|
|
|
|
|
|
|
|
|
|
|
தேடியதை நாடியதும்
-சக்தி சக்திதாசன்
தேடியதை நாடியதும்
தேவைகள் மறைந்ததுவோ
தோல்விகளின் வலிகள்
தொலைது£ரம் போனதுவோ
பயணத்தின் முடிவிலே
பாதங்கள் தேய்ந்ததும்
பயணத்தின் நோக்கமே
பலனற்றுப் போனதுவோ
வாழ்க்கையெனும் தோட்டத்தில்
வாடாத மலரென்று
வளர்த்து வந்த செடியொன்று
முள் தந்த கதையிதுவோ
நேற்றுவரை பூஞ்சோலை
இன்று அது தார்ச்சாலை
நாளையென்ன பாலைவனமோ
நலிந்ததந்த இதயமன்றோ
கண்களற்றோர் உலகினிலே
கண்ணீருக்கும் மனிதனவன்
கதிரவனைப் பறிகொடுத்து
பகலற்ற பலன் பெற்றான்
இல்லாததை எண்ணியேங்கி
இருப்பதையே மறந்து விட்டு
இன்பத்தை ஈடு வைத்து
இவன் பெற்ற வட்டி துன்பம்
தேடியதை நாடி நீ ஏன் தானோ
தேவைகளைத் துறந்து இங்கே
தியாகங்களின் சாம்பலிலே
நியாயங்களைத் தேடுகின்றாய்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|