காலம் பரிசளித்திருக்கிறது
உன் அன்பை அள்ளி
என் உயிரெங்கும் பூசிக்கொள்கிறேன்
உன் புன்னகை
என் உடலாகிறது
பசிபோக்குகிறாய்
குழந்தைபோல
பாவணைகளால் - ஒரே
தலையனையில் தூக்கம்
முகங்கள் மட்டும் வேறு வேறு திசைகளில்
தூக்கம் மீறிய நட்பு விழிசேர்கிறது
உன் கூந்தலிலிருந்து
பூக்கள் உதிர்கின்றன
உதிரும் பூக்களை
நுகர்ந்து கொண்டே சேகரிக்கிறேன்
பூக்களின் தாயாய் - என்னை
ஆசிர்வதிக்கிறாய்
விலகும் இமைகளிலிருந்து
வாழ்க்கை யதார்தமாகிறது
எத்தனையோ இயலாமைகளுக்கு முன்
அரவணைத்து விட்டு போகிறது
உன் விசாரிப்பு...