Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointகனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
red pointஎன் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
red pointஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
red pointமரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointமழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
red pointநழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
red pointஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
red pointசீதனம்.. வேதனை
கல்முனையான்
red pointகனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
red pointமுகமூடிகள்
அ. முகம்மது மீரான்
red pointமண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
red pointபூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
red pointஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
red pointஅரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
red pointஇல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointமானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
red pointதவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
red pointமௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-01-01 
picture for poem
பத்தினி ஓதும்.. அவனும் எனக்கு
வே .பத்மாவதி
  இவரின் பிற கவிதைகள்
 
பத்தினி ஓதும் வேதம்.. அவனும் எனக்கு சொந்தம்

01.
பத்தினி ஓதும் வேதம்
----------------------------

காற்றில் கவிபாடும்
குழலை விரித்து
உனக்கு கம்பளி போட சொன்னாய்

நித்தம் நித்தம்
நிலவு தவழும் மேனியென
நீந்தி போகும் விண்மீன்கள்
எத்தனை எத்தனை ..

என் யௌவன தாள்கள் எல்லாம்
பலரின் மோகன
எழுத்துக்களால் கிறுக்கப்பட்டு
மூலையில் எறியப்பட்டபோது
வருந்தினேன்
என்றோ மூலையில் அமர்ந்ததற்காக .....

யாருக்குத் தெரியும்
என் உடன் பிறப்போடு
உதிரம் கலந்திருக்கலாம்

என் அன்னைக்கும் தெரியாது
தந்தையின் ரெத்தம்
எதுவென்று

என் இளமை பிராயத்தில்
எனக்கு பால் ஊட்ட
என் தாய்
சொல்லிகொடுத்த
அதே சூத்திரம் தான்
அவள் முதுமை பிராயத்தில்
பால் ஊற்றவும்
பின்பற்றுகிறேன்

இரண்டாம் ஜாமத்தில்
மட்டுமே பிழைப்பு
நடத்தும் எனக்கு
இன்னும் புரியவில்லை
பத்தினிகள் ஓதும்
தலையணை மந்திரம் ...

02.
அவனும் எனக்கு சொந்தம்
-----------------------------

நான் அவனை பெற்றெடுக்கவில்லை
நான் அவன் சகோதரியும் இல்லை
அவனுக்கு நான் அத்தை மகளும் இல்லை
அவன் கைபிடிக்கும் மாமன் மகளும் இல்லை
அவன் மடிசேரும் மனைவி என்றும் நிச்சயிக்கப்படவில்லை
எந்த வினாடியும் அவனை பற்றி நினைத்ததில்லை
எந்த ஊரிலும் அவனை பார்த்ததில்லை
கனவில் கூட சந்திக்க விழையவில்லை
அவன் பெயர் கூட எனக்கு தெரியவில்லை
எனினும் நாங்கள் சொந்தமானோம் ..
அந்த மருத்துவமனியில்
மனிதநேய ஊசி வழியாக
என் ரெத்தம் அவன் உடலில் சென்ற பொது




கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்