Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

புரிந்தது புரியாமல் போனது

- க.அருணபாரதி

புரிந்தது புரியாமல் போனது
--------------------------------

தேர்வுக்காக படிக்க
விடுமுறை விட்டார்கள்
கல்லூரியில்...

வீட்டிற்கு செல்லாமல்
விடுதியிலேயே நீயிருந்ததால்
நானும் கல்லூரியிலேயே
தங்கினேன்
படிப்பதற்காக(?!)

மனதில் மட்டுமல்லாமல்
வெளியிலும்
மழைக்காலம் என்பதால்
பகலிலும் இருட்டாக
சுருங்கிக் கிடந்தது
வானம்

அந்த வானத்தின்
நிழற்குடையில்
தேர்வுக்கு படிக்க
வந்தாள்
என் தேவதை...

யாருமில்லா
வகுப்பறையில்
புத்தகப் பக்கங்களை விட
அவள் புன்னகை
பக்கங்கங்ளைத் தான்
அதிகம் படிக்கமுடிந்தது..

புரியாத பாடங்களுக்கு
என்னிடம் விளக்கங்கள்
கேட்டாள் அவள்..
விளக்கிய பின்
புரிந்ததாக சொன்னாள்..

அதுவரை புரிந்துவந்த
எல்லாபாடங்களும்
கல்லூரிபாடம் உட்பட
புரியாமல் போயின
எனக்கு
அவள் விளக்கம் கேட்டத்
தருணத்திலிருந்து....


-க.அருணபாரதி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-02


m.nazeera

18 years 5 months ago

நஸீரா வருடம் 3 முகாமைத்துவ பீடம் தென்கிலக்கு பல்கலைக் கழகம் உங்களுடைய கவிதை வரிகள் மிகவும் எளிமையான முறையில் வரையப்பட்டுள்ளது ஆனால் ஏதோ ஒரு விடயம் மட்டும் குறிப்பிடத் தவறியுள்ளது. உங்கள் வரியின் கருத்துக்கள் நிஜமானதா? அல்லது நிழலானதா

arunabharthi

18 years 4 months ago

தங்கள் கருத்திற்கு நன்றி நஸீரா..

கவிதை நிஜமானது தான்..

:-)

தோழமையுடன்,
க.அருணபாரதி

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • நினைவுப்பூக்கள்
  • ஒரு திருமணவிழாவில்...
  • வாழ்த்துச் சொல்லாத பிறந்தநாள்
  • நினைவுகளின் சுமை
  • பொங்க வேண்டியது எது.

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube