வசந்தகாலம் வாழ்த்திசை பாடிட
வண்ண மலர்கள் தேனிதழ் மலர்த்திட
வண்டுகள் தேனினை உண்டு களித்திட
வட்டமிட்டு மலர்களை மொய்த்திட
பொழில்களும் பொய்கையும் எழில்களில் நிமிர்ந்திடும்
பொங்கிடும் கவிகளில் பூக்களும் கலந்திடும்
புலம்பெயர் மண்ணில் புதுமையாய்ப் பூத்தன.
புனிதம் மனிதம் அழிந்த புகைப்பூ பல
மலர்கின்ற பூக்களில் அன்பு இல்லை.
அது மறுபடியும் மலர்வதற்கு பண்பு வேண்டும்.
அழைக்கின்ற பூக்களில் அணைப்பு இல்லை.
அகந்தை மிதமாக வெறுப்பு மிஞ்சும்.
சி£¤க்கின்ற பூக்களில் சிலிர்ப்பு இல்லை.
சிநேகம் இல்லா உலகில் சினப்பு மட்டும்.
இனிப்பு இந்த மண்ணில் இல்லை.
நாம் ஈழம் சென்று தேடுவோமா?
காகிதப்பூக்கள்
என் மனத்தடாகத்தில் மகிழ்ச்சிப் பூக்கள்
பூத்ததொரு காலம்.
இன்று மௌனத்தில் கழியும் மயான அமைதியில்
வாசனை நிறைத்து வண்ணக் கனவினில் மிதந்து
வசந்தத்தின் வாசலில் சுகந்தமாய் வீசிய நாட்கள்....
இன்று விழிகளை நனைக்கின்றன.
சீதனம் என்னும் சோதனைப் பாதையில் வேதனை வந்தது.
என் வசந்தம் வெற்றிடம் ஆனது.
காகிதப் பூவாய் கல்லறைக்கும் உதவாமல் நான்...