உயிரின் அடிநாதத்தில் எழுகிறது
உனக்கான கூக்குரல் -
குண்டு தொலைக்காத உன் தைரியத்தை
ஒரு கப்பல் தகர்த்ததே சோகம்;
தோல்வி நெருங்கிடாத உன்
ராஜா பாட்டையில் -
ஒரு வெற்றி குறுக்கிட்டு
உயிர் தின்றதே வலிக்கும் ரணமானது;
எதிரியின் உறக்கத்திலும் -
உயிர் தைக்கும் மரணபயத்தை
உன் வீரிய புயலின் வளர்ச்சி கொடுத்தும் - அதை
காலம் தின்று வரலாறு பேசுகிறதே - வருத்தமில்லையா;
இரண்டில் ஒரு கால் இழந்தும்
இரட்டை குழல் துப்பாக்கி ஏந்தி
எவர் வரினும் தவிடு தவிடாக்கிய உன் வீரத்தை
ஒற்றை கப்பல் பறித்துக் கொண்டதே; நியாயமா???
இன்று உலகமறிந்த இந்திய சூழ்ச்சிக்கு
என்றோ பறையடித்து மானம் வென்ற மாவீரா;
உன் உயிர் உறைந்த எம் ஈழ தேசம் -
உன் நினைவுகளால் உன்னை -
எங்களில் உயிர்பித்திருக்குமென்றே கர்ஜிக்கிறோம்!
கப்பல் தகர்த்ததா(?) கடுந்தீ தின்றதா(?) எல்லாம்
வரலாற்றில் இருக்கட்டும்;
இதயத்தில் விளக்காக என்றுமே எரியும்
ஈழ தீபமே; அண்ணன் கேணல் கிட்டுவே;
ஒரு சபதம் புரி;
என்று வரை ஈழ காற்று வீசுமோ
என்று வரை தமிழாள் உயிர் கொள்வாளோ
என்றுவரை ஒரு ஈழ தமிழருக்கான சுவாசம் இயங்குமோ
என்றுவரை தமிழனின் கடைசி சப்தம் அடங்குமோ
அன்றுவரை அத்தனை இதயமும் உனை தாங்கியே
உயிர் பூண்டிருக்கும்;
உனக்காய் ஒரு சொட்டேனும் கண்ணீர்
சொட்டிக் கொண்டே இருக்கும்!!