Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: சித்திரை 28, 2012 [ வார இதழ் ]
இன்றுவரை :: 607 கவிஞர்கள் , 2624 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபள்ளி மணியோசை
ப.பார்த்தசாரதி
red pointஎன்னை போல.. சிகரெட்டை.. பேர்ல மட்டும்
சத்யா
red pointஅந்த மழைநாளில் .. உன் பெயரை
அ. ஜெயபால்
red pointகருவறை.. தலைமுடி
வசிகரன்.க
red pointவாழ்க்கை எதார்த்தம்
ராசை நேத்திரன்
red pointகால்சட்டையின்.. இன்றைய சுடுகாடொன்றில்
வித்யாசாகர்
red pointபாம்புகள் குளிக்கும்.. கடலும் கடவுளும்
ஈழநிலா, இலங்கை
red pointநிலவில்..ஏன்?.. கறுப்புப் பணம்.
முத்து ரத்தினம்
red pointகுழந்தைச் செல்வங்கள்
வேதா. இலங்காதிலகம்
red pointநாடோடிகள் தொலைத்த வரைபடம்
குருசு.சாக்ரடீஸ்
red pointகாதல் கீதம்..நீலக் கடலின்.. தேவனின் தேவை
சின்னு (சிவப்பிரகாசம்)
red pointஇலக்கணம்.. விடியல் காணாத விழிகள்
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointசைக்கிளும் சிறுவனும்
ஆஷிகா கொழும்பு
red pointசுதந்திரம்.. புறக்கணிப்பு..
மன்னார் அமுதன்
red pointஉழைப்பாளர்.. தாயென்பேன்.. எப்படி?
முனைவென்றி நா சுரேஷ்குமார்
red pointசிரிப்பதும்.. வேண்டும்,, மழை நின்ற
கிரிகாசன்
red pointகண்களை மூடும் காட்சிகள்
தீபிகா
red pointஎன்ன கண்டாய்?
ரௌத்திரன்
விமர்சனங்கள்
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
red pointகவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2012-01-25 
picture for poem
இவை..வருங்காலம் இப்படியும்...
ஜே.ஜுனைட், இலங்கை
  இவரின் பிற கவிதைகள்
 
இவை.. வருங்காலம் இப்படியும் சிந்திக்கலாம்..!
01.
இவை...
-------------

காலத்தால் மாறாத
பக்கங்கள்…
ஆனால் வேதமல்ல…

இதயவுச்சி
கொண்டெழுதிய
அச்சரங்கள்…

அகாலமாய்
மரணமடையும்
மௌனங்கள்…

உயிர்த் திட்டுக்களில்
திடீரென வெடித்த
அசரீரிகள்…

வானத்து நிர்வாணங்களை
மூடி மூடி வைத்த மேகங்கள்
கலைந்த போது ஏற்பட்ட
கார்ப்பெயல்கள்…

பனித்துளிகளை
கௌவிக் கொண்டோடிய
சூர்யோதயங்களின்
புன்முறுவல்கள்…

நறுமண புஷ்பங்களை
காயப்படுத்தாமல்
மிதமாய் வீசிய
இளந்தென்றல்கள்…



02.
வருங்காலம் இப்படியும் சிந்திக்கலாம்..!
------------------------------------------
(சுனாமி ஞாபகார்த்தமாக)

அதோ –
வெகு தூரத்தில்…
யாரும் வாழ்ந்திராத
தரைகளாக…

முருகைக் கற்பாறைகள்
ஏதோ ஜெபிக்கின்றன…
கள்ளிச் செடிகள்
ஏதோ கதை சொல்கின்றன…

கடற்கரை மணலில்
ஏதேதோ கால் தடங்கள்
கண்டு பிடிக்கப் படாமல்
உக்கிய என்புத் துண்டுகள்..

8.31ல் நின்றுவிட்ட
கடிகாரங்கள்…
என்றோ பசுமை பேசி
பாழடைந்த கிராமங்கள்…
இன்னும் கண்ணீர் விடுகின்ற
சுறாமீன் முட்கள்…
இன்னமும் மூச்சுவிடும்
கடல் நீர்த்துளிகள்…

எல்லாமே
என்ன மாயைகள்…?
சென்ற தலைமுறையின்
சரித்திரத்தைப்
புரட்டிப் பார்ப்போம்
வா…


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2011 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்