Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
மின்துகள் பரப்பு
  - இந்திரன்

அதிநவீன மின் துகள் நட்சத்திரங்கள் -- புதியமாதவி, மும்பை

நவீனகவிதைகள் என்ற முத்திரையுடன் வெளிவந்துள்ள 'மின் துகள் பரப்பு' கவிதை தளத்தில்
இந்திரன் செய்திருப்பது இலக்கிய தளத்தில் துணிச்சலான சோதனை முயற்சி. கலை இலக்கிய
விமர்சகராக அறியப்பட்டிருக்கும் கவிஞர் இந்திரன் அவர்களின் கவிதைகள் குறித்து வசந்த்
செந்தில் அவர்கள் "இந்திரனின் கவிதைகள் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வெளிவந்தவை
அல்ல, அவை அறிவின் கரை நின்று நிதானமாக பொயட்ரி ஒர்க்ஷாப் முறையில் கருக்களை
தேர்ந்தெடுத்து பதப்படுத்தபட்டவை." என்று சொல்வதை பல்வேறு கவிதைதளில் மின் துகளில் வெளிச்சம் காட்டுவதைக்
காணலாம்.


சக்கரத்தைக் காட்டிலும்
உன்னதமான ஒரு பூவை
நான் இதுவரையில் பார்த்ததில்ல


என்று எந்திரக்காதலுடன் வலம் வருகிறது நவீன கவிதை. ஆனால் அந்த எந்திரக்காதலிக் தன்னை
இழக்காமல் வாழ நடத்தும் போராட்டாமாகவே இவர் கவிதைகள் விரிகின்றன. சுவரொட்டிகளைப்
பருகிக்கொண்டு நடக்கும் வாழ்க்கையில் விளம்பரங்களின் துரத்தலைக் கண்டு ஓடி விளம்பரங்கள்
இல்லாத ஆதி மனிதனின் குகைகளுக்குள் ஒளிந்து கொள்ள துடிக்கிறது.

விளம்பரங்கள் துரத்துகின்றன
என்னை
கனவுகளின்
கடைசித்
தெருவரையிலும்

பனியன்களில்
கைப்பைகளில்
பேனாக்களில்
வாகனங்களில்
தொலைக்காட்சி
ஜன்னல்களில்

முட்டை ஓடுகளிலும்
வெறிபிடித்து
வேட்டையாடுகின்றன
என்னை.


கடைசியில் விளம்பரங்கள் வேண்டப்படாத ஆதிமிருகமாகிவிடத் துடிக்கிறது.

ஒருபக்கம் எந்திரத்தின் மீது காதல், மறுபக்கம் எந்திரமயமான உலகத்திலிருந்து தப்பி ஓட
நினைக்கும் போராட்டம். இந்த இரண்டுக்கும் நடுவில்தான் இன்றைய கணினி யுக மனிதனின்
வாழ்க்கை. இந்தப் போராட்டத்தளத்தையே மின் துகளின் கருவாக்கியுள்ளார். வார்த்தைகளில்
மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த கவிதைகளை கோடுகளிலும் புள்ளிகளிலும் கட்டங்களிலும் ஓவியங்களிலும்
காட்சியாக்கிக் காட்டும்போது கவிதை வாசிப்பு தளத்திலிருந்து நழுவி காட்சிப்படுத்தலாக
பிறிதொரு உருவம் எடுக்கிறது. காட்சி படுத்தல் வார்த்தைகளுக்கு மேலும் வலுசேர்ப்பதுடன் கவிதையை
ஓவியமாக சிற்பமாக மாற்றிவிட்ட வித்தையையும் சேர்த்தே நடத்துகிறது. குறிப்பாக 'ஆதாம்
கடித்த ஆப்பிள் ' (பக் 84.87) கவிதையில் நிமிடங்கள் தோறும் மாறும் இரு ஜோடி பாதங்களில்
காட்சி படுத்தப்பட்டிருக்கிறது ஆண்-பெண் உறவு.

கோரமான சிதைந்த மனிதமுகத்தின் புகைப்படத்தின் கீழ் 'நல்ல சுவையுணர்வின் மரணம்'என்ற
வரிகள் புகைப்படத்துக்காக எழுதப்பட்ட கவிதையாகிவிடுகிறது. இந்தப் புகைப்படத்தை எடுத்துவிட்டால்
கவிதை வெற்று சொல்லில் மரணித்துவிடும் அபாயம். எனினும் காட்சியின் வலுவான தாக்கம்
கவிதையுடன் சேர்ந்து வாசிப்பவனில் பதிவாகி கவிதை என்பது கவிதையுடன் கலந்த காட்சியாகி
ஒன்றுடன் ஒன்று சேர்ந்து புதிதாக ஒரு தளத்தைக் கவிதை தளத்தில் கட்டிமுடிக்கிறது. அழகியல்
சிதைந்த எந்தக் காட்சியைப் பார்த்தாலும் 'நல்ல சுவையுணர்வின் மரணம்' என்ற வரிகள்
காட்சியின் நடுவில் ஓடும் எழுத்துச்சுருளாக பதிந்து விடுகிறது. சிச்கனமான வார்த்தைகளில்
கட்டமைக்கப்படும் கவிதைகளில் புதிய முகம் காட்டும் இந்த நவீன உத்தி எல்லா இடங்களிலும்
கவிதையின் முகம் காட்டுகிறதா என்பதும் சிந்திக்கத்தக்கது.குறிப்பாக கட்டங்களில் அடுக்கப்பட்டிருக்கும்
வார்த்தைகளில் கவிதையின் முகம் முக்காடிட்டப்பட்டு மறைக்கப்பட்டும் உள்ளது. குறுக்கெழுத்து
முறையில் சொல்லப்படும் உருவமாக கொள்வதற்கும் இடமில்லை. குறுக்கு நெடுக்காக, வலமிடமாக
எப்படியும் வாசிக்க முடியும் என்ற முறையில் இக்கவிதைகள் அமையவில்லை. கவிதை வரிகளைக்
கட்டங்களுக்குள் அடைத்து வைத்திருப்பதிலும் அம்புக்குறிகளில் அமையும் கவிதைகளிலும் இம்மயக்கம்
வாசிப்பவனை தேவையில்லாமல் மண்டைக்காய வைத்திருப்பதைச் சொல்ல வேண்டும்.

இடைக்கால தமிழ் இலக்கிய வரலாற்றில் சித்திரக்கவிகள் இம்மாதிரியான முயற்சிகளில்
ஈடுபட்டது நினைவு கூரத்தக்கது.

மின் துகள் பரப்பு பக்கத்திற்கு பக்கம் கவிஞர் இந்திரன் நவீன கவிதைகளின் சோதனைக்கூடமாகவே
காட்சியளிக்கிறது. இந்திரன் அவர்கள் அறிந்தே செய்திருக்கும் சோதனை முயற்சிகள் இவை
. அவரே சொல்வது போல, " கவிதை என்பது ஒரு புதிய புரிதல் முறை. தற்கால வாழ்க்கை - வாகன
நெரிசல், கணிப்பொறி, மின் துகள் பரப்பு, விமானத்தின் வேகம், தார் உருக்கும் இயந்திரத்தின்
அழகு, சின்னத்திரை பிம்பங்கள், வெள்ளித்திரை வேடிக்கைகள், தனக்கான புதிய கவிஞனை எதிர்பார்த்து
நிற்கிறது. கம்பனுக்கும் பாரதிக்கும் கிடைத்திராத அதிர்ச்சியூட்டும் காட்சி அனுபவங்களைக்
கையில் கொண்டு புதிய நறுமணங்களையும் வெறுக்கும் புதிய துர்நாற்றங்களையும் ஒவ்வொன்றாய்
கையில் எடுத்து இன்றைய கவிதைக்கான கருவாய் வழங்குகிறது.

எழுத்து, சொல், மொழி, கவிதை குறித்த மானிடவியல் ரீதியான, உளவியல் ரீதியான,
மொழியியல் ரீதியான குறியீட்டியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகள் இன்றைய கவிதையின்
முக ஜாடையையே ஒரு ப்ளாஸ்டிக் சர்ஜரிக்கு உட்படுத்த முனைந்து நிற்கின்றன. அதிரடிப் பார்வைப்
பண்பாடு ஒன்றோடொன்று கலந்த மொழி வெளிப்பாடாக இக்கவிதைகள் கலப்பின மரபு ஒன்றை ஸ்தாபிக்க
முயல்கின்றன" (பக் 10,11)

கவிதை நூல்: மின்துகள் பரப்பு
யாளி பதிவு வெளியீடு
சென்னை 600 024,
பக்: 96/ விலை. ரூ. 50/

கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் குறித்து சிலவரிகள்:

*கி.பி.2000 ஆண்டின் துவக்கத்தில் கன்னியாகுமரியில் திருவள்ளூவர் சிலை திறப்புவிழாவின்
போது அமைக்கப்பட்ட 122 ஓவியர்கள் பங்கு கொண்ட 'குறளோவியம்' கண்காட்சியின்
ஒருங்கிணைப்பாளர்

* டைம்ஸ் ஆப் இந்தியா, எகானாமிக்ஸ் டைம்ஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகிய தேசிய நாளேடுகளிலும்,
தமிழின் பிரபல இதழ்கள், சிற்றிதழ்களிலும் நவீன ஓவியம், சிற்பக்கலைகள் குறித்து
பரவலாக எழுதிவருபவர்.

*கவிதைநூல்கள்: அதீநவீன அழகியல் போக்குகளைக் கொண்ட இவர் கவிதைகளை " தமிழுக்கு ஒரு
பரிமாண விஸ்தரிப்பு" என்கிறார் எழுத்தாளர் சுஜாதா.

1972 - திருவடி மலர்கள்
1982 - அந்நியன்
1991 - முப்பட்டை நகரன்
1994 -சாம்பல் வார்த்தைகள்
1982 - Syllables of Silence
1996 - Acrylic Moon


* மொழிபெயர்ப்புகள்:

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - 1982
காற்றுக்குத் திசை இல்லை - 1986
பசித்த தலைமுறை - 1994
பிணத்தை எரித்தே வெளிச்சம் -1995
கடவுளுக்கு முன் பிறந்தவர்கள் -ஆதிவாசி கவிதைகள் - 2002

ஆப்பிரிக்கக் கவிதையிலிருந்து ஆதிவாசி கவிதைகள் வரை உலகக்கவிதைப் போக்குகளைத் தனது
மொழிபெயர்ப்புகள் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்த இவருடைய இம்மொழிபெயர்ப்புகள் இலக்கிய
தளத்தில்- சிந்தனைப்போக்கில் -அதிரடி தாக்கத்தை ஏற்படுத்தியவை.

கலை விமர்சன நூல்கள்:

தமிழ் அழகியல் - 1994
தற்காலக் கலை - அகமும் புறமும் - 1996
Taking his Arts to tribals - 1999

தேடலின் குரல்கள் - 2000
கவிதையின் அரசியல் : 2000

சினிமா விமர்சனம்: ரே -சினிமாவும் கலையும்

உரையாடல்: Man & Modern Myth: A Dialogue with S Chandrasekaran, Artist-
Singapore 1994


புதியமாதவி, மும்பை எழுதிய பிற விமர்சனங்கள்
red angle பல்வேறு கவிஞர்களையும் கலைஞர்களையும் கவர்ந்த கொனாரக் சிற்பங்களை 2000 ஆண்டு இலக்கிய தொனமத்தில் வந்தக் கவிஞர் பழமலய் அந்த தொன்மங்களை ஏற்றி பார்க்கிறார்
red angle சுற்றுப்புறச்சூழல் தாண்டி வாழ்க்கையின் சமூக அவலங்கள், வர்க்கம், சாதியம் என்று பல்வேறு தளத்திற்கு வாசகனை ...
red angle ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறும் அவர்களின் உரிமைகளையும் விடுதலையையும் பேசி தன்னைத் தலைவர்களாக்கிக் ...
red angle காதலில் கூட தன் சுயமிழப்பதை இன்றைய பெண் விரும்புவதில்லை. காதலுக்காக த்ன்னை இழந்து தன் நாமம் கெட்ட ...
red angle காலம் காலமாய் புனிதமாக கருதப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தையுமே கேள்விக்குறியாக்கி தனக்காக வாழ நினைக்கும் பெண்ணின் குரலாக பதிவு செய்துள்ளார்.
red angle நாற்காலி, கவிஞருக்கு கவிதையின் கருப்பொருளாகி கவிதை இடத்தில் அவருக்கான தனி இடத்தை நிரப்பிக்கொள்கிறது
red angle தனிமையின் மவுனம் பிரபஞ்சத்தைப் பிளக்கும் வலிமையுடையது. தனிமையைத் தேடி ஓடும் மனிதர்கள் கண்டதில்லை தனிமையை ..
red angle சமகால தமிழின விடுதலைப் போராட்டத் தளத்தின் காட்சிகளுடனும் கருத்துகளுடனும் ஒப்புமைப் படுத்திப் பார்க்கும் போது
red angle பாலியலைக் காதலாக்கி மணம் காணும் கவிஞர் அதையே பெண் கேட்டால் கேள்விக்குறியாக்குவது சமுதாய மரபுவழி எண்ணங்களில் சிக்குண்டு இருப்பதையே உணர்த்துகிறது.
red angle காசி ஆனந்தன், வண்ணதாசன், ஆதி மூலம், அறிவுமதி..வரிசையில் இதோ இன்னொரு மழைத்துளி.
red angle தலித்தின் வாழ்க்கை அனுபவங்கள் அதிர்ச்சியானவை. படிப்பு, பதவி, பணம் என்னவந்தும் அந்த வலியின் ரணத்தை அகற்ற முடியவில்லை.
 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்