Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2011-01-01 
picture for poem
வானும் எனதும்.. என்னுடையது
ப.குணசுந்தரி தர்மலிங்கம்
  இவரின் பிற கவிதைகள்
 
வானும் எனதும்.. என்னுடையது

01.
வானும் எனதும்
-------------------------

நானும் எனதும்
சுழியில் விரிந்து
விளிம்புகளை இழக்கும்
நீருருவாய் பேச்சு

அவளின்
இதுவரையிலான ஆதங்கத்திற்கு
வடிகாலாகவும் இருக்கலாம்

உறுத்து விழிக்கும்
ஆங்காரத்துள் ஏமாற்றம் விரிய
உயிர்காற்றில்
பிசுபிசுக்கிறது தோற்றம்

இனமறியாத
மனத்தின் நெருடலில்
எதிர்பார்ப்புகள் மொன்னையாக
ஏற்பும் மறுப்பும் வெறுமையாக்குகிறது.

திடீரென கனக்கும்
நெஞ்சுக்கூட்டில் சமாதானமாகாமல்
பிசைகிறது கண்டம்

கண்முன் விளக்கமாகும்
மண்ணுடனான உறவில்
ஒவ்வொரு மணித் துளியிலும்
பதிய விரும்புகிறேன்

அதிர்வின்
காலமும் அகலமும் கணிக்க
கரையை அகலப்படுத்தினால்
உள்சரிகிறது மணல்

முகச்சுருக்கத்தில்
அழுவதுகூட அவமானந்தான்.

நடப்பை
இமைக்குள் நிருத்தி
சவமாய் கிடைக்கையில்
முடியாததும் புரியாததும்
மண்ணில் அழுந்த
கைகளின் பிணைப்பை
நெற்றியில் தாங்கி
விண் என்ற தெரிப்பில்
நிதானமாய்
சுவாசிக்கிறது மனது

பார்த்ததும்
சுருக்கத்தைக் கண்ணீராக்குகிற
நட்பைப் பெறவில்லை

மயிர்க்கால்களில் ஊறும்
உவர்க்கசிவின் எரிச்சல்
மண்ணின் தொடர்பருந்த
உயிர்களின் தொகையில்
அச்சம் தருகிறது.

உவப்பிலியாகச் சபித்தாலும்
சுற்றியுள்ளவை
அதனதன் செயல்களில்
முனைப்புடன்

வவ்வாலின் எச்சத்தை
நினைவுறுத்துகிறது
மண்ணேறிய வியர்வையும்
நெடிதுயிர்ப்பும்.



02.
என்னுடையது
------------------------

அதைப் பற்றிய பயம்
இருந்தது இல்லை
பெரிசா எனக்குப் பட்டது.
எதையும் சொல்லக் கேக்கிறதை விட
பட்டுத் தெரிஞ்சிக்கணும்னு
சொல்லுகிற தாத்தா
எப்பவும் நெனப்புல.

என்னிலிருந்து
கரைந்து போகிற
உயிர்ப்புக்காக வருத்தப்பட்டதில்ல
நெனச்சும் பார்த்தது இல்ல.

புத்தகத் தூசியும்
தட்டினாத்தான் உதிரணுங்கிற
நெனப்ப மீறி
ஒவ்வொரு முறையும்
அது தானே நிகழுது.

கிழிஞ்சது
கிழியாதது எல்லாம்
என் பகுதியில் பத்திரமாய்
தாத்தாவையும்
மிஞ்சிட்டன்னு சொல்லுகிற
அவ பார்வை
எனக்குள்ள அரிக்கிது.

வயசானவங்க
குழந்தைக்குச் சமம்

எதிர்த்த வீட்டு லட்சுமி பாட்டி
எப்பவும் குழந்தைதான்ற
பாப்பம்மாவின் பூசணி வாயில்
கைகால்களை நீட்டி
அருவருப்பாய் நெளியும் அது.

அனுமதியினைத் தாங்கி
அடையாளமிடப்பட்ட பொருட்களுள்
ஒன்றாய் அதுவும்.

வரவை நோக்கிய இருப்பு
முழுமை அல்ல
இரண்டன் கலப்பே முழுமை
அதுவா இதுவா
எளிதில் வசப்படாத கருத்து
எப்பொழுதாவது
அலைக்கழிக்கிறது.

இருப்பை அந்நியமாக்கும்
உரு தரும் முழுமையில்
விலகி நிற்க இயலாது
எதன் சார்பிலும்
யாருக்காகவும்
இழப்பதற்குமில்லை.

அது என்னுடையது
ஒவ்வொரு முறையும் தானே நிகழும்



கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[1]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (1)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்