Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2011-07-03 
picture for poem
ஊதா நிற.. கவிஞனின்.. வாழ்தலை
சமீலா யூசுப் அலி, மாவனல்லை
  இவரின் பிற கவிதைகள்
 
ஊதா நிற யானை.. கவிஞனின் மனைவி.. வாழ்தலை மறந்த கதை

01.
ஊதா நிற யானை
--------------------------

சுத்தமாய் வெள்ளைத்தாள்
சிதறிய கிரெயோன் கலர்கள்
இரண்டு கோடுகள்
ஒரு கோணல் வட்டம்
நம்பிக்கையோடு
யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று
குழந்தைக்கோ கர்வம்
ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று.
யானைக்கு ஊதாநிறமா?
அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை
இரண்டு கால் யானை எங்குள்ளது
அடித்துத் திருத்தினார்
குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக
அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க
நடந்து போனார் ஆசிரியை.


02.
கவிஞனின் மனைவி
-------------------------------

அபூர்வமான சொற்களைப் பின்னும்
பொன்னிற சிலந்தி அவன்
ஆறும் தேநீரை மறந்து இரவிரவாய்
நூற்காடுகளுக்குள் மல்லாந்து கிடப்பான்.
திடும் மென அவள் தாகித்தெழும் நடுநிசி பொழுதுகளில்
அவன் விரல்கள் தாளில் முளைத்துக்கிடப்பதைப்
பார்த்தவாறே உறங்கிப்போவாள்.
அவன் எழுதும் எதையும்
அவள் வாசித்ததில்லை
அவனது விசாரங்களும் தனித்துவமான
சிந்தனைகளும்
அவளுக்குப் புரிந்ததேயில்லை.
அதிகம் பேசுவது அவனை
ஆத்திரமூட்டும்.
அவள் மொழி மறந்தவள் ஆயினள்.
கிராமத்துக்கிளி மொழிகள்
மட்டுமே தெரிந்த அவள் அந்த நாலுசுவர் கூட்டுக்குள்
அடங்கியிருந்தாள்.
சமைப்பதும்,துவைப்பதுமாய் அவள் துருப்பிடித்து
சாகத் தொடங்கிய ஒரு பொழுதில்
அந்த ‘அதிசயம்’ நிகழ்ந்தது.
புழுங்கிய சமையலறையில்
நெடுங்காலமாய் திறவாதிருந்த
‘ஜன்னல்’ தான் அது
அதனூடே அவள்
அடர் காட்டு மூங்கிலின் பாடலையும்
வானவில் எழுதும் ஓவியங்களையும்
வாசிக்கத் தொடங்கினாள்.


03.
வாழ்தலை மறந்த கதை
-------------------------------

அவளிடம் சொன்னேன்
அடுப்படி தாண்டு
பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக
விஷயங்கள் இருக்கின்றன
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்
வித்தை சொல்லித் தருகிறேன்
அவள் வந்தாள்.
சுமக்க முடியாத சங்கிலிகளையும்
முடிவற்ற சந்தேகங்களையும்
சுமந்து கொண்டு
மிகுந்த பிரயாசையோடு
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்
நீண்டு நெடித்தலைந்தன.
இனி என்ன
களைப்போடு கேட்டாள்.
இனி நீ வாழத் துவங்கு
வாழ்தல் என்றால்
அயர்வோடு நோக்கினேன்.
அவள்
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன.


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  kalmunayan   நாடு   Sri Lanka
தளம்
    திகதி   2011-07-15
[1]
அருமை நண்பி உங்களின் கற்பனை...
 
பெயர்
  மன்னூரான்   நாடு   Sri Lanka
தளம்
    திகதி   2011-07-16
[2]
சகோதரி!
என்னை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் நான் உங்களை உங்கள் பள்ளிப் பருவம் முதலே அறிவேன் (முகம் கண்டதில்லை). பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் சாகித்திய விழாப் போட்டிகளில் நானும் 98ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை பங்குகொண்டு கவிதையாக்கம் மற்றும் பாடல் இயற்றுதல் என்பவற்றில் பங்குகொண்டு சான்றிதழ்கள் பெற்றேன். அக்காலப் பகுதியில் உங்களையும் உங்கள் கவிதைகளையும் அறிய முடிந்தது. இடையிடையே உங்கள் ஞாபகம் வருவதுண்டு. இன்று வார்ப்பில் உங்கள் பெயரைக் கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி. கவிதைகள் மூன்றையும் வாசித்தேன். நல்ல முன்னேற்றம் தெரிகிறது. வாழ்வின் யதார்த்தங்களையும் சமூகத்தின் தேவைகளையும் பிரதிபலிக்கும் கருப்பொருட்களைக் கையாண்டிருக்கிறீர்கள். கவிதைத் தொகுதி ஏதேனும் வெளியிட்டிருக்கிறீர்களா? உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள்! எனது இயற்பெயர் S.H.M.ஷிஹார். சென்ற மார்ச் மாதம் வெளியீடு செய்த எனது கவிதைநூலின் அட்டைப்படத்தை வார்ப்பின் வாசலில் பார்க்கலாம்.
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2012-10-20
[3]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[4]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (4)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்