ஒவ்வொரு முறை
அவள் அனிச்சையாய்
திரும்பும் போது
என்னை நோக்கியோ?
எண்ணிக் கொண்டு
சிறு புன்முறுவலை
சொல்லத் தெரியாமல்
சொதப்பிக் கொண்டு
ஊடுறுவும் என் பார்வை
எனக்குள்ளே காதலாகிறது
கல்லூரி நாட்களை
கடத்தும் வரை!
எழுத்து: நீ “தீ”
தொடர்புக்கு:006582377006
இடைவெளி...
வாரமொருமுறை
காகித மடலாக
நினைக்கும் போதெல்லாம்
தொலைபேசி அழைப்புகள்
நிமிடத்திற்கு ஒரு
குருந்தகவல்
உறவுமுறை ஜனங்களின்
விசனப்பட்ட விசாரிப்புகள்
பார்க்கும் இடம் எல்லாம்
தோன்றி மறையும்
காட்சிப் பிம்பங்கள்
இரவின் து£க்கத்தில்
புன்னகை முனகலாக
அசைபோடும் மனது
இதயத்தில் பாரமாய்
இடைவெளியின் சுகம்