விதை என்பது ஒரு காட்சி. கவிஞன் ஒரு நிகழ்வை அவனது பார்வையில் பதிவு செய்வது தானே கவிதை? அந்த காட்சி நிகழ்வாய் அல்லாமல், ஒரு உணர்வாய் பதிவு செய்ய படும்போது அது நமக்கு மிக அருகில் வந்துவிட்டதாய் தோன்றுகிறது. இந்த கவிதையில் வரும் அந்த இன்னொரு நபர் யார்? எதற்காக அவர்கள் சந்திக்க வேண்டும்? அது எதுவும் தேவையில்லை, இக்கவிதையின் அனுபவத்தை பெற.
"பின்னரும் நான் வந்தேன்." - கவிதை தொடங்குவதே ஒரு அந்தரத்தில். உடனே அது மிக அண்மையில் வந்து விடுகிறது.
கவிதையின் மிக சிறந்த வரிகளாய் எனக்கு பட்டது,
"மறுபடி மறுபடி திசையற்றுப் போனோம்."
இத்தளத்தில் உள்ள இக்கவிஞரின் மற்ற மூன்று கவிதைகளும் (பார்வை, யாரோ ஏதோ, முடிந்துபோன மாலைப்பொழுது) இதே அனுபவத்தை தருகின்றன.
இக்கவிதை குறித்த இரு கேள்விகள். ஒன்று. கவிதையின் களம் இலங்கையா? இரண்டு. 1987 ஆண்டு, எதை குறிக்கிறது?
சித்தார்த், குவைத்
பா. அகிலன் இலங்கைக்
கவிஞர்தான். இவரது வெளிவந்த கவிதைத் தொகுப்பு "பதுங்குகுழி நாட்கள்" (குருத்து
வெளியீடு). விற்பனை உரிமை: காலச்சுவடு பதிப்பகம்.
1987, கலவரத்திற்குப்பிறகான அமைதிக்காலத்தைக் குறிப்பதாக இருக்கலாம்.
சரியாகத் தெரியவில்லை.
தீபா
|