Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
red pointபாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
red pointதமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
red pointஎன்னுள்ளே
சுடர்விழி
red pointதூயவள்
வல்வை சுஜேன்
red pointபிச்சைக்காரி.. அவ‌ளின் பிர‌ம்ம‌ன்
ராம்ப்ரசாத், சென்னை
red pointஅழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
red pointஇறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
red pointரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
red pointஅரங்கேற்றம்
கணபதி
red pointசில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
red pointஎல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
red pointவயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
red pointபணம்
வேதா. இலங்காதிலகம்
red pointசும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
red pointகாணவில்லை
வேல் கண்ணன்
red pointஅடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
red pointதேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-05-26 
picture for poem
எனை சுட்டுப் .. விழுங்கித் தொலைத்த
வித்யாசாகர்
  இவரின் பிற கவிதைகள்
 
எனை சுட்டுப் போட்ட சமூகம்.. விழுங்கித் தொலைத்த மானுடம்!!

01.
எனை சுட்டுப் போட்ட சமூகம்
---------------------------------

ஏதோ ஒரு கவிதையின்
கிறுக்கலில் -
கொட்டிவிட இயலாத
உணர்வின் மிகுதியில்
நனைகிறது மனசு.

காதல் கடந்து
வாழ்க்கை கடந்து
இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து
இறக்கப் போகும் அப்பாம்மா வரை
எண்ணி அழுகிற பலரில்
என்னையும் ஒருவராய்
வைத்துக் கொள்ளுங்கள். .

யார் யாரையோ தேடி
எங்கெங்கோ அலைந்து
என்னெனவோ செய்து -
எதிலுமே நிலைக்காத புத்தி
என் தவறா தெரியவில்லை.

மனதின் போக்கு நீளும்
அத்தம் வரை -
கண்ணீரே.. கண்ணீரே.. வென
கடக்கிறேன் பொழுதுகளை
எதற்கென்றே தெரியாமல்.

இன்னும் -
என்னென்னவோ வலிகள்
எப்படி சொல்வதென்றே தெரியாமல்
கனக்கிறது உள்ளே.

அத்தனையையும்
வெளியில் சொன்னால் -
உலகம் வெகு இயல்பாய்
அவனொரு 'சைக்கோ' என்று
சொல்லிவிட்டு -
தன்னை சரியென்று மெச்சிய கம்பீரத்தில்
மேலேறி சென்றுவிடும்.

மனிதர் மெத்தனமாய் இருப்பது
மொத்தமும் புரிந்தும் -
போகட்டும், எதற்கோ வீண்
சிந்தனை என்று அலட்டிக்
கொள்ளாமல் விடாதலில் -
தனிமை கொன்று வீழ்த்தியும்
யாருடமே பேசுவதில்லை நான்.

உண்மையில் -
எனக்கான கவலையென்ன?

உணவோ
உடையோ
சுகமோ துக்கமோ என்றால் -
பளீரென இல்லை என்று தலையாட்டலாம்.

பிறகென்ன; ஏனிந்த
பிதற்றல் என்கிறாயா............?

என் கவலைகள் மொத்தமும்
நீ - எனில்
ஏற்ப்பியா என் சமூகமே???


02.
விழுங்கித் தொலைத்த மானுடம்!!
---------------------------------------

"எங்கோ எதற்கோ விழுங்கித் தொலைத்த
மானுடம்..

இரந்து இரந்து
கொடுக்கத் திராணியின்றி
வாங்கத் துணிந்த மானுடம்..

களவு செய்து
கபடமாடி
கற்பு பறித்து; தொலைத்து;
கயவரோடு கூடி
காலம் போக்கும் மானுடம்..

எடுத்து வீசத் துணியாத
விட்டு ஒழிக்க இயலாத
உடலை -
பிடுங்கியும் புலம்பும்
பிரிந்தும் பிறரை நோவும்
சுயநல மானுடம்..

பகுத்துப் பாராத கேள்புத்தி -
அறுத்தெறிய முடியா ஆசைகள்
பிரித்துத் தர இயலாத மனசு
எடுத்துக் கொடுக்க வக்கின்றியும்
தனக்கு மட்டுமே ஓலமிடம் மானுடம்..

ஆறடி மிஞ்சாத மண்தின்று
காலடி பதியாத வாழ்க்கைக்கு
நோயிற்கும் பேயிற்கும் பயந்து
யாருக்கும் பயனின்றி - போகும் மானுடமே..

காலம் மென்று மென்று விழுங்கி
விதைத்த விதைப்பில் -
வாழ்ந்த அடையாளமின்றி மாளும்
மானுடமே.. மானுடமே..

எல்லாம் ஒழி;
எல்லாம் அறு;
எஞ்சியிருக்கும் மனிதம் காக்கவேணும்
சுயநலம் குறைத்து வாழ்"
என்று சொல்ல -
எனக்கென்ன உரிமையுண்டோ; உன்னிடத்தில் மானுடமே!!


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  கோவை மு சரளாதேவி   நாடு   India
தளம்
    திகதி   2010-06-18
என் கவலைகள் மொத்தமும் rnநீ - எனில் rnஏற்ப்பியா என் சமூகமே//தன்னை மட்டும் நினைத்து தான்தோன்றி தனமாக இருபவர்கள் மத்தியில் சமூகத்தின் அகறைக்காக கவலைப்படும் உங்களை நினிகையில் பெருமை எனக்கு
 


 

கருத்துக்கள் (1)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்