Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: பங்குனி 14, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 472 கவிஞர்கள் , 2115 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointஎனது மண்ணும் எனது வீடும்.. கடன்
நடராஜா முரளிதரன், கனடா
red pointகீதையும் காதலும்... காதல்
ப.மதியழகன்
red pointபுதுமை பெண்
சின்னு (சிவப்பிரகாசம்)
red pointசாக்கடை
ஜெஸ்வந்தி
red pointஅரங்கேற்றம்
ரி. ராஜகோபாலன்
red pointஇன்னும் கொஞ்சம்!.. இன்னொரு
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
red pointபூமிப்பிளவு
காவிரிக்கரையோன்
red pointமாறாப்பில்லா .. இருக்கின்றான்
வல்வை சுஜேன்
red pointதலைப்பில்லாத என் கவிதை
நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
red pointஒன்றான மழலையும் முதுமையும்
காயத்ரி மாதவன்
red pointஅலைவியல்...
ராம்ப்ரசாத், சென்னை
red pointபுதுமெய்.. தியாக பூமி..
பா.நேருஜி
red pointதொடுவானம்
மாவை.நா.கஜேந்திரா
red pointகளம் தேடும் விதைகள்
மன்னார் அமுதன்
red pointமுன்பொரு காலத்தில் இந்த நாள்
தீபச்செல்வன்
red pointகறையும் நல்லது
அருணன்
red pointஇதயமே இல்லாத இரத்த உறவுகள்..!!
அரசி
red pointதோல்வி இல்லை.. உலகுக்கு உணவு
இரா.இரவி
விமர்சனங்கள்
red pointஈழப்போராட்டம் ஒரு ஆயுதப்போராட்டமாக ஆரப்பிப்பதற்கு முன்பே ஈழ அரசியல் நிலையின் வரப்போகிற எழுச்சி பற்றிய முனைப்புக்களை கவிதைகளாக எழுதியிருக்கிறார்
red pointயுத்தத்தின் பிடியிலிருந்து எதிர்காலத்தைத் தொலைத்த உயிர்களின் எஞ்சிய வாழ்வினை எவ்வாறெல்லாம் யுத்தம் பாதித்திருக்கிறதெனக் கவிதையின் இறுதியில் இப்படிச் சொல்கிறார்.
red pointபோர்க்காலக் கவிதைகள் மிக அழுத்தமானவை. உயிரின் வேரில் கீறலை காயப்படுத்தும் ஆழ்ந்த துயர வரிகள்.கண்ணீரை காணிக்கையாக்கும் சோகத்தின் நிழற்படங்கள்.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-10-17 
picture for poem
எனக்கான காதல்
நீதீ
  இவரின் பிற கவிதைகள்
 
எனக்கான காதல்
எழுத்து: நீ “தீ”

அவள் வரும் பேருந்தில்
அவளின் பின் இருக்கை
எனக்கு எழுதி தரப்பட்டது
நான் இருப்பது தெரியாமல்
சத்தம் போட்டு பேசும் ரகசியங்கள்
என் காதுகளால் களவாடபடுகிறது
காற்றுக்கு பறந்து வரும்
கரு நீல கூந்தல்
கன்னத்தில் படும் போதெல்லாம்
உள் இழுக்கும் மூச்சுக்காற்றுடன்
எங்கோ பயணப்படுகிறேன்
இருவருக்கும் ஒரே நிற உடை என்றால்
எனக்கு இருபது ரூபாய் செலவு
அவளுக்கு ஜந்து ஆறு சாக்லெட்
பத்து நிமிட பயணத்தில்
கல்லூரி கட்டிடம்
அவள் கால்தடம் பிடித்து நடப்பதாலே
எனக்கு முப்பது நிமிடம்
அவளின் வகுப்பறையை
கடந்து செல்லும் போதெல்லாம்
கண்களின் துழாவலில்
அவளின் கவனமெல்லாம்
கரும்பலகை மீது
எவரிடமிருந்தாவது
செய்தி வரும்
நூலகத்தில் அவள் என்று
நூல்பிடித்து செல்வேன்
அவளுக்காக அசைவத்தை துறந்து
நான்கு மணி பேருந்தை துறந்து
அடுத்த பெண்களை பார்பதை மறந்து
துறவறம் மேற்கொண்டேன்
துறவி என்று
தெரிந்து விட்டதோ அவளுக்கு!
அதிகமாய் அவளிடம்
அளவளாடிய என் நண்பன்
அடிமைப்பட்டு விட்டான்
என்னை தனிமைப்படுத்திவிட்டு
கருப்புக்கும் வெள்ளைக்கும்
காதல் என்று
இலை மறையாய் வந்து விழும்
இருவரும் விரும்பும் செய்தி
நான் கேட்காமலேயே
நண்பர்களிடம் சொல்லியதாய்
நான் கேட்ட செய்தி
எனக்காக தூது போனானாம்
வெற்றி அவனுக்கே!!!
என் துன்பம் அறியாமலே
என் எதிரே பேசி சிரிப்பர்
என்னை சங்கடப்படுத்திய
அவரிருவரின் சந்தோச துள்ளலால்
(இன்று) சாதித்தது என்ன?
ஒதுக்கபட்டதாய் உணர தொடங்கினேன்
அவளுக்காக
அலைந்த நாட்களை..
அழுத நாட்களை எண்ணிக்கொண்டு
இறுதி ஆண்டுகளில்
அவளில்லா பேருந்துகளில் நான்!
இன்னமும் கீறலாய்
என் மனதில்.

எழுத்து: நீ “தீ”
தொடர்புக்கு:006582377006



கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்