Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: மாசி 06, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 462 கவிஞர்கள் , 2079 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointகரு சொன்ன கதையிது
ஜெஸ்வந்தி
red pointஅரசன் கொண்டு வந்த பழங்களுக்காக
தீபச்செல்வன்
red pointமழையும் நானும்
குரு
red pointநிஜம்
யாயினி , கனடா
red pointவரம் வேண்டும்
எம்.பாலா
red pointஇறுதி இரவும்.. விளையாட்டுச் சங்கிலி
ப.மதியழகன்
red pointகாவேரி அக்கா
வேல் கண்ணன்
red pointமாறாத தீர்ப்புகள்
இரா. தாமரைச் செல்வன், சேலம்
red pointகனவு.. கலையாய் ஒரு கதை
கவிதா. நோர்வே
red pointகைம்மாறு
பொலிகையூர் சு. க சிந்துதாசன்
red pointதொடர் கதை
வேதா. இலங்காதிலகம்
red pointதூசு.. தலையில்லா..
ஈழநிலா (இலங்கை)
red pointயாரோ போட்டு முடித்து
துவாரகன்
red pointவாழ்க்கை
பாரதிமோகன்
red pointதேடல்.. பவனி.. பாத்திரத் தேர்வு
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointஇன்னுமொரு..உயிர்த்தெழு.. காத்திரு
நடராஜா முரளிதரன், கனடா
red pointகாகித‌ம்.. மெர்க்குரிக் கனவு.. இள‌மை
ராம்ப்ரசாத், சென்னை
red pointஜனநாயக அடிமை.. வெல்லத் தமிழினி
மன்னார் அமுதன்
விமர்சனங்கள்
red pointஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
red pointயுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
red pointபோர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-02-10 
picture for poem
சிங்கப்பூர் - ஜுரோங் தீவு
அத்திவெட்டி ஜோதிபாரதி
  இவரின் பிற கவிதைகள்
 
சிங்கப்பூர் - ஜுரோங் தீவு
---------------------------------------

சிங்கை ஈன்றேடுத்தக் குழந்தை
சிங்கை இராணுவத்தின் தத்துப்பிள்ளை

மண்ணால் உருவான
மாபெரும் சமுத்திரம்

சிறப்பு அனுமதியுடன் -ஒரு
சிறிய பயணம்

கப்பல் பட்டறைகளின் கற்பனை உலகம்
கற்பனை செய்ய முடியாக் களப்பணிகள்

சாரக்கட்டுகளில் சறுக்கு விளையாட்டு
கோரம் நடக்கும் என குறி கூட தெரியாமல்

கொடிய வாயுக்களிடம்
குசலம் விசாரிப்பு

எல்லா வேலைகளும் இங்கு கிடக்கும்
எண்ணெய் தொட்டிகளும் இதில் அடக்கம்

வெல்டிங் வேலையும்
விவேக சிந்தனையும்

மின் தூக்கி இல்லா மிடுக்கான பயணம்
பாரந்தூக்கி மட்டுமே இப்போது
நம் பாரத்தை தாங்கி

எறும்புகளாய்
எம் உழைக்கும் வர்க்கம்

எண்ணிலடங்கா எண்ணெய் நிறுவனங்கள்
என்னைப் பிரமிக்க வைக்கும் எழில்

பூங்கா போன்ற காட்சி -அதற்கு
புகை மட்டுமே சாட்சி

ஓசோன் காக்கும் ஆசான் -அந்த
ஒரே நாடு சிங்கை

மாசு இல்லை இங்கு -மண்
தூசு இல்லை எங்கும்

பொருளாதாரப் பொழில் -அது
பொங்கிவரும் எழில்

விசாலமான சாலையில்
வாகனங்கள் மட்டும் காற்றுடன்
வெற்றிடத்தை மட்டும் பார்த்தேன்
வேறு யாரும் அங்கு இல்லை

தீயணைப்பு வண்டிகளின்
தியாக அணிவகுப்பு

அவசர நிலைக்கான
அயராத விழிப்பு நிலை

முதலுதவிக்கான
முன்னேற்பாடு

உழைக்கும் வர்க்கமே
உழலும் சொர்க்கமே

வந்தது நமக்கு வியர்வை -அது
தந்தது நமக்கு உயர்வை

குருதி வருமென்றாலும் -அது
இறுதி அல்லவே

உழைப்பு மட்டுமே உறுதி -நம்
உன்னத வாழ்க்கையைக் கருதி

-அத்திவெட்டி ஜோதிபாரதி
Email:jothibharathi@yahoo.com





கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்