உன்னோடு வாழாத ...
--------------------------
என் முதல் திரை அனுபவம் ...
நடிப்பதில் அல்ல...
படம் பார்ப்பதில் !
படம் பிடித்திருந்தது...
கதைக்காக அல்ல...
என்னவருடன் ...
பார்த்ததற்காக !
படத்தில் வந்த ...
ஒரு பாட்டின் போது...
என்னவர் கூறியது !
இந்த பாட்டின் வரிகள் ...
என்னை மனதில்... அல்ல...
என் மனதில் உன்னை வைத்து ...
எழுதியது போன்று இருக்கிறது !
படத்தின் மற்றொரு பாடல்...
மிகவும் பிடித்தது...
எனக்கா அல்ல...
என்னவருக்காக...
எனக்குப் பிடித்திருந்தது !
பாடல் எங்களுக்காகவே ...
எழுதப்பட்டது போன்று...
இருந்தது !
இல்லையே !
படத்தில் நடித்தவர்கள் கூட...
இன்று இணைபிரியா ஜோடிகள் ...
வாழ்க்கையில் !
ஆனால் ...
நாங்கள் ?
-அனாமிகா பிரித்திமா
anamikapritima@yahoo.com
http://anamikapritima.blogspot.com/
http://anamikapritima.weebly.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-08-29