Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
பதுங்கு குழியில் பிறந்த குழந்தை
  - தீபச்செல்வன்ஒடுக்கப்பட்ட மக்கள் ஒரு போராட்டத்தின் வழியாக தமக்கான விடுதலையைப் பெற்றுக்கொள்வதன் முன் எண்ணுக்கணக்கற்ற இழப்புகளையும் மனச்சிதைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. பட்டியலிடாமலே அந்த மானுட அவலங்களை நாம் அறிவோம். சகமனிதர்களின் குறிப்பாக தான் வாழும் சமூகத்தின் இழப்புகளும் வலிகளும் ஒருத்தியை அன்றேல் ஒருவனைப் பாதிக்கவில்லையெனில், அவர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தகுதியற்றவர்களாகவே கணிக்கப்படுவர்.


சக மனிதர்களின் வலியைத் தன் வலியாக உள்வாங்கி அதைக் கவிதையாக உருமாற்றி வெளிப்படுத்தும் பேராற்றல் வாய்க்கப்பெற்றவராக தீபச்செல்வனை அடையாளம் காணமுடிகிறது. அதேசமயம் போர் அவர் மீதே செலுத்தும் ஆதிக்கம், அழுத்தங்கள், நேரடியானதும் மறைமுகமானதுமான அச்சுறுத்தல்கள் இவைகளையும் கவிதைகளாக்கியிருக்கிறார். புனைவுகளும் இறந்தகாலத்தின் நினைவுகளும் பெரும்பாலும் கவிதைகளாகக் கருக்கொள்ளும் நிலையிலிருந்து மாறுபட்டு சமகாலத்தை இவரது எழுத்துக்கள் ஏந்திவருகின்றன. தான் வாழும் நிலத்தின் வதைபடலை கையறு நிலையோடு பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும் குற்றவுணர்வை இவரது பெரும்பாலான கவிதைகள் பேசுகின்றன.


போருள் வாழ்வதென்பது ஏறக்குறைய மரணத்திற்குச் சமானம். அந்த மரணவாதையை, அதன் குரூரத்தை அதனுள் வாழ்பவர்களால் மட்டுமே முழுமைபடப் பேசமுடியும். ஒரு தோழியின் வழியாக அறிமுகப்படுத்தப்பட்ட தீபச்செல்வனின் வலைப்பூவானது இணையத்தில் கிடைக்கப்பெறும் செய்திகளைக் காட்டிலும் வருத்தந் தருவதாயிருக்கிறது. அதுவே இலக்கியத்தின் சக்தியும் அல்லவா?


அதிகாரங்களுக்கெதிராக எழுப்பப்படும் எந்தவொரு குரலையும் எழுத்தையும் நசுக்குவதும்கூட ஆக்கிரமிப்பாளர்களின் போர் தர்மங்களில் ஒன்றாக இருக்கும் நாட்டில், அழிவின் மையப்புள்ளியாக்கப்பட்டுவிட்ட கிளிநொச்சியில் வாழ்ந்துகொண்டு இவ்வாறு எழுதத் துணிவதென்பது ஒரு கவி மனசுக்கே சாத்தியம். இத்தனை இளம் வயதில் அவர் தனக்கேயான கவிதை வடிவத்தைக் கண்டடைந்திருப்பதும் மற்றுமோர் சிறப்பு. முதல் தொகுப்பு என்பது பெரும்பாலும் கவிதை எழுதிப் பழகும் ஒரு முயற்சியின் வெளிப்பாடே என்ற எனது கருத்தை இவரது கவிதைகளை வாசித்தபிறகு மாற்றிக்கொண்டேன்.


உதிரிகளாக வாசிக்கும்போது ஏற்படாத தாக்கத்தை ஒரு தொகுப்பாக வாசிக்கும்போது கவிதைகள் தந்துவிடுகின்றன. அந்த வகையில் அவருடைய 30 கவிதைகளைத் தொகுத்து 'பகுங்குகுழியில் பிறந்த குழந்தை'என்ற தலைப்புடன் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது. புத்தகத் திருவிழாவில், கவிஞர் சுகுமாரன் அவர்களது தலைமையில் 12ஆம் திகதியன்று மாலை ஆறு மணிக்கு தீபச்செல்வனின் தொகுப்பு வெளியிடப்படவிருப்பதாக அறிகிறேன். இத்தொகுப்பின் வழியாக தமிழ்க் கவிதைப் பரப்பிற்கு மேலுமொரு கனதியான படைப்பாளி வந்துசேர்கிறார்.


தீபச்செல்வனால் அவரது வலைத்தளத்தில் அண்மையில் இடப்பட்டிருக்கும் 'கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்' என்ற கவிதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போல


"ஜனாதிபதியின் உணவுக் கோப்பையில்
மண் நிறைகிறது"உண்மைதான். மற்றவர்களது மண் மீதான ஆக்கிரமிப்பாளர்களின் பசி தீராதது. ஆனாலும் மண்ணும் பசி கனலும் வயிறோடிருக்கிறது என்ற உண்மையை வரலாறு உணர்த்தத்தான் போகிறது. தமிழர்களின் மண் விதைகுழி மட்டுமன்று ஆக்கிரமிப்பாளர்களது புதைகுழியும்கூட.


-தமிழ்நதி


--
தீபம் பதுங்கு குழியிலிருந்து ஒரு வலைப்பதிவு
--தீபச்செல்வன் தீபம்
http://deebam.blogspot.com
pathunku kuliyil pirantha kulanthai book release


இந்நூல் தொடர்பான பிற விமர்சனங்கள்
red angle தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி.நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம்.
pointதமிழ்நதி
தமிழ்நதி எழுதிய பிற விமர்சனங்கள்
red angle தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி.நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம்.
 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்