ஏன் பதட்டமோ
உனக்கு
போன்பண்ணவரும்போது மட்டும்
தலை கால் புரியவில்லை
தடுமாற்றம்றின்றி
உன் நம்பர் அடிக்கிறேன்
ஒரு ரிங்கில் நீ எடுக்க
ஓராயிரம் முறை
ஊன்னிடம் வேண்டினேன்
கேட்டிருக்க வேண்டும்
எடுத்ததும் பேசவில்லை
எதிர் முனையில் - நீ
இருப்பது தெரிந்து விட்டது
முதலில் பேசியது - நம்
மூச்சு காற்றுதான்
முப்பது நிமிடம் ஆகியிருக்கும்
முடிவாய் நாம் பேசியது
நேரமாச்சு
வைக்கட்டுமா போனை.