Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

எனக்காகவே ஓர் எறும்பு

- டீன்கபூர்

எனக்காகவே ஓர் எறும்பு

ஒரு சீனிக்கட்டியை இழுத்துச் செல்லதைப்போல
என்னை லாவகமாகப் பிடித்துச் செல்கிறது
ஓர் எறும்பு
என் செவிகள் இழுக்கப்பட்டு
தலையில்; ஒரு குட்டும் போட்டு அழைத்துச்செல்கிறது.
தலைமையிடம் நான்; தவறாகப் பேசப்படுகிறேன்.

எனது ஒவ்வொரு அங்கங்களும் எறும்பின்
கோர நகங்களால் கிழிக்கப்பட்டு
துண்டுகளாக்கப்பட்டு
இனங்காண இயலாத ஒரு நிலத்தின் துளைக்குள்
அடக்கப்படுகின்றன.

தலைமை துவைத்தெடுத்த என் பாசம்
அவர் மேசையின் மீது
ஒரு மொட்டைக் கடிதமாக அல்லது
சுவர்களின் பூச்சுக்களில் பேசப்படுகின்றன.

மானம் என்பது உயிர்; இருக்கும்வரை தான்
அழகிய கனவு இயற்கையாக அடுக்கப்படும்வரை தான்
வெளிச்சம் இருளுக்காகவே என்பதை
எறும்புகளும் மறந்தே விட்டன.

எலியின் மரண வேதனை பூனைக்கு
எங்கு தெரியப்போகிறது?
அதுக்கு விளையாட்டு
எனக்காகவே ஓர் எறும்பு படைக்கப்பட்டிருக்கிறது.
தினமும் நான் இழுத்துச் செல்லப்படுகிறேன்.
கொல்லப்படுகிறேன்.

ஒரு மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வரை.


-- டீன்கபூர்
deengaffoor7@ yahoo.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-20


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • எனது பாத்திரம் இதுவாகி
  • நான் திறந்துவிடப்பட்ட சாளரம்
  • கனவின் துண்டு
  • குளிர்ச்சியின் காதல்... மரங்கொத்தி...
  • ஒட்டிக்கிழங்குக்காரி
  • அந்தி வேளை... கள்ளன்...
  • எங்கே என்... கலர்ப் பாம்பு...
  • தேர்தலில் குதியாத வேட்பாளனாக
  • நினைவும் இன்னொன்றும்
  • நிலத்துண்டு..ஒவ்வொரு.. காற்று..புதிய பூ
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube