வேண்டுவன
  - மன்னூரான்
  வேண்டுவன...
-------------------

சாதி அறியாத
சனனம்

நீதி தவறாத
நெஞ்சம்

தொல்லை தராத
தோழன்

இல்லை என்னாத
இறைவன்

அள்ளக் குறையாத
அறிவு

கள்ளம் இல்லாத
காதல்

சத்தம் எழுப்பாத
சமுத்திரம்

யுத்தம் இல்லாத
யுகம்

ஒன்றும் எதிர்பாரா
உறவு

என்றும் விடியாத
இரவு

வியாதிகள் காணாத
யாக்கை

வயோதிபம் வாராத
வாழ்க்கை

உழைத்து உண்ணும்
இரணம்

உறங்கும்போதே
மரணம்
வார்ப்பு
www.vaarppu.com