இந்த ஜென்மம்
---------------------
பதில்கள்
பல இருந்தும்
மொழிகளின்றி
ஊனமாகிவிட்ட
கேள்விகள்
மீட்ட துடித்த
விரல்களையே
காயமாக்கிவிட்டு
கண்ணீர்விடும்
வீணை நரம்புகள்
இதயத்தில் தங்கி
வெளிவரா
ஆசைகளின்
அன்றாட அவலங்கள்
தோல்வி என
தெரியாமல்
தொடர்ந்து
தீக்கிரையாகும்
விட்டில் பூச்சியின்
விளக்கு காதலாய்
இந்த ஜென்மமும்
நகர்கின்ற
பரிதாப நாட்களும்
- விஷ்ணு
" நீ மட்டும் நிஜமானால் ,... நான் என்றும் நிழலாவேன் "
www.vishnu-vichu.blogspot.com
www.vichu-vishnu.blogspot.com
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|