்ததால்
அன்று சிவந்தது
இவன் கை!
வறுமையால் விரிக்கமுடியவில்லையே
இன்றிவன் சிறகை!!
விண்ணொளி கொடுத்தது
புதுநம்பிக்கை!
விடியலை நம்பியே இருந்தது
இவனிரு கை!

பகலவன் ஒளிகொடுத்தான்!
இளையவன் முடிவெடுத்தான்!!

வேதனையை சுமந்துகொண்டு
சாதனைக்காய் புறப்பட்டான்!
மெதுவாய்க் கடந்தான் மனவெளியை!
புதிதாய்ப் பார்த்தான் புல்வெளியை!
அமிழ்தாய் இரசித்தான் பனித்துளியை!!

சாலையில் ஓடினான்!
வேலையைத் தேடினான்!
பசியால் வாடினான்!!

உற்றுப்பார்த்தான்!
சற்றே திரும்பினான்!
திரும்பிய திசையெங்கும்
கரும்பு! - மனம்
விரும்பும் மணம்வீசும்
மஞ்சள்!!
பார்க்குமிடமெங்கும்
பனைக்கிழங்கு!

எங்கெங்கும்
மக்கள் கூட்டம்!
வீதிகளெங்கும்
தமிழர்கள் நடமாட்டம்!

ஏழைகளின் அகமெங்கும் குளிர்ச்சி!
இளையவன் முகமெங்கும் மகிழ்ச்சி!!

'என்ன காரணம்?'
என்று கேட்டான்!
சென்றவன் சொன்னான்
'இன்றுதான் பொங்கல்!
தமிழன் உள்ளமெங்கும்
தங்கும் பொங்கல்!!'

உடலெங்கும் புத்துணர்ச்சி! - இளையவன்
உள்ளமெங்கும் புதுஎழுச்சி!!

கோடியில் புரண்டவனை
கோடியில் புரளவைத்தது காலம்!
கொட்டிக் கொடுத்தவனை
எட்டி உதைத்தது காலம்!!

இளையவனுக்கு
கைகொடுத்து கரைசேர்க்க
தைமகள் வந்துவிட்டாள்! - நம்
தமிழ்மகள் வந்துவிட்டாள்!!


முனைவென்றி நா சுரேஷ்குமார்
பொங்க‌லோ பொங்க‌ல்!

ஏதும் அறியாத் தைமகள்!!

நேர்மை யற்ற நெஞ்சங்கள்!
நீதி யற்ற தலைவர்கள்!
ஓர்மை யற்ற உணர்வுடனே
உழைத்துத் தேயும் உழவர்கள்!
கூர்மை யற்ற குடிகளையும்
கொண்டி ருக்கும் நாட்டுக்குள்
சீர்மை யுடனே வருகின்றாள்
சிரித்த முகமாய்த் தைமகளே!

அரசுப் பணியர் எனும்பேரில்
அளவில் சிறிய வேலைக்கும்
பரிசு போன்று பெயர்வைத்துப்
பணத்தைப் பெறுவார் இலஞ்சமென!
சிரசும் இருந்தும் முண்டமான
சிறியோர் செயலைக் கண்டிடவே
முரசு கொட்டி வருகின்றாள்
முடிவே அறியாத் தைமகளே!

வாங்கி வாழும் மனிதர்கை
வாரி வழங்கும் எனநினைத்தே
ஏங்கித் தவிக்கும் ஏழைகளின்
ஏக்கம் தெளிதல் இன்றில்லை!
தேங்கி நில்லாப் பழக்கத்தில்
தெளிவே இல்லா மக்களிடம்
ஓங்கி ஒளிர்ந்து வருகின்றாள்
உறக்கம் அறியாத் தைமகளே!

தாளம் தவறும் ஆட்டத்தில்
தவறு நடத்தல் சரியென்றால்
ஞாலம் வாழும் உம்மக்கள்
நன்மை பெறுதல் என்னாளோ!
ஓல மிட்டு அழைக்கின்றோம்
உலகம் உயர வந்திடுக!
கால தேவன் கைப்பிடியில்
கவலை அறியாத் தைமகளே!

நாட்டில் ஏதும் நடந்தாலும்
நரகத் துன்பம் அடைந்தாலும்
ஏட்டில் பழமை இருந்தாலும்
எதுவும் இல்லை என்றாலும்
பாட்டில் புதுமை படைத்தாலும்
பழமை புதுமை ஆனாலும்
கூட்டிக் கழித்துப் பெருக்கிடுவாள்
குறையை அறியா தைமகளே!

அருணா செல்வம்.
பிரான்ஸ்
உழவர் திருநாள்

உழவருக் கொருநாள் திருநாள்
உழைப்பவர் அறுவடை பெறும்நாள்
உலகினில் முதல்முதல் திருநாள்
உணவினை தருபவர் பெருநாள் (உழவரு)
தழல்தனில் பழையன விடும் நாள்
தையினை மார்கழி தொடும் நாள்
பழையன கழித்திட வரும் நாள்
பழையன போ(க்)கித் தரும் நாள் (உழவரு)
பகலவன் இறைஎன தொழும் நாள்
பகுத்தறிவு வாதியும் தொழும் நாள்
சகலரும் இணைந்திடும் திரு நாள்
தமிழரின் தமிழ்தை முதல்நாள் (உழவரு)
எருதையும் துதித்திடும் ஒருநாள்
ஏரையும் வணங்கிடும் ஒருநாள்
வரும் தை பொங்கல் மறு நாள்
மாட்டுப் பொங்கல் திருநாள் (உழவரு)


சு.அய்யப்பன்
இன்று பிறந்தாய் திருநாளே
இரண்டாயிரத்து பதிநாலே
இன்று பிறந்தாய் திருநாளே
வரவேற்கின்றோம் நள்ளிரவே
உன் வருகை என்றும் நல்வரவே
அப்பா அம்மா ஆசையில்தான்
அனைவரும் இங்கே பிறக்கின்றோம்
இப்போது அம்மா வாசையில்தான்
இங்கே நீயும் பிறக்கின்றாய்
நிலவில் லாத நாளென்று-வான்
நட்சத்திரங்கள் சிரித்தாலும்
மதுவில் லாத புத்தாண்டை-நம்
நட்சத்திரங்கள் கொண்டாடும்
நட்சத்திரங்கள் கொண்டாடும்
நட்சத்திரங்கள் கொண்டாடும்-நம்
நட்சத்திரங்கள் கொண்டாடும்
நாமும் கூட கொண்டாட
நாளாய் ஆண்டும் தினமலரும்


சு.அய்யப்பன்,
109,திருவள்ளுவர் நகர்
வானிலேசூரியன் கண்ணுக்குத் தெரிகின்றான்
வாசலிலே பொங்கல் படையல் சூரியனின்மகிழச்சி
இன்று எனக்கு
திருநாள் இதுவே எனக்குப் பெருநாள் இல்லங்கள் தோறும் இனியபொங்கல் உலகுக்கொரு சூரியனே உம்மை வணங்கிறோம்

-யோகாமணி
சோற்றில் உப்பிடாதீர்கள்.
அது
விதையாக மண்ணில்
விழுந்த காலம் முதலே
உழவன் தன் கண்ணீரை
உப்பாக
காணிக்கையிட்டிருக்கிறான்

கேப்டன் யாசீன்


எழுதுங்கள் உங்கள் வரிகளை
*பெயர்  
*மினன்ஞசல்  
*நாடு  
*கவிதை  
   


தமிழில் எழுதுவதற்கு... [pop-up window will open]

 
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்