|
|
|
|
|
|
|
|
|
|
|
வனதேவதையின் போராட்டம்
-----------------------
மண்ணில் ஆழப்பதிந்த
வேர்களின் வலியுடன்
முறிந்து விழுகிறது
எங்கள் கிளைகள்.
ஒவ்வொரு பூக்களாய்
ஒவ்வொரு இலைகளாய்
தேடித் தேடி
தொடுவதில்லை காற்று
காற்று விலக்கிய
இலைகளும்
காற்றை விலக்கிய
மலர்களும்
இருப்பதில்லை எங்கள்
தோட்டத்தில்.
இலைகளைக் கிழிக்கும்
காற்றின் கைகளை
மலரிதழ்களே
முத்தமிடும் போது
மன்னிக்க முடிவதில்லை
எங்கள் மரங்களை.
எங்கள் பயணத்தில்
எப்போதும்
எங்களுக்காய்
வேர்கள் சுமக்கின்றன
முள் கிராடங்களை.
*
புயலின் போர்வையில்
காற்று நடத்திய
வன்புணர்ச்சியில்
பச்சை இலைகள்.
வரிய இருட்டில்
ஆயிரம் கைகளுடன்
கிளைகளின் கண்ணெதிரே
இலைகள் மீது வல்லாங்கு.
சருகளாய் உதிர்ந்தப் பிறகும்
தொட்டுப் பார்க்கிறது
மீண்டும் காற்று.
அதை விட்டுப் பறக்கிறது
மண்தேடி
மண்ணின் வேர்த்தேடி
இலைகள்.
*
வாயு மண்டலத்தில்
வனதேவதைகளின்
நிர்வாணப் போராட்டத்தின்
சாட்சிக் கல்லாய்
ஊர் எல்லையில்
ஆடைகள் களைந்து
உறங்கிக் கொண்டிருக்கிறது
மாசானத்து அம்மன்.
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|