Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஐப்பசி 04, 2014 [ வார இதழ் ]
இன்றுவரை :: 659 கவிஞர்கள் , 2797 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபல்லி
ஆதி பார்த்தீபன்
red pointவிசித்திரச் சித்திரங்கள்..முற்றாத பயணம்
ஏகாந்தன்
red pointபனி காலத்து..அநாதரவாய்..ஆலோசனை
ஜே.பிரோஸ்கான்
red pointகாவல்காரன்
எம்ஸீயே.பரீத்
red pointஅவன் பயணம்
மனோகர் ஞானா, பஹ்ரைன்
red pointஅவலம் நிரம்பிய கதை.. போராளி
கேயெல்.நப்லா (நப்லி)
red pointஎங்கே போகிறது?.. பனி விளையாட்டு
வேதா. இலங்காதிலகம்
red pointதிலீபன்
கசுன் மஹேந்திர ஹீனடிகல
red pointநுழைதல்.. விலகல்.. தெளிதல்..மலை
எம்.ரிஷான் ஷெரீப்
red pointபூக்கள் முளைத்த பாதைகள்
அரிஷ்டநேமி
red pointஅன்பின் சக்தி
இரா.சி.சுந்தரமயில்
red pointஅவர்கள் வீட்டுக்கு.. மில்லியன் மக்கள்
மாயா ஏஞ்சலோ
red pointகல்லாகிப்.. கூடு விட்டு.. பனிக் கண்கள்!
அல் அமீனுல் தஸ்னீன்
red pointஆசை அடக்கி
நாகினி
red point‘ரிஸானா’.. சபிப்பு.. முறிவு
நவஜோதி ஜோகரட்னம்
red pointவாழ்க்கை.. துப்பாக்கிகள்.. வாழை குலை
முல்லை அமுதன்
red pointஉயிரிசை
ரவி (சுவிஸ்)
red pointகடவுளாக.. தன்னை தான்..உடல் பெரிது
வித்யாசாகர்
விமர்சனங்கள்
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
red pointகவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2012-03-09 
picture for poem
எந்திரசாலிகள்
அருணன்
  இவரின் பிற கவிதைகள்
 
எந்திரசாலிகள்
---------------------

எல்லாருக்கும் வாய்க்கிறது உறக்கம்
கடிகாரத்தைப் போன்றவர்கள்
என்ன செய்ய?
சுற்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

வெயிலின் நிழலில்
இளைப்பாறிக் கொள்ளவும்
மழையில் குளித்துக் கொள்ளவும்
அவர்களுக்கு நேரம் கிடைத்து விடுகிறது

பசியைத் தின்று
வியர்வை அருந்தி
காதுகளின் வாயிலாக
ஏப்பம் விட்டுக் கொள்கிறார்கள்.

புகையில் மூச்சும்
திராவகத்தில் அமுதும்
அருந்தக் கற்றவர்கள்

மனிதர்களை விடவும்
கருவிகளை மட்டுமே
கடவுள்களுக்கு இணையாய்
நம்புகிறவர்கள் நல்லவர்கள்

உயிர்கள் எல்லாம்
பதுமைகளாய் மாற
பதுமைகளை உயிர்ப்பாய்
இயங்கச் செய்யும்
எந்திரசாலிகள்

கூண்டுக்குள் அகப்பட்டவர்கள்
கூடுகட்டத் தெரியாதவர்கள்
கட்டுக் கட்டாய்ப் பணத்தில்
கரையானாய் வசிப்பவர்கள்

பொழுதுகளைக் கடத்தி
போகத்தில் ஆழ்ந்து
யோகமெல்லாம் கனவேபோல
தூக்கமின்றிக் கிடப்பவர்கள்

மொழியோ உணர்வோ
மனிதருக்குள்ள மற்றவைகளோ
சற்றும் இல்லாத
விசித்திரப் பிராணிகள்

நாளைய உலகை
இவரே ஆள்வார்
யாரோ சொல்கிறார்
உண்மையாயும் இருக்கும்......


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
© 1998 - 2014 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்