Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: தை 07, 2017
இன்றுவரை :: 678 கவிஞர்கள் , 2869 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஇது என் முதல் கொலை.. சாதி மறு
வித்யாசாகர்
red pointபூனையாகிய நான்…
தக்‌ஷிலா
red pointஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
எம்.ரிஷான் ஷெரீப்
red pointஇயைந்த நிலை
மௌனன்
red pointஇளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
சொ.சாந்தி
red pointவிடைகொடல்
ரவி (சுவிஸ்)
red pointஉன் வரவும் என் மரணமும்..அமைதி
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointகண்ணீர் துளிகள்
ச இரவிச்சந்திரன்
red pointகுறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
மன்னார் அமுதன்
red pointஎமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
எம் . ஜெயராமசர்மா
red pointஆத்மாவின் ஒப்பாரி
இரா.சி. சுந்தரமயில்
red pointசின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
த.எலிசபெத், இலங்கை
red pointஎப்போது என் கோபத்தைக் காட்டுவது?
முல்லை அமுதன்
red pointயாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
கலாநிதி தனபாலன்
red pointஎழுத்துக்கள் இல்லாத புத்தகம்
முகில்
red pointமராமரங்கள்
ருத்ரா
red pointவலி நிறைத்துப்போன... வெறுமை
அக்மல் ஜஹான்
red pointசிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
இனியவன்
விமர்சனங்கள்
red pointஇக் குறுநாவல் முக்கியமாகத் தெரிவிக்கும் அம்சம் ஒன்றே ஒன்றுதான். அது எந்த அரசுக்கும், எந்த அரசாங்கத்துக்கும் இன, மத, மொழி சார்ந்து எந்த பேதமும் இல்லையென்பதுவே.
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2008-04-07 
picture for poem
புணர்ச்சி
துவாரகன்
  இவரின் பிற கவிதைகள்
 
புணர்ச்சி
-----------

முற்றுப்பெறாத கதை
இன்னமும் தொடர்கிறது.
மிக அவசர அவசரமாக
ஒவ்வொருவராக
புணர்ந்து கொள்கிறார்கள்.
புனிதம், அந்தரங்கம் எல்லாம்
அவசர அவசரமாக
தன்நிலை இழக்கிறது.

வீரியம் குறைந்து விடும் என்பதற்காகவோ
முதுமை வந்துவிடும் என்பதற்காகவோ
அழகு குலைந்து விடும் என்பதற்காகவோ
முழுதாக அவிழ்க்காத ஆடைகளோடு
புணர்ந்து கொள்கிறார்கள்.

மூத்திரம் கழிக்கும் சந்துகளில்
வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில்
மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்

வாத்ஸாயனரின் சூத்திரம் எல்லாம் பறந்து போக
எல்லோரா ஓவியங்களின் காட்சிகள் எல்லாம் கழிந்து போக
சொறிநாய்களும்
விரல்கள் இழந்த குஷ்டரோகக்காரனும்
வாயில் வீணீர் வடித்தபடி பார்த்துக் கொண்டிருக்க
எங்கும் புணர்ச்சி.

மூத்திரம் கழிக்கும் சந்துகளில்
வெற்றிலைத் துப்பல் நிரம்பிய சுவர்களுக்கிடையில்
மலக்குழிகளின் வாயில்களுக்கிடையில்

இரவு அவசர அவசரமாக
இருளை விழுங்கிக் கொள்கிறது.



-துவாரகன்.
140920060025



கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  சோனு   நாடு   உங்களுக்குள்ளதா
தளம்
    திகதி   2008-05-04
[1]
//வாத்ஸாயனரின் சூத்திரம் எல்லாம் பறந்து போக எல்லோரா ஓவியங்களின் காட்சிகள் எல்லாம் கழிந்து போக சொறிநாய்களும் விரல்கள் இழந்த குஷ்டரோகக்காரனும் வாயில் வீணீர் வடித்தபடி பார்த்துக் கொண்டிருக்க எங்கும் புணர்ச்சி. // வாத்ஸான்யர் இங்குதான் செய்ய வேண்டும் என புணர்ச்சிக்கு விதிகள் தந்திருக்க வாய்ப்பில்லை. ஓவியங்கள் போலவும் சூத்திரங்களிற்கமையவும் எப்போதும் புணர முடியாது. புணர்ச்சி மனித இயல்பு. அது மூடிய அறைகளுக்குள், நிறை வாசனைத்திரவியங்களுடன், உயரிய இசைக் குறிப்புடன் தான் நடக்க வேண்டுமென்றால் சேரிகளில் மனிசர் புணரவே முடியாது.. யாரும் பார்க்காமல் செய்யணும் என்பதே ஒரு மரபுசார்ந்த மனநிலையின் பாதிப்பாற்பட்டதுதான். புணர்ச்சி எப்போதும் 'மறைவுக்குரியது' அல்லது கலைஞர்கள் அதை 'நடக்க நினைக்கிற அழகிய பின்னணிகளிலேயே' அதை நடத்த வேண்டும். இது ஒரு வன்முறை இல்லியா? துவாரகன் சொல்வதுபோலவோ, சினிமாவில் போலவோ பாடல்களின் துணையுடனா யதார்த்தத்தில் புணர்ச்சி நடக்கிறது? அது ஒரு இயல்பில்லையா.. இந்தக் கவிதையில் அதை ஒரு இயல்பாக விடாத, குற்றமாகவோ அருவருப்பாகவோ பார்க்கிற (தனக்கு விரும்பாத மாதிரி நடப்பதை விரும்பாத) மனநிலை, நிறையக் கவிதைகளில் காணலாம். கவிஞர்கள், மதகுருக்கள், மற்றும் மனிதர்களைப் பொறுத்தவரை அதை குற்றமாகவோ அருவருப்பாகவோ பார்ப்பதிலிருந்து வெளி வர முடிவதில்லை. அதனாற்தான் அதை 'அழகுபடுத்த' பாடாப் படுகிறார்கள்... அழகுபடுத்தப்படாத சூழல்களில் இருப்பவர்களது புணர்ச்சி (இக் கவிதையில் வருகிற குஸ்டரோகியினது அல்லது சேரிகளில்) இவர்களால் தாங்க முடியாது. அதனாற்தான் கவிதையில் -அதை மறைக்க - இரவு அவசர அவசரமாய் இரவை விழுங்குது.. அப்ப, பகலில் நடந்தால்! ~~~~சோனு~~~~
 
பெயர்
  கு.சிதம்பரம்   நாடு   சீனா.
தளம்
    திகதி   2008-05-07
[2]
அழகப் படுத்தாத கவிதை ஆண்மை இல்லா புணர்ச்சி யன்றோ. -கு.சிதம்பரம்,சீனா.
 
பெயர்
  thuvarakan   நாடு   sri lanka
தளம்
    திகதி   2008-05-07
[3]
எனது கவிதை பற்றிய நண்பர் சோனு அவர்களின் கருத்துக்கும் ‘புணர்ச்சி’ கவிதை பற்றிய அவரது வாசிப்புக்கும் நன்றி. நாங்கள் வெளிப்படையாக எதையும் எழுத முடியாத சூழலிலே இருக்கின்றோம். அதற்காக சிலவற்றைப் பதிவாக்காமல் விடமுடியாது. இக்கவிதையும் ஒரு குறியீட்டுக் கவிதை. அப்படிப் பார்த்தால்த்தான் நல்லது. துவாரகன் 07.05.2008
 


 
இவருக்கான விமர்சனம்
துவாரகனின் கவிதைமொழி மிகையேதுமில்லாத, உணர்ச்சிக் கொந்தளிப்பில்லாத, இன்றைய கவிதைக்கான சமன்நிலை.. [ராஜமார்த்தாண்டன்]


கருத்துக்கள் (3)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2017 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்