Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2009-07-23 
picture for poem
தீர்க்கதரிசனம்.. அரசிலையின்..
மனோ.மோகன்
தீர்க்கதரிசனம்
--------------------

யாருமற்ற
இதுபோன்றதொரு இரவின் தனிமையில்
பத்து செண்டிமீட்டர் உயரமேயுள்ள
பூனைக் குட்டியொன்றைப் பரிசளித்தாய்
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்
வார்த்தைகள் ஏதுமில்லை அன்று
புகை படிந்த சாம்பல் நிறம் கொண்ட
அந்தப் பூனையின் 'மியாவ்' வைத் தவிர

நான் குடிக்கும் பால் அதற்கென்றானது
என் தலையணை அது உறங்குவதற்கென்றானது
கட்டிலில் அவிழ்த்துப் போட்ட என் உடைகள்
அது மூத்திரமிடுவதற்கென்றானது
வாரத்தைகள் அற்ற என்
அறையின் தனிமையை நிறைத்த படியே
பெரும் பசியை அறிவித்துக் கொண்டிருந்தது 'மியாவ்'
பகல் பொழுதில்
கபாலத்திற்குள் ஓடி விளையாடுவதும்
படிக்கும் புத்தகத்தில் தாவிக் குதிப்பதுமென
என் காலத்தைப் புசித்துக் கொண்டிருந்தது பூனை

இன்றைய அந்தியில்
ஓரிரு முறை உன் போர்விமானம் கடந்தபின்
புகை படிந்து சாம்பல் நிறம் கொண்ட
என் தெருவின் சிதிலங்களூடே
உன் துரோகங்களைத் தீர்க்கதரிசனம் சொல்லும்
வார்த்தைகள் ஏதுமில்லை
'மியாவ்' வும் கூட இல்லை


அரசிலையின் யுத்த தருமங்கள்
----------------------------

போதி மரத்திலிருந்து
உதிர்ந்த அரசிலையொன்றில் புத்தனின் கறிக்கடை
கிடைத்த குடல் துண்டுகளோடு
பறந்து விட்டிருந்தன காக்கைகள்
வேறேதேனும் எலும்புகள் சிதறியிருக்கிறதாவென
மோப்பமிட்டபடியே எஞ்சிய சில நாய்கள்
விற்பனை முடிந்த கணத்தில் கறிக்கட்டையில் ஏறி நின்று
யுத்த தருமங்களை உபதேசித்தான் புத்தன்
குருட்டுப் பைத்தியக்காரனைப் போல
இலக்கற்று இருள் கவியும் கணத்தில்
மூன்றாம் நாள் உயிர்த்தெழுதலின்
கனவோடு கொல்லப்பட்டிருந்தான் மெசியா



கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  மனோ.மோகன்   நாடு   India
தளம்
    திகதி   2009-07-24
[1]
மதிப்பிற்குரிய இதழாசிரியருக்கு! கவிதைகளைப் பிரசுரித்ததற்கு நன்றி. என்னுடய தீர்க்க தரிசனம் , அரசிலையின் யுத்த தருமங்கள் என்னும் இரண்டு கவிதைகள் ஒரே கவிதை என அர்த்தமாகும்படி பிரசுரமாகியுள்ளன(கவிதைகளை நான் இலக்கமிட்டு அனுப்பியிருந்தால் இந்தத் தவறு நேர்ந்திருக்காதென்று உணர்கிறேன்). இரண்டாவது கவிதைக்கு அடிக் கோடிட்டு இந்தப் பிழையைத் திருத்திக் கொள்ள முடியுமென்றால் பெரிதும் மகிழ்வேன். நட்பை வளர்ப்போம் நன்றி மனோ.மோகன் manomohan1982@yahoo.com
 
பெயர்
  கலைச்செல்வி   நாடு   India
தளம்
    திகதி   2009-07-24
[2]
அரசியல் கவிதைகள் பிரச்சாரத் தன்மையோடு வெளிப்படையாக இருந்ததைப் பார்த்துப் பழகிய வாசக மனதுக்குப் புனைவினூடாக அரசியலைப் பேசும் இந்தக் கவிதை புதிய திறப்புகளை உண்டாக்குகிறது. இது போன்ற கவிதைகள் இன்னும் அதிகமாய் வர வேண்டுமென்று எதிர்பார்க்கிறேன். கலைச்செல்வி
 
பெயர்
  பிரபா   நாடு   India
தளம்
    திகதி   2009-07-27
[3]
நண்பர் மனோவின் இரண்டு கவிதைகளுமே அற்புதம். அதிலும் தீர்க்கதரிசனம் சிந்தையை கவர்ந்தது. வாழ்த்துக்கள். . . -புதுவைப்பிரபா-
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2012-10-20
[4]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[5]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (5)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்