உன்
சிரிப்பொலி சத்தம் கேட்டு
இவ்வாண்டின்
சிறந்த இசையமைப்பாளராக
உனைத் தேர்வு செய்துள்ளது
தமிழ்நாடு அரசு
என் இதயத்தைக்
கிழித்துப் போட்டுத்
தலைமறைவான
கொலைக்காரி
உன்
கூந்தல் வாசம் நுகர்ந்து
மூன்றே நிமிடத்தில்
உன் பட்டுக் குஞ்சம்
கவ்வி நின்றது
போலீஸ் மோப்ப நாய்