Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2012-11-29 
picture for poem
காதல் வேர்
அணு
காதல் வேர்
-------------------

ஒரு தலை ஆண் காதலில் பழகிய சமுதாயம்
பெண் காதல் காவியம் படைக்கும் அதிசயம் கண்டால் என்ன?

இரவுக்காக வாழ்ந்துவிட்டு இறந்து போகும்
விட்டில் பூச்சியின் ஆயுள் போதும் எனக்கு
உன் உறவுக்காக வாழ்ந்துவிட்டு இறந்து போக.

இதுவரை தோற்றதில்லை யாரிடமும்
உன் கடைவிழிப்பார்வையில் தோற்றுப்போவேன்
என்று கனாவும் கூட கண்டதில்லை.

'உனக்காகவே வாழ்கிறேன்' என்று நீ கூறிய போதும்
பொருந்தாக் காதல் என்று கூறி பொய்யாய் தேற்றிக் கொண்டு
திரையிட்டுக் கொண்டேன் இதயத்திற்கு.

இன்று நீ விலகி நிற்க, தடைகளை தாண்டி
தேடி வருகிறேன் உன் இதயவாசல் நோக்கி.

இதயவலி என்பது உடல் சார்ந்த வலி என்றே நினைத்திருந்தேன்;
இதயவலி என்பது நேசித்தவரை இழப்பதால்
உண்டாகும் உயிர்வலி என்று அனுபவத்தால்
உணர்ந்து கொண்டேன்.

உன்னைக் கடந்து போகையில் களவு போகிறேன் நான்.
என் பேர் சொல்லி அழைக்கையில் உன் அடிமை ஆகிறேன் நான்.
'இது உனக்கு' என்று தரும் போது மகுடம் அணிகிறேன் நான்.
உன் பார்வை கிடைப்பதால் புதிதாய் பிறக்கிறேன் நான்.
ஒருமுறை பார்ப்பதுபோல்; மறுமுறை ஏற்கமாட்டாயா !

உன் முன்னே
எதையோ கேட்பது போல் நின்று ஒரு நொடியேனும்
உன் விழித்திரைகளில் என்னைக் கண்டுபிடித்துக் கொள்வதில்
கொள்ளை மகிழ்வு எனக்கு.

நாம் இருவரும் இவ்வுலகை வலம் வர வேண்டும்
தனிமையில் - நாம் மட்டுமே நம்மோடு;
சொர்க்கம் கொண்டு வரும் உன் உறவோடு
விளையாடித் திளைத்திருக்க வேண்டும்.

காதல் கொடியது என்று கொடி பிடித்து
இன்று உன்னைப் பிடிக்க
கை நழுவியது என் கொள்கை.
யாரை நீ விரும்பினாலும் - நம்புவேன்
நான் உன் தனித்துவம் என்று!

உலகம் சுற்ற ஆசையில்லை
காசு பணம் தேவையில்லை
சொகுசு வாழ்க்கை பிடிக்கவில்லை
மா, பலா இனிக்கவில்லை
என்னை சிறைப்பிடித்து உன்
இதயக் கூட்டினில் அடைத்துக் கொள்ளேன்
வாழ்ந்துவிட்டு போகிறேன் இந்த ஒரு ஜென்மமேனும்.

'ஸ்ரீராமஜெயம்' எழுத மாங்கல்யம் கிட்டும் என்றார்கள்
உன் நாமமே ஜெயம் என்று சுவாசித்துக் கொண்டிருப்பதை
எப்படி சொல்வேன் இந்த உலகிற்கு.

மண ஆசை இல்லை - பிற ஆண்கள்
பிடிக்கவில்லை.
மன ஆசை உண்டு - அதில்
உனக்கு மட்டுமே இடம் உண்டு.

உன் மாற்றத்தால் வருந்தி வாடும்
என் மனதின் நோயால்
உடலில் பசலை படர்ந்திருப்பதை
உணராமலா இருக்கிறாய்?

ஒரே ஒரு முறை காதல் கண் கொண்டு பார்க்கமாட்டாயா
ஏழு ஜென்மங்கள் வாழ்ந்து காட்டுவேன் உனக்காக.

விண்ணில் பறந்தாலும்
மண்ணில் புதைந்தாலும்
என் ஜீவன் உன்னை மட்டுமே தேடும்.

என்னவனின் கூர்மை விழிகளே
என் காதலை அவன் இதயத்திடம் சொன்னால் என்ன?
சிந்தைகளை களவாடிய என்
ஜீவனே, தேற்றுவாயா என்னை உன் காதல் மருத்துவத்தால்!


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  manoranjan   நாடு   India
தளம்
    திகதி   2012-12-29
[1]
காதலை ஒரு வரியில் சொல்லிவிட முடியாது என்பது தான் காதலின் இனிமை
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2014-03-22
[2]
உங்கள் கவிதை நன்று . இதிலும் உங்கள் கருத்தான கவிதையினால் பங்கேற்க கவிஞரே.

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் சனவரி 2015-ல் பிரபல சிறப்பு விருந்தினரால் வெளியிடவிருக்கும் கவிதை நூலில் உங்களை ஒர் ஆசிரியராக நியமித்திருக்கிறோம். இது பற்றிய கூடுதல் தகவல்களை http://www.vahai.myewebsite.com/

என்ற இணைய தளத்தில் படியுங்கள் கவிஞரே.

கவியன்புடன்

- செ.பா.சிவராசன்
 


 

கருத்துக்கள் (2)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்