Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-01-27 
picture for poem
எல்லை.. ஒலிக்காத ஒலி
தஸ்லீமா நஸ் ரீன்
  இவரின் பிற கவிதைகள்
 
மொழிபெயர்ப்பு:
மதியழகன் சுப்பையா
எல்லை
-----------

பிரக்ஞைக்கு திரும்பியதும்
உலகை பார்க்க, நுகர,
உணர, கேட்க வேண்டி
வாசலைக் கடக்கையில்
போகாதே எனத் தடுக்கப்படுகிறாள்

இந்தச் சுவர்களே உனது வெளி
இந்த மேற்கூரை உனது வானம்
இங்கே, சலனமற்ற மதிய வேளையில்
இந்தத் தலையணைகள்
இந்த வாசமிகு சோப்
இந்த டால்கம் பவுடர்
இந்த வெங்காயங்கள்
இந்த ஜாடி, இந்த ஊசி
மற்றும் இந்த நூல்
மற்றும் பூ வேலைபாடுடை
தலையணை உறைகள்
இவைகள்தான் உனது வாழ்க்கை

அடுத்தப் பக்கத்தில்
புலப்படாமலிருக்கும் வாழ்க்கையை
எங்ஙனம் பார்ப்பது?
பின்கேட்டை திறந்து கொண்டு
போகும் அவள்
போகாதே என தடுக்கப் படுகிறாள்.

தோட்டத்து பூங்காவை கவனித்துக் கொள்
இந்த கீரையை, இந்த கொடியை
அடிக்கடி கவனித்துக் கொள்
தவறாமல் இந்த மஞ்சள் ரோஜாவை
கூம்பு ஜாடிகளில் இருக்கும் செவ்வந்தியை
இந்த தூய்மையான பசுமை பரப்பை
இந்த ரசம் சொட்டும் பழச்செடியை
இந்த மணம் வீசும் மண்ணை
இவையணைத்தும் தான்
உனது உலகம்.

-----------------------

ஒலிக்காத ஒலி


எத்தனையோ பொருட்கள் ஒலிக்கின்றன
உடலின் செல்கள்,
நடனமாடுகையில் கொலுசுமணிகள்
மணிக்கட்டில் வெள்ளி வளைகள்
ஜன்னலில் மழைத்துளி விழவே
தாளத்தோடு ஒலிக்கும் கண்ணாடிக் கதவுகள்
மேகத்துடன் மேகம் மோதுகையில்
மின்னல் ஒலிக்கிறது
கனவுகள் ஒலிக்கிறது
அவைகளின் தாள் நேரத்தையும் கவனிக்கிறது
உள்ளுக்குள் அதிர்வேற்படுத்தும்
தனிமை ஒலிக்கிறது
எனது வீட்டில்
பொறுத்தப் பட்டிருக்கும்
அழைப்பு மணியைத் தவிர
எல்லாம் ஒலிக்கிறது.
------------------

மொழிபெயர்ப்பு மதியழகன் சுப்பையா


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  மணிவர்மா   நாடு   India
தளம்
    திகதி   2008-09-24
[1]
நஸ்லிமா கவிதைகளை முதன் முதலில் படிக்கிறேன். பெண்மையின் குரல் குயிலின் குரலுக்கு ஒப்புமை காட்டும் சமுகத்தில்.. அடக்கம் பற்றி போசுவோர் அழுகையை கேட்பதில்லை. பெண்களின் பெருமூச்சையே சாடும் சமூகம் இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கும் இருக்கிறது. நஸ்லிமாவின் கவிதைகள் பெண்மைத்தனத்திற்கெதிரான குரல். நல்ல மொழிபெயர்ப்பு. மதியழகன் சுப்பையாவுக்கு பாராட்டுகள்.
 
பெயர்
  செ.பா.சிவராசன்   நாடு   India
தளம்
    திகதி   2012-10-19
[2]
கவிஞரே .. உங்கள் கவிதை சிறந்த கருத்தோட்டமாக அமைந்துள்ளதால் பாராட்டியே ஆக வேண்டும் . தொடர்ந்து எழுதுங்கள் . வெல்வீர்கள் . நன்றி .உலக கவி சாதனை முயற்சியில் நீங்களும் பங்கேற்கலாமே ... இணையத்தைப் பாருங்கள் தகவலுக்கு http://www.vahai.ewebsite.com/
 


 

கருத்துக்கள் (2)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்