Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2012-01-19 
picture for poem
பம்பரம்... முகவரி
படைவீடு அமுல்ராஜ்
பம்பரம்...முகவரி

01.
பம்பரம்...
-----------------

கென்னிப்பன் வூட்டு
ஐயப்பன மிஞ்சரதுக்கு
ஒருத்தனும் இருந்ததில்ல ஊருல ...

அவங் செதுக்கித்தர
பொம்பரத்துக்கு
ஒரு கூட்டம்
எப்பயும் அவங்கூட சுத்தும் ...

பொம்பரத்துக்கினே
காட்டுக்குப் போவாங்க ...
பொர்சிமரம்தான்
பொம்பரத்துக்கு எத்ததுன்னுவாங்க ...

சிலநேரத்துல
அவுஞ்ச,
கொடுகாலி,
துரிஞ்ச மரங்கள தேடுவாங்க ...

பொம்பரம் செதிக்கித்தரகேட்டா
ஆணி உனதா, என்தான்னு கேப்பாங்க
ஆணிய நாங்குத்தா ஒன்னார்ருவான்னுவாங்க
ஆணிய அவனே அடிச்சி செதுக்கித்தந்தா
ரெண்ருவான்னுவாங்க ...

தெருமுழுக்க
அவங் செதுக்கன பொம்பரந்தாங்க வெளையாடும் ..

அவங் வெச்சிருந்த
சட்டித்தல பொம்பரத்த
ஒருத்தனும் ஒடச்சதில்ல தெருவுல
தரையில வுடாமலே
கையில ஏந்தி அழகுகாட்டுவாங்க ...

இப்பயெல்லா
ஒரு பொம்பரத்தையும் தெருவுல பாக்கமுடியல
ஐயப்பங் மட்டும்
காட்டுக்கு போறத நிறுத்தல...

இன்னமும்
அவங் கொடுவா சத்தம்
அந்த காட்டுமரங்கள்ள
கேட்டபடிதாங் கெடக்குது ...

ராவெல்லாம்
எரியும் சாராய அடுப்புக்கு
அவங் வெட்டியார்ர வெருவுதாங்க
நின்னு எரியுதாம்


02.
முகவரி
------------

கை வலிக்க
கொஞ்ச தூரத்திற்கொருதரம்
கைப்பை சுமையை
இறக்கி கொண்டுவரும்
முகமறியா
சகோதரியிடத்து
''கொடுங்கக்கா நாங் தூக்கியார்றங்''
எனச் சொல்லியபோது
அவள் பார்வையில் தெரிந்தது
திருடன் என
என் முகம் ....


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2012-10-20
[1]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[2]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (2)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்