எனை சுற்றி ஆள் அரவங்கள்
எழுந்திருக்கும் நேரம்
சூரியன் வந்தால்தான்
எல்லோரும் எழுவாங்களாமே!
நடைபாதையில்தான்
என்வீடு
எப்படியிருக்கும் என்று தெரியாது
யாரவது பேசும் சப்தம் கேட்டால்
கை தட்டை தேடுகிறது
ஆன்செய்த ரேடியோவாக
அம்மா தாயே
கண்ணுதெரியலைங்க
பிச்சைபோடுங்க
(யாருமற்ற ரோட்டில்)