Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்
 
விமர்சனம்
தற்கொலைக்குறிப்பு
  - நிந்தவூர் ஷிப்லிதூக்கம் உதிரும் இரவுகள்

அலுவல் அழுத்தங்கள் முடிந்து நிம்மதியாய் தூங்கப் போகும் முன் வாசிக்கத் துவங்கினேன் சகோதரர் நிந்தவூர் ஷிப்லி அவர்களின் கவிதைகளை. ஒரு தூக்கமற்ற இரவுக்கான முன்னுரை அது என்பது எனக்குப் புரிந்திருக்கவில்லை.

ஈழம், தமிழன் எனும் வார்த்தைகள் அரசியலுக்காக வெட்டப்படும் சதுரங்கக் காய்கள் எனும் நிலையில் தமிழக (இந்தியா) வீதிகள் வியூகங்கள் வகுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வீதியின் அறைகளில் இருந்து கொண்டு ஷிப்லியின் கவிதைப் பக்கங்களைப் புரட்டப் புரட்ட விரல்களில் நுனிகளிலும் உணர முடிகிறது வழியும் குருதியின் பிசுபிசுப்பை.

துயரத்தின் தெருக்களின் வழியாக அலைந்து திரியும் ஒரு பிரமை பிடித்தவனின் மனநிலைக்குள் என்னை இறக்கி வைத்தது ஷிப்லியின் கவிதைத் தொகுப்பு என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை.

முகத்துக்கு முன்பாகவும், பின்னந்தலைக்குப் பின்பாகவும் துப்பாக்கிகள் நீட்டப்படும் நிலையைக் கவிதை ஒன்று உரைக்கும் போது யாரோ எனது பின் மண்டை வழியாக உற்றுப் பார்க்கும் படபடப்பு நிகழ்ந்தேறுகிறது.

என் தேசத்தில் இது கிளையுதிர் காலம் என கவிஞர் கவலைப் பேனாவுடன் கசிய ஆரம்பித்து


கிளையுதிர்காலம் முடிந்து
இன்னும் சில நாட்களில்
தோன்றக்கூடும் வேரறுகாலம்.


என முடிக்கையில் ஓர் இனத்தின் வேர் அறுபட்டுவிடுமோ எனும் பதை பதைப்பு கவிதைகளின் நரம்புகளில் கனக்கிறது.

யுத்த தேசத்தின் வலிகளையும், வேதனைகளையும், உயிர் பிடுங்கும் துயரங்களையும் எங்கோ தொலைவில் ஓர் பூங்காவில் இருந்து கொண்டு புரிந்து கொள்ள முடியாது என்கின்றன ஷிப்லியின் கவிதைகள்.

தனது சுவடுகளின் மீதான நேசத்தின் நினைவலைகளும் உலகின் எல்லா எல்லைகளுக்கும் துரத்தப்பட்ட தனது உடன்பிறந்தோர் நினைவுகளும் என ஓர் ஈழத் தோழனின் ஆழத் துயரம் கவிதைகளின் ஓரங்களிலும் உறைந்து கிடக்கின்றன.


புயலழித்த பூவனமாய்
புலம்பெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்


எனும் கவிதை உள்ளத்தை உருக்குகிறது. ஆளற்ற இரவில் நதிக்கரையோரமாய் ஒலிக்கும் ஒரு பூவின் ஒப்பாரிப் பாடலாய் இந்தக் கவிதை காதுகளில் விழுகிறது.

புலம் பெயர்ந்தவனை புலன் பெயர்ந்தவனாய் பாவிக்கும் அண்டை நாடுகளின் ஆணவப் போக்கின் வலியைப் பிரதிபலிக்கிறது கவிதை.

ஓர் நதிக்கரையில் அலைகளால் ஒதுக்கப்பட்ட உதிர்ந்து போன மலராய் கிடக்கும் மக்களின் வாழ்க்கையின் நிஜத்தை கலப்படமில்லாமல் அழுது சொல்கிறது கவிதை.


வலிகளில் நிறைந்து போன
என் விழிகளைப்பற்றி
ரணங்களில் புதைந்து போன
என் ஆத்மார்த்தம் பற்றி
துயரப்பாடல்கள் உச்சரிக்கும்
என் பேனா பற்றி
காயங்களின் சுவடுகளை ஏந்தி நிற்கும்
என் பாவப்பட்ட இதயம் பற்றி
இனிப்பேச யாருமில்லையா…?


என கவிஞர் ஓர் சமூகத்தின் பிரதிபலிப்பாய் கதறும் குரல் எத்தனை கடல்களையும், மலைகளையும் தாண்டி காதுகளைத் தீண்டும் வலிமை படைத்தது.


பத்தாண்டு கழித்து
தாய் மண்ணில் கால் பதிக்கிறேன்..
கதறக்கதற அப்போது துரத்தப்பட்போதான
அதே வலி இன்னும் கால்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது


எனும் வரிகள், ஆண்டுகள் தாண்டியபின்னும் சிலரின் மனம் மனிதாபிமானத்தைத் தொலைத்து விட்ட நிலையில் இருப்பதைப் பறைசாற்றுகிறது.

ஈழ தேசத்தில் பிறக்கும் ஈரக் காதல் கூட துப்பாக்கிகளின் துவாரங்கள் வழியே நழுவி நழுவித் தான் காதலிக்க வேண்டியிருக்கிறது.


இம்மடல் உன் கரம்
சேரும் தறுவாயில்
எனது உயிர் எனக்குச்சொந்தமற்றுப்போகலாம்
அல்லது
உனது உயிர் உனக்குச்சொந்தமற்றுப்போகலாம்..


என காதல் கடிதம் எழுத வேண்டிய துயரம், காதலை மெத்தைகளின் வித்தைகளாய்ப் பார்க்கும் கவிஞர்களுக்கு நெருப்புத் தலையணையாய் தகிக்கக் கூடும்.

தற்கொலை செய்வது கூட மிகவும் கடினமாகிப் போயிருக்கிறது என புலம்பும் கவிஞர்


பத்தோடு பதினொன்றாய்
பயந்த காலம் கொளுத்திடுவோம்
கைகளெல்லாம் துணிந்தபின்னே
கயவர் தலை அறுத்திடுவோம்


என விறகுக் கூட்டிலிருந்து கூட முளைத்தெழும் நம்பிக்கைச் செடியாய் துணிச்சலின் பச்சையத்துடன் தன் கவிதைப் பயணத்தைத் தொடர்கிறார்.


ஒவ்வோர் கவிதையின் வழியே பயணிக்கும் போதும் உருகிப்போன தார் சாலையில் சிறகுகள் ஒட்டிக் கொள்ள கதறித் தவிக்கும் ஓர் சிட்டுக் குருவியின் படபடப்பும், எந்த நேரம் எந்தச் சக்கரம் அதை நசுக்கிவிட்டு சலனமே இல்லாமல் போய்விடுமோ எனும் தவிப்பும் மனதை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

ஒப்பாரிக் குரல்கள் உறைந்தும், உலவியும் கிடக்கும் தனிமைத் தீவுக்குள் தரையிறங்கும் கால்களாகவே விரல்கள் வியர்க்கின்றன.

கவிஞர் நிந்தவூர் ஷிப்லி ஓர் இனத்தின் கனத்தை கவிதைகளில் சுமக்க வைத்திருக்கிறார். ஓர் அழுகுரலின் மொழிபெயர்ப்பைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

கவிஞரின் அடுத்த தொகுப்பு துயர தினங்களைத் தாண்டிய மக்களின் ஆனந்தக் குரல்களின் அழகிய தொகுப்பாய் இருக்க வேண்டுமே எனும் பிரார்த்தனையே மனதுக்குள் நிரம்பி வழிகிறது.

-----

சேவியர், தமிழ்நாடு.


 
 
book
  கவிதைகளுக்கான விமர்சனங்கள்
  பெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
  காணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
  சமரின் ஆயுதங்களும் அவற்றின் இடையறாத ஓசைகளும் தான் வாழும் பூமி கானகமெங்கும் விசிறப்பட்ட வலியைச் சொல்கிறது.
  வியாபித்திருக்கும் யுத்தத்தின் குரூர முகங்களை வட்டமிட்டுக் காட்டி, வாசிப்பவரை விழிகசியச்...
  அகிலனின் கவிதைகள். எல்லாத்தளங்களிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிற புரிதலின்மை அல்லது தவறான புரிதல்கள...
  “நிலா பெண்ணல்ல
ஏனென்றால்
பெண் கற்பைக்
கடன் வாங்குவதில்லை” என்று புதிய மாதவி எழுதியிருக்கிறார்
  உனக்கும் எனக்கும் என
உன்னச் சுற்றி என்னச் சுற்றி உள்ள தனித்தனி சிறு சிறு அரண்களுக்குள் ரகசியமாய்..
  போதுமானவைகள் போதுமான அளவில்
பரவலாக்கப் படாதவரை,
தேவயற்ற தேவகள்
தடுக்கப்படாதவரை,
சிறுளி பெருவெள்ளமே
மேலும்...            
விமர்சகர்கள்
pointதேவகாந்தன்
pointதிவ்வியகுமாரன்
pointவெலிகம ரிம்ஸா முஹம்மத்
pointசேவியர், தமிழ்நாடு
pointகவிதைப்பித்தன்
pointதுர்க்கா தீபன்
pointவி.ஏ. ஜுனைத்
pointசு. குணேஸ்வரன்
pointஆங்கரை பைரவி
pointதமிழ்நதி
pointராஜமார்த்தாண்டன்
pointடாக்டர் 'ஜின்னாஹ்' ஷரிபுத்தீன்
pointதாஜ்
pointஆரவாரம்.க.தே.தாசன்
pointமுல்லை அமுதன்
pointஇரா.பச்சியப்பன்
pointபா.விஜய்
pointஆழியாள்
pointநிந்தவூர் ஷிப்லி
pointஏ.எம். ஜஃபர்
pointகே.எஸ். சிவகுமாரன்
pointகலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
pointஎன்.செல்வராஜா
pointஅம்பலவன் புவனேந்திரன்
pointக.வாசுதேவன்
pointபழநிபாரதி
pointமு.மேத்தா
pointவே. தினகரன்
pointராசு
pointஊர்வசி
pointகன்னிக்கோயில் இராஜா
pointசெ.க.சித்தன்
pointஎன்.இபி. - இந்தியா
pointபெஞ்சமின்
pointத. பழமலய்
pointறஞ்சி (சுவிஸ்)
pointசாஜகான்
pointபஹீமா ஜஹான்
pointதீபச்செல்வன்
pointஎம்.ரிஷான் ஷெரீப்
pointசெந்தமிழ், சென்னை
pointமு. பழனியப்பன்
pointதேவமைந்தன்
pointஅன்பாதவன்
point பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
pointஸ்ரீமங்கை
pointகருணாகரன்
pointபுதியமாதவி, மும்பை
pointசித்தார்த்
pointநா.முத்து நிலவன்
pointபுகாரி
pointநளாயினி
pointரவி (சுவிஸ்)
pointநிர்வாணி


கவிதைத்தொகுப்பு தொடர்பான உங்களின் விமாசனங்களை பிரசுரிக்க விரும்பினால் அனுப்பிவையுங்கள். அனுப்பவேண்டிய விபரங்கள் உள்ளே
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்