Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2018
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2011-07-30 
picture for poem
கருக்குகள்.. இரசிகர்கள்
ஈழநிதி
  இவரின் பிற கவிதைகள்
 
கருக்குகள்.. இரசிகர்கள்

01.
கருக்குகள்
---------------------

சமையலறையிலும்
சைவம் அசைவமென
சமைக்கும் சட்டிகளிலும்
சாதிகள்வைத்தோம்.
மாட்டைத்தொழுபவன்
மனிதனைத்தின்கிறான்
மாட்டைத்தின்பவன்
மனிதனைத்தொழுகிறான் .
சுற்றிவரக்கடலிருநதும்
கடற்தொழிலாளி கறிவைப்பது
தகரத்தில் அடைக்கப்பட்டமீனில்.
கங்கையை,நதியை
கடலுக்குப்பாய்சும் நாட்டில்
என்றும் குடிநீர்ப்பஞ்சம்
தெனனாசியாவின்
அரசியல் விளையாட்டரங்கு
இலங்கை.
கடவுளின் கைகளில்
ஆயுதங்கள்
அவரவர் தற்பாதுகாப்பிற்காக.02.
இரசிகர்கள்
---------------------

மரத்திலிருந்து
ஒருகிளையையேனும்
ஒடிக்கப்பயமாயிருக்கு,
மர உரிமையாளன் ஏசுவானென்று...
கடிக்கவரும்
நாயைஅடிக்கவும் பயமாயிருக்கு,
நாயுரிமையாளன் அடிக்கவருவானென்று...
மனிதனைவதைப்பதும் கொலைசெய்வதும்
மிகச்சுலபமாயிருக்கின்றது
யாரும் கேட்கமாட்டார்கள்
யாருக்கும்பயப்படத்தேவையில்லை .
கொலைசெய்பவன்
பெரியமனிதனாய்,சாதனையாளனாய்
மதிக்கப்படுகிறான்,போற்றப்படுகிறான்
விரும்பியோ விரும்பாலோ
நட்புகள்சேர்கின்றன.
தமிழ்ச்சினிமாவில்
ஒருவனைஒருவன்
அரிவாளால் வெட்டி
வாளில்வடியும் குருதியை
விரலால்வழித்து
மீண்டும்வெட்டி
குருதிமுகத்தில்த்தெறிக்க ...
கலையைக்கொலையாக்கி
சினிமாவினூடாக
கொலையைக்கலையாக்கி...
கலைஇரசனை கொலைஇரசனை
பழக்கமாகி வழக்கமாக
அதுவேவாழ்வாகி
கொலை இரசிகர்களாகிவிட்டோம்.


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2012-10-20
[1]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[2]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (2)சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2018 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்