ஓவ்வொரு
காலகட்டத்திலும் - என்
ஏதிர்பார்ப்புகள்
மறுதலிக்கப்படுகின்றன
எதிர்பார்ப்பு இல்லாமல்
நான் நானாக
இருக்க முயல்கிறேன்
உள்ளுணர்வு
அவற்றையெல்லாம் உதாசினப்படுத்திவிடுகிறது
நான் நிஜமென
நம்பியதெல்லாம்
என்னை விட்டு
விலகும் போது
மாய உலகத்தில்
உலவும் பிம்பமாய்
நான்...
கவி ஆக்கம் பாண்டித்துரை
*****************
மௌனம்
கவி ஆக்கம் பாண்டித்துரை
யாருமற்ற வெளி
பார்த்துக் கொண்டிருக்கும்
நிசப்தம்!
பேசத்துடிக்கும் வாய்
நிலைகுத்திய
விழிகளுடன்
தனிமை
தகர்ந்திடும் போது
ஏதோ நிகழ்வதாய்
மௌனம் எனக்கு
பயத்தையே தருகிறது