|
|
|
|
|
|
|
|
|
|
|
சிரிப்பு
அடிமனதின் அழுத்தத்தை
அறவே அகற்றிடும்
அரிர்தாஞ்சன்
நெஞ்ச பாரத்தைக்
கொஞ்சம் குறைத்திடும்
வலி நிவாரணி
பதற்றத்தையும்
படபடப்பையும் போக்கிடும்
புகை போக்கி
சிந்தனைக் குதிரைகளை
சீரிப் பாயச் செய்திடும்
ஸ்காட்ச் விஸ்கி
அக்னி வெயிலின்
உக்கிரத்தைக் குறைத்திடும்
தர்பூசணி
சூறாவளிக் காற்றில்
சுழன்றிடும் வாழையைத் தாங்கும்
சவுக்கு மரம்
அழுபவனையும்
ஆனந்தத்தில் மூழ்கடிக்கும்
அன்னை மடி
நீயும் சிரித்துப்பார்
சிறகடித்துப் பறந்துபார்!
ஜான் பீ. பெனடிக்ட்
வாசிங்டன் DC
jpbenedict@hotmail.com
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|