பூக்களுக்கும், உனக்கும்..
--------------------------
ரோட்டோரமாய் பல முறை
ரோஜாச்செடிகள் வாங்கியதுண்டு.
ஆனால்,
எப்போதும் என் வீட்டு செடிகள்
கருத்தரிக்கும் முன்பே
மரித்துவிடும்!
எப்போதும் சண்டையிடும் உன் கோப
விழிகள்
எப்போதாவது மன்னிப்பு கேட்கும் நாள்
போல,
ஒருநாள் அதிகாலை - அது
அரிதாய் பூப்படைந்தபோது,
அன்று முழுவதும்
பண்டிகை தினமானது எனக்கு.
ஆம்
என் வீட்டு பூக்களுக்கும்,
உனக்கும் சம்பந்தம் இருக்கிறது!
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|