அப்பாவை முதல் ஷிப்ட்
மில் சங்கு எழுப்பும்
தாத்தாவை எழுப்புவது
காலையில் வருகிற தொடர் இருமல்

என்னை எப்பொழுதும்
அலாரம்தான் எழுப்பும்
பொட்டப்புள்ளைக்கு இன்னும்
என்னடி து£க்கமென்று தங்கையை
அம்மா எழுப்புவாள்

குளித்து பூஜை செய்து
அப்பாவுக்கு சோறு கட்டிக் கொடுத்து
தாத்தாவுக்கு மருந்து தந்து
எனக்கு காப்பி கொடுத்து
தங்கைக்கு பின்னல் இட்டு
ஈயச் சட்டியோடு தீப்பெட்டித்
தொழிற்சாலைக்குப்
போகிற அம்மாவை காலையில்
யார் எழுப்புவார்கள் ?

நன்றி : ஆனந்தவிகடன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others