|
|
|
|
|
|
|
|
|
|
|
வெண்ணிலவே கொஞ்சம் நில்
வேதனையால் வெந்த என் நெஞ்சத்தை உறங்க வைக்கும்
குளிர்மை எங்கிருந்து பெற்றாய் சொல்
தென்றலோடு உறவாடும் மல்லிகையே !
தூங்க மறுத்து சோகத்தில் தள்ளாடும் என்னிதயத்தை ஓர் நொடியில்
மகிழ்விக்கும் சுகந்தத்தை யார் கொடுத்தார்
நீலவானில் பவனி வரும் வெண்மேகங்களே !
காலகாலமாய் மாறாத காயத்தின் வடுக்களை கணத்தினிலே ஆற வைக்கும்
தூய்மையான வெண்மையை எவ்விடத்தே பெற்றீர்
இரவின் இருளைச் சுட்டுப் பொசுக்கும் சூரியனே !
உன் ஒளியைக் கொண்டு என் மன இருளை விலக்கும்
ஆற்றல் நீ அடைந்தது எப்போ சொல்
புவியில் பசி போக்கும் அரிசியைத் தாங்கி நிற்கும் நெற்கதிரே !
புண்ணான என் எண்ணங்களை ஒரு நொடியேனும்
பூவாக்கும் அந்த பச்சை வண்ணத்தை எங்கே வாங்கினாய்
இறைவா அடுக்கடுக்காய் நீ கொடுத்தாய் சோதனைகள் கருணையோடு
இயற்கைதனை என்னருகில் இருத்தி உரையாடும் மனத்தை நீ எனக்கு
ஈன்றதனால் மட்டுமே இன்றும் நான் இவ்வுலகில் தவழ்கின்றேன்
-- சத்தி சக்திதாசன்
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|