இதுதானா சீக்கிய நன்றி
---------------------------------
வளமிருந்தும்
பசுமையில்லையே பஞ்சாப்பில்
என்ற ஏக்கத்துக்கு
விடையளித்து
ஊக்கமாய் செயல்பட்டு
பசுமைப்புரட்சிக்கு
பக்க உதவியாய் செயல்பட்ட
பச்சைத்தமிழன் காமராசருக்கு
சிலை வைத்து அழகுபார்த்த
சீக்கிய மண்ணே !
அவன் தொப்பூள் கொடி உறவுகொண்ட
ஈழத்தமிழனைக் கொல்ல
ஆயுதம் கொடுத்த...
தேவையெனில்
இன்னும் அள்ளிக் கொடுக்க தயார்
என அறிவிக்கும்
மன்மோகன்சிங் செயல்பாடுதான்
சீக்கிய நன்றியா ?
சாகட்டும் இந்திய இறையான்மை !