எதையோ யோசித்து
அடித்து
கிறுக்கி
அழகாய்
ஒவ்வொரு முறை
எழுதிய பின்பும்
பலமுறை
படித்துப் பார்ப்பேன்
மீண்டும்
படிக்கத் தோன்றும்
அடுத்தடுத்து
நான்
எழுதும் வரை
மீண்டும்....
கவிஆக்கம்: பாண்டித்துரை
தொடர்புக்கு:006597345497
இரவின் திருட்டு
கவிஆக்கம்: பாண்டித்துரை
தூங்கப் பிடிக்காமல்
புரண்டு புரண்டு படுக்கும்போது
ஏதோதோ சிந்தனைகள்
எதும் ஞாபகத்தில் இல்லாமல்
நான் தான் சொன்னேன்ல
ச்சீ போடா
உளறலுடன்
எனையறியாமல்
எப்போழுது தூங்குவேனோ
காலையில் விழித்ததும்
கண்களில் இரத்தமாய்...