தேவைகள் நிறைந்த
வியாபார உலகத்தில் புதியதாய் பல
பொய்கள் சொன்னாலும் - நட்பெனும்போது
உண்மையை மட்டுமே
உரக்கச் சொல்வது நட்பு...
காலங்களின் சூழ்ச்சியில்
கண்பார்க்க முடியாவிட்டாலும்
உறவுகளின் நேச சுழற்ச்சியில்
உறவாட முடியாமல் போனாலும்
இதய கருவரையில் எப்போதுமே
இருக்கும் குழந்தைதான் நட்பு...
நேற்று இன்று நாளை என
நெடுந்தூரம் சென்றாலும்
காற்று வாங்கி களைத்திருக்கும்
கருமைமிகு வானம் களைந்தாலும்
சேர்த்து வைத்த உறவுகள்
சிதறியே போனாலும் நமக்கு
குறையென்று தெரிந்தால்
கூடவே வரும் கோடி நட்புகள்தான்
என்றுமே நமக்கு குறையாத நேசம்....!!