Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆடி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 496 கவிஞர்கள் , 2223 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointகனவுத் தூதுவன்
எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
red pointஎன் உயிர் நீதானே.. அன்பளிப்பு
வரதப்பிரியை
red pointஆயாசத்துடன் முளைக்கும் ஒரு பகல்
இளங்கோ -கவிதைக்காரன் டைரி
red pointமரணத்தின் வாசல்.. மனசு முழுக்க
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointமழையாக பெய்திடுவோம்
ஈழநிலா, இலங்கை
red pointநழுவுதல்.. உருண்டைச்சோறு
முத்துசாமி பழனியப்பன்
red pointஓற்றைக்கதவும்.. நோர்வே சில தூரம்
கவிதா. நோர்வே
red pointசீதனம்.. வேதனை
கல்முனையான்
red pointகனவென்ன கனவே.. நாளைய பொழுது
ப.மதியழகன்
red pointமுகமூடிகள்
அ. முகம்மது மீரான்
red pointமண் வாசனை
வேதா. இலங்காதிலகம்
red pointபூமியை அழிக்கும் பாதரசம்
வே .பத்மாவதி
red pointஓட்டை பலூன்.. சிட்டு க்குருவி
வி. பிச்சுமணி
red pointஅரேபிய ராசாக்கள்..
ஆறுமுகம் முருகேசன்
red pointஇல்லாத ஒன்று.. இதம் மறந்த.. சீற்றம்
ராமலக்ஷ்மி, பெங்களூர்
red pointமானுட.. மனசுக்குள்.. ஆசை மழை
வல்வை சுஜேன்
red pointதவம்.. பயணம்
மாவை.நா.கஜேந்திரா
red pointமௌன அதிர்வுகள்
நவஜோதி ஜோகரட்னம்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-03-15 
picture for poem
முன்பொரு காலத்தில் இந்த நாள்
தீபச்செல்வன்
  இவரின் பிற கவிதைகள்
 

முன்பொரு காலத்தில் இந்த நாள் எங்களிடமிருந்தது
---------------------------------------------

எந்தப் பறவைகளும் வந்தமராத மரத்தின்
காய்ந்த கிளைகளில்
பழங்கள் காய்த்து கனியும் என்று நம்பியிருந்தோம்.
அம்மா அந்தப் பறவைகளை எங்கேனும் கண்டாயா?
அதன் மரம் நீண்ட காலங்களாய் பட்டுப்போயிருந்தது.
தலைகளில்
ஒடிந்து விழுந்துகொண்டிருக்கிற முற்றத்தில்
இப்பொழுது எந்தத் தடிகளும் இல்லை.
இந்த வருடம்
எங்கள் வீட்டை உடைத்து வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றதுடன்
அச்சம் தரும் நாட்களையே
ஒவ்வொன்றாய் விரித்துக்கொண்டிருந்தது.
வெறும் ஒரு இரண்டு தடிகளைத் தவிர ஒன்றுமில்லை.

பறவைகள் மறந்துபோன எங்கள் கிராமத்தில்
சைக்கிள்கள் உடைந்து உக்கிப்போன எங்கள் நகரத்தில்
ஒரு புன்னகையை பரிமாற
கூடியிருந்து ஒரு கோப்பை மதுவை அருந்துவதற்கு
யாரம்மா இருக்கிறார்கள்.
உன் கைகளில் மலை நேரத்தை கொண்டு வருகிற
தேனீர்க்கோப்பைகளை காணவில்லை.
திரும்பாத கிராமத்திற்கும்
இறங்காத நகரத்திற்கும் ஊடாக செல்லும் பேரூந்தில்
நாளை நான் பயணிக்கப்போகிறேன்.

இந்த நாள் கழிந்துபோன வருடத்தின்
இனிப்பாயிருந்த நாட்களையே ஞாபகப்படுத்துகிறது.
வேடி அதிரும் இரவு இன்னும் சற்று நேரத்தில் முடிவடைகிறது.
யார் யாரே வந்து செல்லுகிறார்கள்.
எனக்கு முன்னால் ஏதேதோ கிடக்கிறது.
முடிந்து போன இந்த வருடத்தில்
ஏராளமானவற்றை இழந்துபோயிருக்கிறோம்.
வார்த்தைகளற்று என் சைக்கில் அலைகிறது
என் வீடு தேடுகிற தெருக்களில்.
முன்பொரு காலத்தில் இந்த நாள் எங்களிடமிருந்தது.

அந்தப் பறவைகளையும்
அதன் பட்ட மரத்தையும் அதன் கீழிருந்த எங்கள் வீட்டையும்
எங்களிடம் தருவார்களா?
பட்ட மரம் எரிந்து சாம்பலாகிப்போக
பறவைகள் அதில் புதைந்து போயிருக்கின்றன.
வீடு கரைந்துபோன கிராமத்து வெளியில்
எந்த அடையாளங்களுமில்லை.
இந்த நாளில் முன்பொரு காலத்தில்
என்னிடம் இருந்த புன்னகையையும் வார்த்தைகளையும்
கோரிக்கொண்டிருக்கிறேன்.
பெருநிலத்தில் புதிய வருடம் நள்ளிரவுக்கு பின் கொண்டு வரப்படுகிறது.
___________________________
01.01.2010 (பெருநிலம் 03)

தமிழ் http://deebam.blogspot.com

ஆங்கிலம் http://edeebam.blogspot.com

விரைவில் சிங்களத்தில் http://deebasingala.blogspot.com/


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 
இவருக்கான விமர்சனம்
தீபச்செல்வனின் கவிதைகள் ஒரு இனத்தின் வலி. காயத்திலிருந்து கொட்டும் குருதி.நெரிபடும் கழுத்திலிருந்து விக்கித்துக் கிளம்பும் ஓலம்... [தமிழ்நதி]
சக மனிதர்களின் வலியைத் தன் வலியாக உள்வாங்கி அதைக் கவிதையாக உருமாற்றி வெளிப்படுத்தும் பேராற்றல் வாய்க்கப்பெற்றவராக.. [தமிழ்நதி]
மேலும் ...
 இவரின் விமர்சனம்
ஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்..
ஒரு படைப்பு எந்த தணிக்கையுமின்றி பிரசுரிக்கப்படுகிறபோதுதான் அந்த எழுத்து வருகிற சமூகத்தின் அசலான தோற்றம் புலப்படுகிறத..




சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்