செடியிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட
பூவாக சிரிக்கின்றான்.
இரவு புலர்ந்த பின்னும்
வழிநெடுக இருள் தொனிக்கிறது
கண்கள் மூடி மூடி திறந்துகொண்டு
இருள் மீது நடக்க
பெரும் அச்சம் கொள்கிறான்
வெளிச்சத்தல் நின்றுகொண்டு அவனால்
இருளை மட்டுமே யாசிக்க முடிகிறது
பகல் அவனது கனவாகிறது
ஒரு முனைப்புடன் அடியெடுத்து வைக்கிறான்
இருள் உடைய துவங்குகிறது
எங்கிருந்தோ எழும் அலறல்கள்
அவன் செல்லும் திசைகளை பயமுறுத்துகின்றன
இருந்தும்
திசைகள் விசாலமான அழைப்பை
அவன் பாதங்களில் வைக்கின்றது
அவன் ஆரவாரங்கள் திரண்டு தீப்பந்தமாகின்றான்
தகிக்கும் இரவுக்கப்பால்
அவனது உலகத்தை துவங்கிறது
இன்னொரு வரியன்