|
|
|
|
|
|
|
|
|
|
|
பாண்டித்துரை கவிதைகள்
1. காலையின் அவசரத்தில்
யார் யாரோ
பயணப்படுகிறார்கள்
அவர்களுக்கான
இடத்தை அறிந்திருந்தும்
2. இமைகளைத் திறக்கிறேன்
வெளிச்சப் பிரவாகம்
முழுமையாக ஆக்கிரமிக்கிறது
என் கண்களிலிருந்து ஆரம்பமாகிறது
எனக்கான விடியல்!
3.நீ கூட
என்னை புறக்கணித்து
செல்கிறாய்...
ரொட்டித்துண்டுக்கு
ஆசைப்பட்டு.
4.சில நேரங்களில்
யாருக்காகவும் என்னை
விட்டுத்தர விரும்புவதில்லை
என் தனிமையையும்
அதன் மீதான அழுகையையும்
இரவிற்கு அப்பாலும்...
5.மௌனமான நானும்
மௌனமான நீயும்
மௌனித்ததாலே...
உனதான திருமணமும்
எனதான திருமணமும்
சொல்லிக் கொள்ளாமல்
நடந்தேறியது
6.புத்தகத்தின் பக்கத்தை
புரட்டிக்கொண்டு
திண்ணையில் முதியவர்.
கீரிச்சிடும் கேட்டின்
ஒலியையும் கடந்து...
7.கையேந்தும்
சிறுமியைக் கடந்து
சாலை ஓரம் நடந்து
கொண்டிருக்கிறேன்...
எதிர்காலம் பற்றிய
கனவுகளுடன்.
8.ஒவ்வொருமுறை
எழும் போதும்
இட்டுக்கொள்கிறேன்
வலியுடன் தொடர்கிறது
என் பயணம்.
பாண்டித்துரை
pandiidurai@yahoo.com
கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
|
|
சேமித்து வைக்க
உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
|
|